For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக் பாஸ்: அப்போ அண்ணான்னு கூப்ட வேண்டாம்னு சொன்ன அசீம்.. இப்போ ஜனனியிடம் எப்படி எகிறுறாரு பாருங்க!

  |

  சென்னை: யாரைப் பார்த்து லூசுன்னு சொல்ற என ஜனனியிடம் அசீம் அடிக்க வருவது போல மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக மாறி எகிறும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

  அசீம் இந்த வாரம் கேப்டனாக இருந்தாலும், அவரால் தான் வீட்டில் சண்டையே வருது, கேப்டன் அப்புறம் எப்படி அடுத்தவர் சண்டையை தடுப்பார் என விளாசி வருகின்றனர்.

  சில நாட்களுக்கு முன்னர் தான் அண்ணான்னு கூப்பிடாத அசீம்னு கூப்பிடுன்னு சொன்னவரு இப்போ அசீம்னு கூப்டக் கூடாதுன்னு எப்படி சொல்லுறாரு பாருங்க என ஏகப்பட்ட ட்ரோல்கள் 2வது ப்ரோமோவுக்கு கீழ் குவிந்து வருவதை இங்கே பார்க்கலாம் வாங்க..

   அடிதடிக்காக புதிய டாஸ்க்..பழங்குடிகள்-ஏலியன்கள்..கடும் மோதலை சந்திக்கபோகும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அடிதடிக்காக புதிய டாஸ்க்..பழங்குடிகள்-ஏலியன்கள்..கடும் மோதலை சந்திக்கபோகும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

  அசீமுக்கு ஆதங்கம்

  அசீமுக்கு ஆதங்கம்

  குயின்ஸியிடம் ஆரம்பத்திலேயே ஜோடி போட்டு டான்ஸ் ஆடலாம் என அசீம் பேசியதும், இவரு அலையிறாருன்னு ஒதுங்க ஆரம்பித்ததில் இருந்தே அவர் மீது அசீமுக்கு பெரிய காண்டு இருக்கு. சன்டே எபிசோடில் அந்த ஆதங்கத்தைத் தான் கொட்டித் தீர்த்தார். அதே போல ஜனனியும் அசீமை ஒரு ஆளாகவே மதிக்காத நிலையில், தற்போது அவர் மீது எகிறியுள்ளார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  நாமினேஷன் படுத்தும் பாடு

  நாமினேஷன் படுத்தும் பாடு

  ஜனனி இதுவரை வாயில்லா பூச்சியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த நிலையில், செந்தமிழ் பிரச்சனையில் விக்ரமனுக்கு எதிராக அசீம் கொம்பு சீவி விட்டதும் பூம்பூம் மாடு போல அசீம் பேச்சைக் கேட்டு நடந்த ஜனனி இந்த வாரம் நாமினேஷனில் வந்த நிலையில், அசீமை எதிர்த்தே சண்டை போடும் அளவுக்கு சென்று விட்டார். எல்லாம் நாமினேஷன் படுத்தும் பாடு என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

  ஒரு பானை சோற்றுக்கு

  ஒரு பானை சோற்றுக்கு

  "#Azeem to #Kamal - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. அப்படி பாத்தா அவ என்னைய லூசு என்பதால் உலகத்தில் உள்ள அனைவரையும் லூசு என்கிறார்.

  #kamal to #Vikraman நீங்க சொல்லுங்க அவங்க பண்ணினது சரியா" என அசீம், கமல் இருவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  டிரைபல்ன்னு நினைச்சாலே

  டிரைபல்ன்னு நினைச்சாலே

  லவ் டுடே படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை நடத்தி வரும் நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிரைபல் காஸ்ட்யூமில் போட்டியாளர்கள் டிரைபல் வெர்சஸ் ஏலியன் டாஸ்க் செய்து வரும் நிலையில், பிரதீப் ரங்கநாதன் உங்க ஞாபகம் தான் வருது பாஸ் என அவருக்கும் டேக் போட்டு கமெண்ட்டுகள் பறக்கின்றன.

  அசீமோட டார்கெட்

  அசீமோட டார்கெட்

  இந்த வாரம் எப்படியாவது பிக் பாஸ் வீட்டில் இருந்து குயின்ஸி அல்லது ஜனனியை வெளியே அனுப்பிவிட வேண்டும் என ஃபுல் டார்கெட் போட்டு அசீம் விளையாடி வருகிறார் என இந்த நெட்டிசன் அசீமின் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்துள்ளார்.

  ஜனனி வெளியே வரப்போறா

  ஜனனி வெளியே வரப்போறா

  "எப்போ அசீம் கிட்ட சண்டை போட ஆரம்பித்தாலும்.. அப்பவே.. ஜனனி இந்த வாரம் வெளியே.....வர போறா!" என அசீம் ஆர்மி ஜனனி மீது முழு வன்மத்தையும் கொட்ட ஆரம்பித்துள்ளனர். இந்த வாரம் தான் ஜனனி வெகுண்டு எழுந்து விட்டார். இனி எத்தனை தலை உருளப் போகுதோ தெரியல என கலாய்த்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss Tamil 6: Azeem and Janany fight at the Alien and Tribal task. Azeem thrashed Janany for saying him loose in this task and he also told, don't call me Azeem hereafter shocks fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X