என் அண்ணனுக்கு ஓட்டுப் போடுங்க ப்ளீஸ்.. பிக் பாஸ் மணிகண்டனுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் கோரிக்கை!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் மணிகண்டன் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அவருக்காக அவரது தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுக் கேட்டு போட்ட ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

எங்க அண்ணன்.. எங்க அண்ணன் என சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் அவர் பாடி ஆடவில்லை. உண்மையிலேயே அண்ணன் மேல் ஐஸுக்கு இவ்வளவு பாசமா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படியொரு ட்வீட் போடுவீங்கன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என பிக் பாஸ் மணிகண்டன் ரசிகர்களே வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

மணிகண்டன் மாறிட்டான்

மணிகண்டன் மாறிட்டான்

பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற பிறகு என் அண்ணன் மணிகண்டனே டோட்டலா மாறிட்டான். அவன் வீட்டுல இப்படி இல்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் மணிகண்டன் கோபப்பட்டு கத்திய நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், அண்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

நாமினேஷனில் மணி

நாமினேஷனில் மணி

ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் நைஸாக தப்பித்து வரும் மணிகண்டன் இந்த வாரம் நாமினேஷனில் மாட்டிக் கொண்டார். பிக் பாஸ் வீட்டில் மணிகண்டன் பெரிதாக கேம் ஆடவில்லை என்றும் கத்துவதை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் ரசிகர்கல் ட்ரோல் செய்து வந்தாலும், அவருக்கு ஆதரவான ரசிகர்களும் உள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கோரிக்கை

ஐஸ்வர்யா ராஜேஷ் கோரிக்கை

எங்க அண்ணனுக்கு ஓட்டுப் போட்டு இந்த வாரம் அவரை காப்பாத்துங்க ப்ளீஸ் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட் போட்டு இருப்பது பிக் பாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையே இப்படி ஓட்டு கேட்டால் அது இன்ஃப்ளூயன்ஸ் ஆகாதா? என்றும் மணிகண்டன் அவரது ஆட்டத் திறமையால் ஜெயிக்கட்டும், நீங்க ஓட்டுக் கேட்டா ரசிகர்கள் உடனடியாக போட்டு விடுவார்கள் என ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

டேஞ்சர் ஜோனில் மணி

டேஞ்சர் ஜோனில் மணி

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வழக்கம் போல அசீம், கதிரவன், தனலட்சுமி இடம்பெற்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், ராம் மற்றும் மணிகண்டன் நாமினேஷனில் சிக்கி உள்ளனர். இதில், ராபர்ட் மாஸ்டர், ராம் மற்றும் மணிகண்டன் டேஞ்சர் ஜோனில் உள்ள நிலையில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அண்ணனை எப்படியாவது இந்த வாரம் காப்பாற்ற வேண்டும் என இப்படியொரு ட்வீட் போட்டுள்ளார்.

விஜய் டிவியும் காப்பாத்துது

விஜய் டிவியும் காப்பாத்துது

ஏற்கனவே 2 முறை மணிகண்டனை கேப்டனாக்கி விஜய் டிவியும் ஒரு பக்கம் காப்பாற்றி வருகிறது. அப்படியே ஃபைனல்ஸ் வரை அழைத்துச் சென்று டைட்டில் வின்னர் கோப்பையும் கொடுத்துடுங்க என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். இந்த வாரம் மிஸ் ஆனாலும் வரும் வாரங்களில் மணிகண்டன் நிச்சயம் வெளியேற வேண்டும் இல்லை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கட்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மணி நிலைமை இப்படி ஆகிடுச்சே

மணி நிலைமை இப்படி ஆகிடுச்சே

உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்.. ஓட்டுப் போட்டு காப்பாற்றும் அளவுக்கு மணி நிலைமை வந்துடுச்சே என ஐஸ்வர்யா ராஜேஷின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட பிக்பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் இந்தாங்க ஓட்டுப் போட்டுவிட்டேன் என ஸ்க்ரீன்ஷாட்டுகளையும் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X