பிக் பாஸ்: குயின்ஸியிடம் அத்துமீறிய அசல் கோளார்.. நிவாஷினியிடம் நீச்சல் குளத்தில் வேறலெவல் கடலை!

சென்னை: இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட அழகான சின்ன பாப்பாக்கள் எல்லாம் இருக்கு, எதையாவது கரெக்ட் செய்து விடலாம் என்கிற நோக்கத்துடனே சுற்றுகிறாரா அசல் கோளார்? என்கிற கேள்வியை இன்றைய எபிசோடு பார்த்த பிறகு பிக் பாஸ் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே குயின்ஸி மீது ஒரு கண் வைத்து வந்த அசல் கோளார், இன்றைய ஷோவில் விக்ரமுடன் அவர் பேசும் போது அவரது கையை சீண்டியபடி செய்த செயலை ரசிகர்கள் வீடியோ க்ளிப்பாக எடுத்துப் போட்டு கண்டித்து வருகின்றனர்.

மேலும், எபிசோடு இறுதியில் சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினியிடம் நீச்சல் குளம் அருகே படுத்துக் கொண்டு கடலை போட்ட காட்சிகள் பிக் பாஸ் ரசிகர்களின் முகங்களை சுழிக்க வைத்து விட்டதாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஆசை கோளாறு

ஆசை கோளாறு

பிக் பாஸ் வீட்டில் இதற்கு முன்னதாக ஏகப்பட்ட காதல் கதைகளை பார்த்துள்ளோம். பக்கா டிராமாவாக வெறும் ஷோவுக்கு மட்டுமே பண்ண காதல் கதைகளையும் மருத்துவ முத்தங்களையும் கண்டு ரசித்துள்ளோம். கடந்த சீசனில் பாவனியை அமீர் துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த காதலையும் பார்த்த ரசிகர்களுக்கு இந்த சீசனில் அசல் கோளார் கொஞ்சம் ஆசை கோளாறு கொண்டவராக ஆரம்பத்திலேயே தெரிகிறார்.

குயின்ஸியிடம் அத்துமீறினாரா

குயின்ஸியிடம் அத்துமீறினாரா

விக்ரமனுக்கும் தனக்கும் உள்ள பிரச்சனையை பேசித் தீர்க்கலாம் என நினைத்து குயின்ஸி பேசிக் கொண்டிருக்கும் போது, அவரது கையை மாவு பிசைவது போல குயின்ஸிக்கு கொஞ்சம் கூட பிடிக்காத வகையில் அசல் கோளார் செய்தது ரசிகர்களை கடுப்பாக்கியது. நோ மீன்ஸ் நோ என்பது போல ஒரு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்ட பின்னர், அவள் பின்னாடி சென்று இப்படி செய்வது சரியில்லை தம்பி என நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

திட்டும் ரசிகர்கள்

திட்டும் ரசிகர்கள்

குயின்ஸியிடம் சன்டே எபிசோடில் அசல் கோளார் ஆர்வக் கோளாராக விளையாடியது சரியில்லை என்றும் குயின்ஸி கையை எடுத்து விடும் அளவுக்கு கடுப்பாகி விட்டார் என்றும் வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து அசல் கோளாரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

நிவாஷினியுடன் கடலை

நிவாஷினியுடன் கடலை

குயின்ஸி செட் ஆகவில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாரா என்னவோ தெரியவில்லை. நீச்சல் குளம் அருகே சிங்கப்பூர் மாடல் அழகியான நிவாஷினியுடன் அசல் கோளார் படுத்துக் கொண்டே போட்ட கடலையும் அதற்கு பிக் பாஸ் எடிட்டர் ஐ லவ் பிக் பாஸ் லைட் போர்டை அடிக்கடி காட்டியதும் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. எனக்கு யாருமே இல்லை என்றும், எனக்கு கேர்ள் ஃபிரெண்டே இல்லை என்றும் பச்சையாகவே பேசி நிவாஷினியை கரெக்ட் செய்ய முயற்சித்துள்ளார்.

நிவாஷினிக்கு ஓகே

நிவாஷினிக்கு ஓகே

அசல் கோளார் தன்னிடம் பேசுவது பற்றி யார் என்ன சொன்னாலும் தான் அதை கண்டு கொள்ளப் போவதில்லை என நிவாஷினி தெளிவான முடிவுடன் கூறியுள்ளார். இருவரும் அப்படியே நீச்சல் குளம் அருகே படுத்து தூக்கம் வருகிறது என தூங்கிவிட சன்டே எபிசோடை முடித்து விட்டனர். குயின்ஸி, நிவாஷினி என பெண் போட்டியாளர்கள் பின்னாடியே இந்த பையன் சுற்றுவது சரி கிடையாது என ரசிகர்கள் கமெண்ட் போட்டுத் தாக்கி வருகின்றனர். அடுத்த வாரம் என்ன என்ன கூத்தெல்லாம் நடக்கப் போகுதோ.. வெயிட் பண்ணி பார்ப்போம்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X