எது உண்மையான லிஸ்ட்....ட்விட்டர் டிரெண்டிங்கை தெறிக்க விடும் பிக்பாஸ்

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது. அப்போதே, அடுத்த சீசன் ஜுன் - ஜுலை மாதங்களில் துவங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் கொரோனா இரண்டாம் அலையால் திட்டமிட்டபடி பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பிக்க முடியவில்லை. இதே போல் கமல் தேர்தல் வேலையில் பிஸியானதால், அவர் பிக்பாஸ் அடுத்த சீசனை தொகுத்து வழங்க வருவாரா என ரசிகர்கள் சந்தேகம் கிளப்பினர்.

Bigg boss tamil 5 makes fire in twitter trending

ஜுன் மாதம் முதலே பிக்பாஸ் பற்றிய பல விதமான செய்திகள் வர துவங்கின. போட்டியாளர்கள் பட்டியல் என பல பிரபலங்களின் பெயர்களும் சொல்லப்பட்டது. இதில் பலர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து தன்னிடம் யாரும் பேசவில்லை என கூறி மறுப்பு தெரிவித்து விட்டார்கள். இன்னும் சிலர், அப்படியே பேசினால் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதாக இல்லை என ஓப்பனாக பதிலளித்தனர்.

இருந்தாலும் பிக்பாஸ் பற்றியும், போட்டியாளர்கள் பற்றியும் தொடர்ந்து பல விதமான செய்திகள் வந்து கொண்டிருந்தது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில், பிக்பாஸ் தொடர்பான ப்ரோமோக்களை வெளியிட துவங்கியது விஜய் டிவி. அதைத் தொடர்ந்து அக்டோபர் 3 ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 5 துவங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் துவங்கும் தேதி அறிவித்தார்களோ இல்லையோ, தினமும் பல விதமான ப்ரோமோக்களை வெளியிட்டு பரபரப்பை கூட்ட துவங்கியது விஜய் டிவி. இது போதாதென்று நெட்டிசன்கள் வேறு தங்கள் பங்கிற்கு பல விதங்களில் போட்டியாளர்கள் பெயர்களை பதிவிட துவங்கினர். மேலும் ட்விட்டரில் BiggBossTamil5 என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, அதை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

இதில் போட்டியாளர்கள் பட்டியல், பிக்பாஸ் சீசன் 5 வீட்டின் ஃபோட்டோக்கள் ஆகியவற்றை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் பற்றி பல விதங்களில் சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள். அதோடு ஏற்கனவே சொல்லப்பட்டவர்கள் பெயர்களை குறிப்பிட்டு, இவர்கள் போகவில்லை, அவர் இப்போது என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் என தலைசுற்றும் அளவிற்கு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

வேறு சிலர் பிக்பாஸ் சீசன் 5 தொடர்பாக மீம்ஸ் உருவாக்கி ட்விட்டர் டிரெண்டிங்கை அசர வைத்து வருகின்றனர். நிகழ்ச்சி துவங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளதால், நிகழ்ச்சி பற்றிய தங்களின் ஆர்வத்தையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X