நிரூப் பேசியதை கேட்டு கண்கலங்கிய பிரியங்கா...அப்படி என்ன சொன்னார் ?

சென்னை : பிக்பாஸில் வழக்கமாக ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தில் நடக்கும் பிரச்சனைகள், போட்டியாளர்கள் இடையே நடக்கும் மோதல்கள் பற்றி கமல் பேசி, விசாரிப்பார். ஆனால் இது இறுதி வாரம் என்பதால் ஃபைனலுக்கு செல்ல போகிறவர் யார் என்பதை அறிவித்தார் கமல்.

Recommended Video

Niroop Vera Level Strategy in BIGG BOSS TAMIL | Niroop in FINALS Top 5

வழக்கமாக எவிக்டாகி சென்ற போடட்டியாளர்கள் வீட்டிற்குள் விருந்தினர்களாக வந்து, போட்டியாளர்களின் மன அழுத்தத்தை குறைப்பார்கள். ஆனால் இந்த முறை அப்படி நடக்காததால், போட்டியாளர்களின் மனஅழுத்ததத்தை போக்கும் வகையில் கமலே டாஸ்க் கொடுத்துள்ளார்.

ஃபைனலிஸ்டான பிரியங்கா

ஃபைனலிஸ்டான பிரியங்கா

பிக்பாஸில் இன்றைய 98 வது நாளுக்கான முதல் ப்ரோமோவில் பிரியங்காவை நான்காவது ஃபைனலிஸ்ட் என அறிவித்தார் கமல். தொடர்ந்து வெளியேற போவது தாமரையா, பாவனியா என்பதை சொல்லும் சஸ்பென்ஸ் உடன் ப்ரோமோ முடிக்கப்பட்டது. இந்நிலையில் நெஞ்சை தொடும் வகையில் உருக்கமாக இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

தாமரைக்கு நன்றி சொன்ன பிரியங்கா

தாமரைக்கு நன்றி சொன்ன பிரியங்கா

இரண்டாவது ப்ரோமோவில், நீங்கள் நன்றி சொல்ல வேண்டிய ஒருவரும், சாரி சொல்ல வேண்டிய ஒருவரையும் சொல்வதற்கு ஒரு வாய்ப்பு என்கிறார் கமல். தான் தாமரைக்கு நன்றி சொல்ல விரும்புவதாகவும், அவர் பாசமுடன் சோறும் போட்டிருப்பதாக பிரியங்கா கூறினார். பதிலுக்கு தாமரை, இந்த வீட்டில் நான் இந்த புள்ளய நிறைய திட்டியிருக்கிறேன். அதற்கு பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்பதாக கூறுகிறார்.

பிரியங்காவை அழ வைத்த நிரூப்

பிரியங்காவை அழ வைத்த நிரூப்

நிரூப், பிரியங்காவின் அருகில் வந்து, மண்டியிட்டு உட்கார்ந்து, உன்னை போல் ஒரு ஃபிரண்ட் கிடைக்காதா என வாழ்க்கையில் மிகவும் ஏங்கி இருக்கிறேன் என சொல்லி பிரியங்காவை கட்டி பிடிக்கிறார். நிரூப் இப்படி மனதில் உள்ளதை பேசியதை கேட்டு, கண் கலங்குகிறார் பிரியங்கா.

பாராட்டும் ரசிகர்கள்

பாராட்டும் ரசிகர்கள்

இந்த ப்ரோமோ நெஞ்சை தொடுவதாக இருந்தாலும், போட்டியாளர்களின் மன அழுத்தங்களை நிச்சயம் போக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு டாஸ்க்கிலும் பிரியங்காவும், நிரூப்பும் பயங்கரமாக சண்டை போட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொள்வது, அந்த வார இறுதி எபிசோடில் கமல், பிரியங்காவை வறுத்தெடுப்பதும் தான் நடக்கும். ஆனால் இந்த ப்ரோமோ பார்க்கவே மிக நன்றாக உள்ளதாக பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X