அமுதவாணனை அடித்த மணிகண்டன்.. பிக் பாஸ் வீட்டில் வெடித்தது அடுத்த சண்டை.. இந்த வாரம் களைகட்டுது!

சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி போர்க்களமாகவே மாறி வருகிறது.

யார் டஃப் போட்டியாளர், யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்காங்க, யாரு ஃபேர் பிளே விளையாடுறாங்கன்னு கெஸ் பண்ணவே முடியாத படி செம ட்விஸ்ட்டாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது.

அடித்து பிடுங்கும் டாஸ்க்கில் ஏகப்பட்ட அடிகளும், மிதிகளும் போட்டியாளர்களுக்கு விழுந்து வரும் நிலையில், மணிகண்டன் vs அமுதவாணன் சண்டை அரங்கேறி இருக்கிறது.

முரட்டு மணி

முரட்டு மணி

ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் ஈஸியா ரசிகர்களை கவர்வார் என எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் முரடனாகவே சுற்றி வருகிறார். தனலட்சுமியை தள்ளி விட்டு சண்டை போட்ட மணிகண்டன் தற்போது அமுதவாணனை அடித்தே விட்டார் என்கிற பஞ்சாயத்து கிளம்பி இருக்கு.

அடிக்கவே இல்லை

அடிக்கவே இல்லை

சத்தியமா நான் பிடுங்க தான் ட்ரை பண்ணேன், உங்களை அடிக்கவே இல்லை என சத்தியம் செய்து மணிகண்டன் சாதிக்கும் பரபரப்பான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மிக்சர் தின்னிகளாக இல்லாமல், ஒருத்தர் மட்டுமே டைட்டிலுக்கு சொந்தக்காரர் என்று ஆரம்பத்தில் இருந்தே முடிவு கட்டாமல் தனித்தனியாக ஒவ்வொரு போட்டியாளரும் ஸ்கோர் செய்து வருகின்றனர்.

ட்ரிக்கர் பண்ணும் அமுது

ட்ரிக்கர் பண்ணும் அமுது

காமெடியன்னு நினைச்சீங்களா, நான் டெரர் பீஸ் என தொடர்ந்து விக்ரமன், மணிகண்டன் என வரிசையாக ட்ரிக்கர் செய்து அவங்களை ஃபிரேம் பண்ணி வருகிறார் அமுதவாணன் என்கிற குற்றச்சாட்டை சண்டையின் போது மணிகண்டன் வெளிப்படையாகவே சொல்லி விட்டார்.

குத்துனனா உங்கள

குத்துனனா உங்கள

பெல்ட் போகிற இடத்துல உங்கள குத்துனேன்னா என மணிகண்டன் கேட்க, ஆமாம் குத்துன மணி என அமுதவாணன் எகிற, ரூடா தான் விளையாண்ட மணி என மகேஸ்வரியும் மணிகண்டன் செய்தது தான் தவறு என அமுதவாணனுக்கு ஆதரவாக பேசிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

சண்டைக்கு பின்னர் சமாதானம்

சண்டைக்கு பின்னர் சமாதானம்

விஜய் டிவி ரசிகர்களுக்கான இன்றைய முதல் ப்ரோமோவில் வரும் காட்சிகள் 24 மணி நேர டிஸ்னி ஹாட்ஸ்டாரில் முடிந்து தனலட்சுமியும் மணிகண்டனும் எப்படி ஒன்றாக சேர்ந்தார்களோ அதே போல அமுதுவும் மணிகண்டனும் ஒண்ணா சேர்ந்துட்டாங்க, நீங்க ரொம்ப லேட் பாஸ் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சண்டை போடுவதும் சமாதானம் ஆவதும் பிக் பாஸ் ஸ்க்ரிப்ட் படி சகஜம் தானே..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X