Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
Bigg Boss Tamil 6: முதல் முறையா 3 நபர்களும் மேடையில்.. வீட்ல இருந்து எப்படி பறந்து வராங்க பாருங்க!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பணமூட்டை, பணப்பெட்டி, மிட் வீக் எவிக்ஷன் என ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் நடைபெற்று வந்த நிலையில், கிராண்ட் ஃபினாலேவில் மட்டும் சும்மா விட்ருவோமா என்ன என பிக் பாஸ் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
மூவரில் ஒருவர் எவிக்ட் ஆகி இருந்தால் கூட இந்நேரம் லீக் ஆகியிருக்குமே ஏன் ஆகலைன்னு எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 4வது ப்ரோமோவில் கமல் சார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து ஒட்டுமொத்தமாக 3 பேரையும் அதுவும் வேற மாதிரி கூப்பிட்டு போறாரு..
அமுதவாணனுக்கு டிரோனில் டிக்கெட் டு ஃபினாலே பறந்து வந்ததை போல இப்போ 3 இறுதி போட்டியாளர்களையும் அலேக்கா வானத்தில் கிரேன் மூலம் கொண்டு செல்லும் காட்சிகள் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளன.
பிக் பாஸ் 6 கிராண்ட் ஃபினாலே LIVE: பிக் பாஸ் சீசன் 6 வெற்றி மகுடம் சூடியது யார்?

மூவருமே வின்னர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த வீட்டில் இருந்து கடைசியாக யார் வருவார்களோ அவர்கள் தான் வின்னர் மற்றும் ரன்னர் என இருந்த நிலையில், இந்த முறை வித்தியாசமாக ஒரே நேரத்தில் 3 பேரையும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அதுவும் ஆகாய மார்க்கமாக அழைத்து வரும் காட்சிகள் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அளித்துள்ளது.

வெற்றிக் கோப்பை
பிக் பாஸ் சீசன் 6ன் வெற்றிக் கோப்பையை கமல் சார் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று போட்டியாளர்கள் மூவரின் கைகளையும் ஸ்கேன் செய்ய வைத்து வெளியே கொண்டு வரும் காட்சிகள் இந்த 4வது ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளன. 3வது ப்ரோமோ டைமுக்கு வரவேண்டும் என பழைய காட்சிகளையே பதிவிட்ட நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள் திட்டியது டீமுக்கு கேட்டு விட்டது போல, இப்படி ஆச்சர்யம் கொடுக்கும் அட்டகாசமான ப்ரோமோ வெளியிட்டுள்ளனர்.

ஆனந்த கண்ணீர்
அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் மூவருமே ஒரே நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிரேன் மூலம் தூக்கிக் கொண்டு ஆகாய மார்க்கமாக பறந்து செல்லும் காட்சிகளை பார்த்ததுமே என்ன நம்மள இப்படி தூக்கிக் கொண்டாடுறாங்களே என மூவருமே ஆனந்த கண்ணீர் சிந்தும் காட்சிகள் ரசிகர்களையும் உணர்ச்சி வசப்படுத்தி உள்ளன.

மூவரில் யார்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த மூன்று பேரில் யார் அந்த வெற்றி கோப்பையை வெல்லப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பும் கமல் சார் மூன்று பேர் கைகளையும் பிடித்துக் கொண்டு ஒருவர் கையை தூக்குவாரா? என்ன வித்தை நடக்கப் போகிறது என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.