பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் முதல் எலிமினேஷன் இவர் தானா? ரெட் ஸோனில் இருப்பவர்கள் யார் யார்?
சென்னை: 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 3ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 5ன் முதல் வாரத்தில் எலிமினேஷன் கடந்த முறை போல நடைபெறவில்லை என்றாலும், வீட்டில் இருந்து நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணமாக (அப்படின்னு சொல்றாங்க) அவராகவே வெளியேறி விட்டார்.
இந்த வாரத்திற்கான எவிக்ஷன் படலம் நேற்று சிறப்பாக பிக் பாஸ் கொளுத்திப் போட அட்டகாசமாக அரங்கேறியது.
இதில், மக்களின் வாக்குகளை குறைவாக பெற்று யார் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து இங்கே அலசுவோம்.

இத்தனை பேரா
இசைவாணி, சுருதி, அக்ஷரா, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, அபிஷேக் ராஜா, சின்னப் பொண்ணு, மதுமிதா, நதியா சங், வருண், நிரூப், சிபி, ராஜு ஜெயமோகன், அபினய், ஐக்கி பெர்ரி என மொத்தம் 15 பேர் இந்த வாரம் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். தலைவியானதால் தாமரை செல்வியும் மற்றவர்களின் குட் புக்கில் இடம்பெற்றதால் பாவனி ரெட்டியும் நாமினேட் ஆகவில்லை.

இசைவாணிக்கு எதிராக
கானா பாடகி இசைவாணி ஏகப்பட்ட தடைகளை கடந்து வந்தாலும், பிக் பாஸ் வீட்டிலும் அவர் பல தடைகளை சந்திக்க நேரிடும் என்றே தெரிகிறது. இசைவாணி பாடுவதால் நான் பாடுறதையே நிறுத்திட்டேன்னு சின்னப் பொண்ணு சொல்லுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், 6 பேர் இசைவாணிக்கு எதிராக ஓட்டுப் போட்டு அவரை வெளியேற்ற துடிக்கின்றனர். கடந்த சீசனில் அதிகமானோர் வெளியேற்ற நினைத்த ஆரி தான் வின்னர் ஆனார் என்பது வரலாறு. இந்த சீசனில் நிச்சயம் இந்த வாரம் இசைவாணி வெளியேற மாட்டார் என்றே தெரிகிறது.

அதிக வாக்குகள் யாருக்கு கிடைக்கும்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஸ்ட்ராங் போட்டியாளர்களாக பார்க்கப்படும் பிரியங்கா, நிரூப், இசைவாணி, ராஜு ஜெயமோகன் உள்ளிட்ட போட்டியாளர்கள் அதிக வாக்குகளை பெற்று ஆரம்பத்திலேயே சேவ் செய்யப்படுவார்கள் என்றே தெரிகிறது. மேலும், வருண், அபினய், சுருதி, அக்ஷரா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் காப்பாற்றப்படுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டேஞ்சர் ஸோனில்
இந்த 15 பேரையுமே எலிமினேட் செய்து புதுசா ஆட்களை போடுங்க என்று ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சொல்ல ஆரம்பித்து விட்டனர். ஆனால், இப்போதைக்கு இருப்பவர்களில் டேஞ்சர் ஸோனில் இருப்பவர்கள் என்று பார்த்தால் அபிஷேக் ராஜா, ஐக்கி பெர்ரி, மதுமிதா, சின்னப் பொண்ணு, நதியா சங் உள்ளிட்ட போட்டியாளர்கள் தான் என நெட்டிசன்களால் கணிக்கப்பட்டு வருகிறது.

யார் வெளியேறுவார்
மக்களிடம் அதிகம் வரவேற்பு இல்லாத போட்டியாளர்களுக்கு வாக்குகள் நிச்சயம் குறையும். இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு ஆர்வமுடன் மக்கள் வாக்கு அளிப்பார்களா? இல்லையா? என்றே தெரியவில்லை. இப்போதைக்கு இருப்பதில் வீட்டிலேயே அதிக ஆக்டிவ் இல்லாமல் இருப்பவர் மற்றும் மக்களின் வரவேற்பை அதிகம் பெறாத நதியா சங் முதல் நபராக வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இவரும் எலிமினேட் ஆகலாம்
கடந்த சீசனில் மக்களிடம் பிரபலமான நடிகை ரேகா முதல் நபராக வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த சீசனிலும் நிர்வாகம் வயதானவரை வெளியேற்ற நினைத்தால் சின்னப் பொண்ணு இந்த சீசனில் இருந்து முதல் நபராக எலிமினேட் செய்யப்படவும் சான்ஸ் இருக்கு. மேலும், ஐக்கி பெர்ரி மற்றும் மதுமிதா உள்ளிட்டோருக்கும் வாக்குகள் வருவது கஷ்டம் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











