Bigg Boss Tamil 6: இனிமே நாங்க மிக்சர் இல்லை.. அசீமை அலேக்கா தூக்கிய பிக் பாஸ் போட்டியாளர்கள்!

சென்னை: பிக் பாஸ் வீடு இந்த வாரம் ராஜவம்சமும் அருங்காட்சியமுமாக மாறுகிறது. கடந்த வாரம் ஸ்வீட் டாஸ்க் கொடுத்தே தனலட்சுமிக்கு திருட்டுப் பழி சுமத்திட்டாங்க என கதறி அழுதார்.

இந்த வாரம் கோமாளி படத்தில் வருவது போல அருங்காட்சியகத்தில் இருந்து ராஜ வம்சத்து பொக்கிஷத்தை யார் திருடப் போகிறார்கள். ராஜ வம்சத்தினர் எப்படி பாதுகாத்து வைக்கப் போறாங்கன்னு ஒரு பெரிய பிரளயமே காத்துட்டு இருக்கு.

தற்போது வெளியான 2வது ப்ரோமிவில் ஹைலைட்டே என்னன்னா? இதையெல்லாம் படிக்கும் அசீமை ராம், குயின்ஸி உள்ளிட்ட மிக்சர் பார்ட்டிகள் ஓடி வந்து அலேக்காக தூக்குவது தான்.

கேம் ஸ்டார்ட்

கேம் ஸ்டார்ட்

37 நாட்கள் கடந்து விட்ட நிலையில், இனியும் மிக்சர் பார்ட்டிகளாக இருக்கக் கூடாது என ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் விளையாட ஆர்வம் காட்டுவதே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. யாரோ விளையாடிட்டு போறாங்க, நாம படுத்துத் தூங்குவோம் என இருந்தவர்கள் எல்லாம் நான் ராஜாவா இருக்கேன், ராணியா இருக்கேன், இளவரசி நான் தான் என அசீம் சொல்லி முடிப்பதற்குள்ளே ஆர்வம் காட்டுவது சிறப்பா இருக்கு..

கோமாளி பட ஸ்க்ரிப்ட்டா

கோமாளி பட ஸ்க்ரிப்ட்டா

அசுரர்கள், தேவர்களே போட்டு போரடிச்சிடுச்சு, கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கலாம்னு பிரதீப் ரங்கநாதனின் கோமாளி படத்தின் ஸ்க்ரிப்ட்டை பிக் பாஸ் வீட்டுக்குள்ள கொண்டு வந்துட்டாங்களா என ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் தீமில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பிரளயமே வெடிக்கப் போவது கன்ஃபார்ம்.

அருங்காட்சி எதற்கு

அருங்காட்சி எதற்கு

ஒரு பக்கம் ராஜாங்கம் மறுபக்கம் ராஜாங்க பொருட்களின் அருங்காட்சியகம். ஆமாம்.. அரசர்கள் இருக்கும் போது அருங்காட்சியகம் எதற்குன்னுலாம் குதர்க்கமாக கேள்வி கேட்கக் கூடாது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கான்செப்ட் இதுதான். இதில், தனலட்சுமி, அசீம், மணிகண்டன், அமுதவாணன் எப்படி சண்டை போடப் போறாங்க என்பதை மட்டும் வெயிட் பண்ணி பாருங்க என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

அசீமை அலேக்கா தூக்கி

அசீமை அலேக்கா தூக்கி

மிக்சர் போட்டியாளர்கள் இனியும் இருந்தால் வேலைக்காகாது. இந்த வாரம் குயின்ஸி, ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி, தனலட்சுமி, கதிரவன் எல்லாம் நாமினேஷனில் இருப்பதால் சும்மா இறங்கி ஆட ஆரம்பித்துள்ளனர். கான்செப்ட் பற்றிய அறிவிப்பை அசீம் வாசிக்கும் போதே போட்டியாளர்கள் அவரை அலேக்காக தூக்கிய ப்ரோமோ ரொம்பவே சூப்பர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X