இதை மட்டும் டெலிகாஸ்ட் பண்ணிடாதீங்க.. பிக் பாஸிடம் கெஞ்சிக் கேட்ட தனா.. என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் தனலட்சுமி பண்ண தில்லாலங்கடி வேலைக்கும் தேவையில்லாமல் போட்ட சண்டைக்கும் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வழக்கம் போல எழுந்துள்ளது.

அசீமுக்கே ரெட் கார்டு கொடுக்காமல் நல்லவராக மாற்றி உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் தனாவை காப்பாற்றத்தான் செய்யும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதை டெலிகாஸ்ட் பண்ணாதீங்க என பிக் பாஸிடம் தனா வைத்த கோரிக்கை வீடியோ டிரெண்டாகி வருகிறது.

தடாலடி தனலட்சுமி

தடாலடி தனலட்சுமி

ஒவ்வொரு சீசனுக்கும் வத்திக்குச்சி, விஷ பாட்டில், மிக்சர், ஊமைக்குசும்பு, ட்ரிக்கர் என போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் பட்டப்பெயர் வைத்து கலாய்த்து வருகின்றனர். இந்த சீசனில் தனலட்சுமிக்கு ரசிகர்கள் தடாலடி தனலட்சுமி என்கிற பெயரை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். எதற்குமே தயங்காமல், முதல் வாரத்தில் ஜிபி முத்துவிடம் ஆரம்பித்து, அசீம், மணிகண்டன், விக்ரமன் என பல ஆண் போட்டியாளர்களுடனும் சண்டைப் போட்டு வருகிறார்.

இனிமே அப்படி சொல்ல மாட்டேன்

இனிமே அப்படி சொல்ல மாட்டேன்

இந்த வாரம் செய்வதை எல்லாமே செய்து விட்டு, வெள்ளிக்கிழமை ராமசாமியாக மாறி உள்ளார் தனலட்சுமி. வீட்டிலேயே இப்படித்தான் எங்கம்மா ஏதாவது சொல்லிட்டாங்கன்னா வீட்டை விட்டு கிளம்புறேன் என அழுது அடம்பிடிப்பேன். அதே போலத்தான் இங்கேயும் பண்ணிட்டேன். இனிமே அப்படி செய்ய மாட்டேன் என்னை மன்னித்து விடுங்க பிக் பாஸ் என தனலட்சுமி பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

டெலிகாஸ்ட் பண்ணாதீங்க

டெலிகாஸ்ட் பண்ணாதீங்க

ப்ளீஸ் பிக் பாஸ் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இதையெல்லாம் டெலிகாஸ்ட் பண்ணாதீங்க, நான் இனிமே நீங்க கொடுக்கிற டாஸ்க்கை எல்லாம் சரியாக செய்கிறேன். எந்த பிரச்சனைக்கும் போக மாட்டேன் ஒழுங்கா சமத்துப் பாப்பாவாக இருக்கேன் என தனலட்சுமி பேசிய காட்சிகளை அப்படியே டெலிகாஸ்ட் செய்து ரசிகர்களிடம் கோர்த்து விட்டு இருக்கிறார் பிக் பாஸ்.

ஓவர் சீன்

ஓவர் சீன்

தனலட்சுமியின் இந்த டிராமாவை பார்த்த ரசிகர்கள் ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதும்மா? இந்த வாரம் மிஸ் ஆனாலும், அடுத்த வாரம் கண்டிப்பா நாமினேஷனில் வா? நாங்களே வீட்டுக்கு அனுப்புறோம் என பிக் பாஸ் ரசிகர்கள் தனலட்சுமியை துவைத்து தொங்கப் போட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தனலட்சுமியையும் வீட்டுக்கு அனுப்பிட்டு மீதம் இருக்கிற மிக்சர்களை டைட்டில் வின்னராக ஆக்குங்க என தனலட்சுமி ஆர்மியினர் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X