இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருப்பது யார் தெரியுமா? ஒருவேளை பணப்பெட்டியை அவங்க எடுத்துட்டா சேஃப்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடம் கடைசி இடத்தில் இருப்பது யார் என்கிற அன் அஃபிஷியல் பட்டியல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த வாரம் டாப் 3ல் நிரூப் இருந்த இடத்தில் தற்போது சிபி அந்த இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டேஞ்சர் ஜோனில் யார் இருக்கிறார். இந்த வாரம் பணப்பெட்டியை தூக்காமல் இருந்தார் யார் எவிக்ட் ஆவார் என்கிற ஒட்டுமொத்த கணிப்புகளையும் இங்கே பார்ப்போம்.

டாப்புக்கு வந்த சிபி

டாப்புக்கு வந்த சிபி

கடந்த வாரம் நிரூப் இருந்த 3வது இடத்தில் தற்போது சிபி பிடித்துள்ளார். தைரியமாக தொடர்ந்து தனது கருத்துக்களை யாருக்குமே பயப்படாமல் வைத்து வருவது மட்டுமின்றி நிரூப்பை எந்தளவுக்கு பயந்தவன் என சுட்டிக் காட்ட முடியுமோ? அந்த வேலையை சிறப்பாக சரியாக செய்த சிபிக்கு ஓட்டுக்கள் குவிந்து வருகின்றன. 16 சதவீத ஓட்டுக்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

4ம் இடத்தில் பாவனி

4ம் இடத்தில் பாவனி

பாவனி தான் உண்டு தன் வேலை உண்டு என ஆரம்பத்தில் இருந்ததை போலவே இன்னமும் இருப்பதால் பாவனி ஆர்மியினர் தொடர்ந்து அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். 12 சதவீதங்களுடன் பாவனி அன் அஃபிஷியல் போலிங்கில் நிரூப்புக்கும் மேல் இருப்பது சூப்பரான விஷயம் தான்.

டேஞ்சர் ஜோன்

டேஞ்சர் ஜோன்

இந்த வாரம் வெளியேறும் நிலையில், டேஞ்சர் ஜோனில் நிரூப் மற்றும் தாமரை உள்ளனர். 4ம் இடத்தில் இருந்த தாமரை நிரூப்புடன் சேர்ந்து கொண்டு பேசி பழகி பிரியங்காவை எதிர்த்து சண்டை போட்டதை பார்த்த ரசிகர்கள் தாமரையை ஒரே அடியாக கடைசி இடத்திற்கு தள்ளி விட்டனர். நிரூப், பாவனி மற்றும் தாமரை ஆகிய மூவரும் 12 சதவீதங்களிலேயே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றனர்.

வெளியேறப் போவது யார்

வெளியேறப் போவது யார்

நிரூப், பாவனி அல்லது தாமரை ஆகிய மூவரில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிரூப் அல்லது தாமரைக்கே அதிக வாய்ப்புகள் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 5th January 2022 - Promo 2 | கோடி கணக்குல வைத்தாலும் எடுக்க மாட்டேன்!!
சூட் கேஸ் தூக்கினால் சேஃப்

சூட் கேஸ் தூக்கினால் சேஃப்

நிரூப் அல்லது தாமரை யாராவது ஒருவர் பணப்பெட்டியுடன் இந்த வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினால் உண்மையிலேயே அவர்கள் பணத்துடன் வெளியேறிய கெட்டிக்காரர்கள் என்றே பாராட்டப்படுவார்கள். 3 லட்சம் பணம் குறைவாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்களா? அல்லது 5 லட்சம் ரூபாய் வந்தவுடன் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்களா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X