Bigg Boss Tamil 6: ஜட்ஜம்மா இது நியாயமா.. நீங்களே சிரிச்சிட்டு.. மத்தவங்கள வெளியே போக சொல்றீங்களே!

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீடு நீதிமன்றமாக மாறி உள்ள நிலையில், உருப்படியான வழக்குகள் ஏதும் தொடரப்படாமல் உப்புக்கு பிரயோஜனம் இல்லாத வழக்குகள் தொடரப்பட்டு ஹவுஸ்மேட்களையே சிரிப்புக்குள்ளாக்கி இருப்பதெல்லாம் வேறலெவல் காமெடி.

முதல் வழக்கிலேயே நீதிபதியாக நினைத்து மொக்கை வாங்கிய தனலட்சுமி ஒரு வழியாக ராம் வழக்கில் நீதிபதியாக மாறிவிட்டார்.

ஆனால், அவரே சிரித்து விட்டு, பின்னர், யாராவது சிரித்தால் வெளியேற வேண்டும் என சொல்வதெல்லாம் நியாயமா என 3வது ப்ரோமோவை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சிரிப்பு கோர்ட்

சிரிப்பு கோர்ட்

பிக் பாஸ் வீடு நீதிமன்றம் ஆரம்பத்தில் அனல் பறந்த நிலையில், போக போக ஒரே சிரிப்பு நீதிமன்றமாக மாறிவிட்டது. அமுதவாணன் ஜனனி வழக்கை அசீம் விசாரித்த நிலையில், என்ன தீர்ப்பு சொல்வது என்றே சொல்லாமல், நாட்டாமை பஞ்சாயத்து பண்ணுவது போல இரு தரப்புக்கும் சமாதானம் செய்வது போல ஏடிகே பேசியது சர்ச்சையாக வெடித்தது.

தனலட்சுமிக்கு முதுகில் குத்து

தனலட்சுமிக்கு முதுகில் குத்து

தலைவர் பதவி குறித்து ரச்சிதா சொன்னதை எதிர்த்து தனலட்சுமி தொடர்ந்த வழக்கில் மைனா நந்தினியும் ஷிவினும் நைஸாக விட்னஸ் ஆகாமல் கழண்டு கொண்டு அவரது முதுகிலேயே குத்திவிட்டனர். என்னோட ஆட்டத்தை இனிதான் பார்ப்பீங்க என பில்டப் கொடுத்த தனலட்சுமி தற்போது ராம் கேஸில் ஜட்ஜாக மாறி சிரிப்புக் காட்டி உள்ளார்.

ஜட்ஜம்மா

ஜட்ஜம்மா

முதல் வழக்கில் ஜட்ஜாக முடியாத நிலையில், ராம் வழக்கில் ஜட்ஜம்மாவாக மாறிய தனலட்சுமியை பார்த்தாலே செம காமெடியாக இருக்கு என ரசிகர்கள் கலாய்த்து வந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோ தனலட்சுமி செய்த செயல்களை பார்த்து மேலும், ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.

ராம் வழக்கு

ராம் வழக்கு

அமுதவாணன் மீது ராம் தொடுத்த வழக்கில் வழக்கறிஞர்களாக ஏடிகேவும் மைனாவும் ஆஜர் ஆகி உள்ளனர். அந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது தனலட்சுமி உள்பட ஹவுஸ்மேட்கள் பலரும் விழுந்து விழுந்து சிரித்து நீதிமன்றத்தை விட்டே வெளியேறி செல்லும் அளவுக்கு செம ஃபன்னாக மாறிவிட்டது இந்த பிக் பாஸ் நீதிமன்றம்.

ஒரே சிரிப்பு

ஒரே சிரிப்பு

ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களே விழுந்து விழுந்து சிரிக்க ஜட்ஜம்மாவாக இருக்கும் தனலட்சுமி இங்கே யாராவது சிரித்தா உடனடியா வெளியே போங்க என ஆர்டர் போட்டதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் முதல் ஆளா நீங்க தான் வெளியே போகணும் ஜட்ஜம்மா என கலாய்த்து வருகின்றனர்.

நீ தான்மா வெளியே போகணும்

நீ தான்மா வெளியே போகணும்

அப்படி பார்த்தால் முதல் ஆளாக நீங்க தான் தனா வெளியே போகணும் என கமெண்ட் பக்கத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் அவர் சிரித்த காட்சிகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சிரிக்காதவங்க யாரு

சிரிக்காதவங்க யாரு

ஏடிகே மற்றும் ஆயிஷா இரண்டு பேரை தவிர ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் இந்த கேஸ் காரணமாக விழுந்து விழுந்து சிரித்தனர். அப்படியென்றால் எல்லாரும் வீட்டுக்கு போய் விளையாடுங்க ஜாலியா என ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இதுவரை இப்படியொரு பிக் பாஸ் நீதிமன்றத்தை பார்த்ததில்லை என்றும் எதிலுமே சீரியஸான பர்ஃபார்மன்ஸ் இவங்க செய்றதே இல்லை என்றும் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X