Don't Miss!
- News
தூய்மை பணியாளர்களுக்கு விருந்து! எல்லோருக்கும் பிரியாணி பரிமாறிவிட்டு ரசம் ஊற்றி சாப்பிட்ட ஆ.ராசா!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
பிக் பாஸ் குயின்ஸியின் மாமாக்குட்டியான மணிகண்டன்.. ரெண்டு பேரும் செம டான்ஸ்.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங் இன்னும் சற்று நேரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை கடைசி வரை ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க பிக் பாஸ் டீம் ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது.
சோஷியல் மீடியாவில் லீக் செய்யும் அந்த சிலரை கட்டுப்படுத்தினாலே நிகழ்ச்சி எப்போதும் சுவாரஸ்யம் ஆக இருக்கும் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் சொல்லுங்க மாமாக்குட்டி பாடலுக்கு மணிகண்டன் மற்றும் குயின்ஸி நடனம் ஆடவுள்ள நிலையில், கேரவனில் இருவரும் அந்த பாடலுக்காக பிராக்டீஸ் பண்ணும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
விக்ரமா...அசீமா டைட்டில் வின்னர் யார்?...பிரம்மாண்டமாக தொடங்கியது பிக் பாஸ் கிராண்ட் பினாலே!

விரைவில் லீக்
கடந்த சீசனை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்கை நேற்றும் இன்றும் என டைமிங் போட்டு பிரித்து பிரித்து எடுத்து வருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் ஷூட்டிங் முழுவதும் முடிந்த உடனே பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும் என்றும் இது வரைக்கும் ஒருத்தர் கூட எவிக்ட் செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விக்ரமன் வெல்வார்
ஷிவின் அல்லது விக்ரமன் வெல்ல வேண்டும் என்றும் அசீமுக்குத்தான் டைட்டில் என்றும் ரசிகர்கள் மாறுபட்ட கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வரும் நிலையில், விக்ரமன் தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடைசி நேர ட்விஸ்ட் இருக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

குயின்ஸியின் மாமாக்குட்டி
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இந்த சீசனில் பங்கேற்ற அத்தனை பேரும் கண்கவர் உடைகளை அணிந்து கொண்டு சூப்பரான பாடல்களுக்கு நடனமாடி அசத்த உள்ளனர். அதற்கான ஷூட்டிங்கும் முடிந்து விட்ட நிலையில், ப்ரோமோக்களும் வெளியாகி உள்ளன. இந்நிலையில், குயின்ஸியும் மணிகண்டனும் சொல்லுங்க மாமாக்குட்டி பாடலுக்கு நடனமாடி உள்ள ரிஹர்சல் வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

க்யூட் கோட்டா
கோட்டா குயின்ஸி என பிக் பாஸ் குயின்ஸியை ரசிகர்கள் கிண்டலடித்து வந்த நிலையில், அவர் மணிகண்டன் உடன் சேர்ந்து நடனம் ஆடுவதை பார்த்த ரசிகர்கள் க்யூட் கோட்டா என்றே கமெண்ட் போட்டு குயின்ஸியின் நடனத்தை ரசித்து வருகின்றனர்.

அடுத்த ஷிவானியா
பிக் பாஸ் ஷிவானி போலவே குயின்ஸி இருக்கிறார் என்றும் லாஸ்லியா போல ஜனனி இருக்கிறார் என முந்தைய சீசன் போட்டியாளர்களை வைத்து ரசிகர்கள் கம்பேர் செய்து வந்த நிலையில், ஷிவானி போலவே படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு குயின்ஸிக்கும் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.