Don't Miss!
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரட் சட்னி
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்த 20 பேர் இவங்க தான்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 அக்டோபர் 9 முதல் ஆரம்பம் ஆனது.
பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் கமலஹாசன் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம் வாங்க..
வீடு ரெடி.. வீரர்களும் ரெடி.. வேட்டைக்கு நீங்க ரெடியா..? பிக் பாஸ் 6 வீட்டை சுற்றி காட்டிய கமல்!

ராம் ராமசாமி
விளம்பர மாடல், பாடகர், கிரிக்கெட் வீரரான ராம் ராமசாமியும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ராம் ராமசாமி பங்கேற்க போகிறார் என ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள்ளே அவர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆண் போட்டியாளர்களில் செம ஹேண்ட்ஸம் ஆக இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சப்போர்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரவணன் மீனாட்சி
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை ரச்சிதா இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரும் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் கடந்த சீசனை போல இந்த சீசனிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கும்பிடு போட்டு விட்டனர். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய ரச்சிதா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள நிலையில், டிஆர்பி எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜே மகேஷ்வரி
சன் மியூசிக் விஜேவாக இருந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விஜே மகேஷ்வரி இந்த முறை பிக் பாஸ் போட்டியாளராக மாறி உள்ளார். ரம்யா பாண்டியன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது கொடுத்த வைபை விஜே மகேஷ்வரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் ஒரு மனைவியாக மகேஷ்வரி நடித்திருந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் நுழைந்து விட்டார்.

செய்திவாசிப்பாளர் ஜனனி
லாஸ்லியா, அனிதா சம்பத் வரிசையில் இன்னொரு செய்திவாசிப்பாளர் பிக் பாஸ் போட்டியாளராக மாறி உள்ளார். ஐபிசி செய்திவாசிப்பாளர் அழகு பதுமை ஜனனி பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

விஜய் டிவி அமுதவாணன்
விஜய் டிவியை சேர்ந்த சின்னத்திரை நடிகர்கள் பலர் இந்த முறை பங்கேற்றுள்ள நிலையில், காமெடிக்காக அமுதவாணனும் கலந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. விஜய் டிவி புராடக்ட்ஸ் இல்லாமால் விஜய் டிவி ஷோவா நோ சான்ஸ் என இம்முறையும் பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் நிரூபித்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்க உள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்னனுடன் எடுத்த குழந்தைப்பருவ புகைப்படத்தை ஷேர் செய்து பிக் பாஸ் வீட்டுக்கு அண்ணன் போறான்.. அவனை கொஞ்ச நாள் மிஸ் பண்ண போறேன் என்று பதிவிட்டு இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சிங்கப்பூர் மாடல் நிவாஷினி
மலேஷியா, இலங்கை போட்டியாளர்கள் இதுவரை பங்கேற்று வந்த நிலையில், இந்த முறை சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினி போட்டியாளராக களமிறங்குகிறார். கடந்த சீசனில் பாவனி, அக்ஷராவை தவிர க்யூட்டான பெண் போட்டியாளர்கள் யாரும் இல்லை என்கிற ஃபீலிங் நெட்டிசன்களுக்கு இருந்த நிலையில், இந்த சீசனில் ஏகப்பட்ட இளம் மாடல் அழகிகள் களமிறங்கி உள்ளனர்.

டிக் டாக் பிரபலம்
இந்தியன் 2 ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை விடாமல் கமல் தொடர்ந்து நடத்தி வருகிறார். கமல் தொகுத்து வழங்கி வரும் பிரம்மாண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆளாக ஜிபி முத்து உள்ளே நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டே பிக் பாஸ் வீட்டுக்கு ஜிபி முத்து செல்கிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த வீட்டுக்கெல்லாம் மனுஷன் போவான்னான்னு பேசியிருந்த ஜிபி முத்து இந்த சீசனில் வேறு வழியில்லாமல் சென்று விட்டார் போல என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை கன்டென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது என்கின்றனர்.

எப்போ வர வேண்டியது
ஷிவானி நாராயணன் உடன் சீரியலில் நடித்த நடிகர் அசீம் கடந்த இரு சீசன்களாக பிக் பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டாக இப்போ வருவார், அப்போ வருவார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், 6வது சீசனில் 2வது போட்டியாளராக ஒரு வழியாக வந்து விட்டார் என தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

கானா பாடகர்
"ஜோர்த்தால" பாடல் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஹாட் டிரெண்டான கானா பாடகர் அசல் கோளாறு இந்த சீசனில் 3வது போட்டியாளராக பங்கேற்க உள்ளார். கடந்த சீசனில் கானா பாடாகி இசைவாணி போட்டியாளராக பங்கேற்று இருந்த நிலையில், இந்த சீசனில் மற்றொரு கானா பாடகர் கலந்து கொள்கிறார்.

சிவின் கணேசன்
கடந்த சீசனில் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து கலந்து கொண்ட நிலையில், இந்த சீசனில் சிவின் கணேசன் 4வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று விட்டார் என தகவல்கள் லீக் ஆகி உள்ளன. இந்த முறையாவது திருநங்கை போட்டியாளர் பல நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

கச்சேரி இருக்கு
பிக்பாஸ் என்றாலே வனிதா விஜயகுமார் பெயர் ரசிகர்களுக்கு பரிட்சையமான ஒன்று. வனிதாவின் எக்ஸான ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறார் என்பதே ஏகப்பட்ட சர்ச்சைகளையும் எதிர்பார்புகளையும் அதிகரித்து இருக்கிறது. 5வது போட்டியாளராக ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டாராம்.

ஷெரினா
ரைசா வில்சன், மீரா மிதுன், மதுமிதா, ஸ்ருதி என ஏகப்பட்ட மாடல்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொரு சீசனாக வந்து சென்ற நிலையில், தற்போது இந்த சீசனில் ரசிகர்களை கவரும் விதமாக மாடல் ஷெரினா 6வது போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார் என தெரிகிறது. இவரது பர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கப் போகுதுன்னு போக போக பார்ப்போம்.

இலங்கை ராப் பாடகர்
இலங்கையை சேர்ந்த ராப் பாடகரான ஆர்யான் தினேஷ் கனகரத்தினம் எனும் ஏடிகே இந்த பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக நுழைந்துள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. வழக்கம் போல இந்த முறையும் ராப் பாடகர், காமெடியன், நடன இயக்குநர்கள், மாடலிங் பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இவங்களும் இருக்காங்க
மேலும், குயின்ஸி எனும் மாடல் அழகி, விஜே கதிரவன், டிக்டாக் பிரபலம் தனலக்ஷ்மி, விஜே விக்ரமன், மெட்டி ஒலி சாந்தி அரவிந்த், நடிகை ஆயிஷா உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்கின்றனர். டிடி, மைனா நந்தினி, விசித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கவில்லை என்பது உறுதி ஆகி உள்ளது.