Don't Miss!
- News
ஸ்டாலின் தேசியத் தலைவர் ஆகிவிட்டார்! டெல்லிக்கு போனதே 2 முறை தான்! துரைமுருகன் 'பளிச்'!
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
Bigg Boss Tamil 6: அப்புறம் என்னப்பா ஷிவின் தான் டைட்டில் வின்னர்னு சொல்லிடலாமா? ஃபர்ஸ்ட் சேவ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரு வாரங்களுடன் நிறைவடைய உள்ளது. 90 நாட்களை ஷோ வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இந்த 6வது சீசனில் டைட்டிலை ஷிவின் தான் வெல்லப் போகிறார் என இப்போதே ரசிகர்கள் கெஸ் பண்ண ஆரம்பித்து விட்டனர்.
இந்த வாரம் அதிரடியாக ஷிவின் வெளியேற்றப்பட்டதாக வதந்திகள் பரவியதுமே ஒட்டுமொத்த ரசிகர்களும் ஷாக் ஆனார்கள், ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்த வாரம் முதல் நபராக சேவ் ஆனதே ஷிவின் தான்.
விக்ரமன், கதிரவன் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு முன்னதாக ஷிவின் அதிக ஓட்டுக்களுடன் சேவ் ஆன நிலையில், இந்த சீசன் டைட்டில் வின்னர் அவர் தான் என கணிக்கப்படுகிறது.

மக்கள் போட்டியாளர் ஷிவின்
இந்த சீசனில் பொதுமக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என ராஜு பாயை வைத்து விளம்பரம் வெளியானது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முறையிட்டனர். அதில், தனலட்சுமி மற்றும் ஷிவின் இருவரும் தான் தேர்வானார்கள். இருவரும் இந்த ஷோவை ஆரம்பத்தில் இருந்தே பட்டாசாக விளையாடினர்.

தனிச்சலுகை இல்லை
ஷிவினுக்கு எந்தவொரு தனிச்சலுகையும் இல்லை என அசீமுக்கு புரியும் படி கமல்ஹாசனும் சொல்லி விட்டார். அப்போதே, தனிச்சலுகையும் தேவையில்லை என ஷிவின் பேசியதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் சகோதரியாகவே மாறி உள்ளார் ஷிவின்.

ஃபர்ஸ்ட் சேவ்
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை எபிசோடிலேயே முதல் நபராக சேவ் ஆனது ஷிவின் தான். அதிக ஓட்டுக்களை அள்ளக் கூடிய நபர்களே பிக் பாஸ் வீட்டில் வார வாரம் முதல் நபராக சேவ் ஆகி வருகின்றனர். தொடர்ந்து விக்ரமன் லேட்டாக சேவ் ஆகி வரும் நிலையில், இந்த சீசனில் விக்ரமனை முந்தி விட்டார் ஷிவின் என்றே தெரிகிறது.

டைட்டில் வின்னர் ஷிவின்
இதன்மூலம் பிக் பாஸ் தமிழ் 6 சீசனின் டைட்டிலை ஷிவின் தான் வெல்வார் என்பது இதன் மூலம் கன்ஃபார்ம் ஆகி உள்ளதாக பிக் பாஸ் ரசிகர்கள் இப்பவே கமெண்ட் போட ஆரம்பித்து விட்டனர். விக்ரமன் மற்றும் அசீம் குறைவான ஓட்டுக்களுடன் சேவ் ஆகும் இடங்கள் பின்னுக்குத்தள்ளப்பட்ட நிலையில், ஷிவின் மற்றும் விக்ரமன் கமலுடன் மேடை ஏறுவார்கள் என்றும் ஷிவின் கையை உயர்த்தி கமல்ஹாசன் டைட்டில் வின்னராக அவரை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 2 வாரங்களில் உண்மை தெரிந்து விடும்.

கமல் கொடுத்த சிக்னல்
விக்ரமனை விட்டுவிட்டு ஷிவின் நீங்க சொல்லுங்க என கமல் பேசியது மற்றும் அசீமின் வாயை அடக்கும் அளவுக்கு ஷிவினுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கவில்லை என்றும் அவர் தனது சொந்த விளையாட்டு திறனால் இதுவரை வந்து சாதித்துள்ளார் என கமல் ஷிவினை பாராட்டி பேசியதில் இருந்தே ஷிவின் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்பதும் கன்ஃபார்ம் ஆகி விட்டது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.