Bigg Boss Tamil 6: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போறது இவங்க தான்.. கன்ஃபார்ம்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி 54 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மிக்சர் போட்டியாளர்கள் என கலாய்க்கப்பட்ட ஜனனி, ராம், மணிகண்டா உள்ளிட்ட போட்டியாளர்கள் கூட விளையாட ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், இன்னமும் ஒரு சில போட்டியாளர்கள் தூக்க மோடிலேயே இருக்கும் நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வீட்டிற்கே சென்று தூங்குங்கள் என ரசிகர்கள் அனுப்பி வைக்க உள்ளனர்.
இந்த வாரம் டேஞ்சர் ஜோன் மற்றும் எவிக்ட் ஆகப் போகும் போட்டியாளர்கள் குறித்த விரிவான அலசலை இங்கே பார்ப்போம்..

நாமினேஷனில் யார் யார்
இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் வைத்து நாரதர் வேலையை நல்லாவே மூட்டி விட்டார் பிக் பாஸ். அசீம் கேப்டனாக மாறியதால் இந்த வாரம் அவர் நாமினேஷனுக்கு வரவில்லை. கதிரவன், குயின்ஸி, மைனா நந்தினி, ரச்சிதா, தனலட்சுமி, ஜனனி உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்.

யார் போனாலும் சந்தோஷம்
இந்த வாரம் நாமினேஷனுக்கு வந்திருக்கும் 6 பேரும் வெளியேறுவதற்கு அனைத்து விதத்திலும் அத்தனை பொருத்தங்களும் அம்சமாக கொண்ட நபர்கள் தான் இதில், யாரை வேண்டுமானாலும் வெளியேற்றலாம் என நினைத்தாலும் ரசிகர்களுக்கு டபுள் எவிக்ஷன் ஆப்ஷன் கூட இல்லாமல், ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே இந்த வாரம் வெளியேற வேண்டிய நிலை இருப்பது வருத்தமாகத்தான் இருக்கு.[

தப்பித்து விடுவார்கள்
இந்த வாரம் அதிக ஓட்டுக்களை பெற்று கதிரவன் முதல் நபராக சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கதிரவனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் இளவரசி ஜனனி சேவ் ஆவார். அவரை தொடர்ந்து ராணி ரச்சிதா இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றாலும் ரசிகர்கள் வாக்குகளுடன் சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தப்பித்த மைனா
கடந்த வாரம் புடிக்கலைன்னா வெளியே அனுப்பிடுங்க என ஆடியன்ஸிடமே மைனா நந்தினி திமிராக பேசிய நிலையில், ஆரம்பத்தில் இருந்து குறைவான ஓட்டுக்களுடன் இருந்த மைனா நந்தினி அசீம் - அமுதவாணன் பிரச்சனையில் தலையிட்டு தைரியமாக பேசி கேம் விளையாடிய நிலையில், இந்த வாரம் அவர் தப்பித்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டேஞ்சர் ஜோனில் இருவர்
ஷிவினிடம் அம்மாவை பற்றி பேசி கேமுக்காக அழ வைத்த தனலட்சுமி, அசீமை அவுட்டாக்க முட்டையெல்லாம் அடித்தார். அதனால் கடுப்பான ரசிகர்கள் ஹெட்செட் போட்டு பிக் பாஸ் பார்க்க முடியவில்லையே என தனலட்சுமியை அனுப்பி விடும் நோக்கத்தில் அவருக்கு ஓட்டே போடாத நிலையில் டேஞ்சர் ஜோனில் தனலட்சுமி உள்ளார். வேடிக்கை பார்த்துக் கொண்டே தூங்கி வழியும் குயின்ஸி இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் கடைசி இடத்தில் உள்ளார்.

குயின்ஸி வெளியேறுவார்
இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் உள்ள குயின்ஸி தான் வெளியேறுவார் என கருத்துக் கணிப்புகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. கடந்த வாரம் அப்பா ராபர்ட் மாஸ்டர் சென்ற நிலையில், இந்த வாரம் பொண்ணு குயின்ஸிக்கு குட் பை சொல்ல பிக் பாஸ் ரசிகர்கள் ரெடியாகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











