ஸ்லீவ்லெஸ் உடையில் திணறவிட்ட பிக் பாஸ் சுருதி.. அவரோட கழுத்தில் இருக்கும் செயினை கவனிச்சீங்களா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கி இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது.

மாடல் அழகியான சுருதியின் கதையை கேட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ரேம்ப்வாக் செய்து அசத்திய சுருதி நேற்றைய எபிசோடில் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் உடை பற்றியும் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின் குறித்தும் தான் ரசிகர்கள் மத்தியில் ஒரே பேச்சாக உள்ளது.

பிக் பாஸ் சுருதி

பிக் பாஸ் சுருதி

ஸ்ருதி என தன்னை அழைக்க வேண்டாம் என்றும் தனது பெயர் சுருதி என்றும் வந்த உடனே அறிமுகம் செய்து கொண்டு தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் சுருதிக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

லட்சுமி போட்டோஷூட்

லட்சுமி போட்டோஷூட்

மகா லட்சுமி போல பொண்ணு வேண்டும் என கலர்ஃபுல்லாக இருக்கும் லட்சுமி புகைப்படத்தை ஜோசியரிடம் காட்டும் காட்சிகள் சில சினிமா படங்களிலேயே இடம்பெற்றுள்ளன. ஆனால், கடவுள் கருப்பாக இருக்கக் கூடாதா என்ற கேள்வியுடன் கருப்பு லட்சுமியாக இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படம் வேற லெவலில் வைரலானது.

அம்மாவின் திருமணம் பற்றி

அம்மாவின் திருமணம் பற்றி

தனது அம்மாவின் அப்பா வயதுடைய நபருடன் அம்மாவுக்கு நடந்த திருமணத்தால் தனது தாயும் தானும் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பதையும் சிறு வயதிலேயே தந்தை இறந்தபோது நிம்மதி அடைந்து சிரித்தேன் என்றும் அவர் சொன்னதை கேட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஸ்லீவ்லெஸ் உடை

ஸ்லீவ்லெஸ் உடை

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்தே மாடல் அழகியான சுருதி அணியும் காஸ்ட்யூம்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வர்ணித்து வரும் நிலையில், நேற்றைய எபிசோடில் அவர் அணிந்து வந்த ஸ்லீவ்லெஸ் உடையை பார்த்த பலரும் அப்படியே ஷாக் ஆகி விட்டனர். தனது கவர்ச்சியால் ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்து வருகிறார் சுருதி என்றும் மீம்கள் பறக்கின்றன.

கழுத்தை கவனிச்சீங்களா

கழுத்தை கவனிச்சீங்களா

சுருதி எனும் பெயருக்கு ஏற்றார் போல 'S' எழுத்து டாலரை பிக் பாஸ் சுருதி அணிந்திருப்பதை நேற்று அவர் போட்டிருந்த ஸ்லீவ்லெஸ் உடை பளிச்சென எடுத்துக் காட்ட ஏகப்பட்ட ரசிகர்கள் சுருதியின் கழுத்தை கவனிச்சீங்களா அவருடைய செயினை பார்த்தீங்களா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர், தமிழ் எழுத்தான 'சு' எழுத்தை போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

ஆர்மி ஆரம்பம்

ஆர்மி ஆரம்பம்

சுருதியின் கதையை கேட்ட அடுத்த நொடியே ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கென தனி ஆர்மியை உருவாக்கி விட்டனர். எவிக்‌ஷனுக்கு சுருதியும் நாமினேட் ஆகியுள்ள நிலையில், எத்தனை ரசிகர்கள் இவருக்கு வாக்களித்து இவரை எப்படி சேவ் செய்கின்றனர் என்பதை இந்த வார இறுதியில் கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X