For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உலகமகா நடிப்புடா சாமி.. தலையில் அடியே படல.. சீரியல் சீனையெல்லாம் போட்டு ஷெரினை கலாய்க்கிறாங்க!

  |

  சென்னை: நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் கொடுத்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டையே போர்க் களமாக மாற்றி உள்ளனர். போதாக் குறைக்கு சோஷியல் மீடியாவையே விவாத களமாகவும் மாற்றி உள்ளனர்.

  ஷெரினா கீழே விழுந்து தலையில் அடிபட்டு விட்டதாக கூறியதும் ஆண் போட்டியாளர்கள் அடித்து பிடித்து ஷெரினாவை காப்பாற்ற போட்ட சீன்களையும் ஷெரினா முதலில் தரையிலேயே விழ வில்லை அவருக்கு அடியே படவில்லை எல்லாமே டிராமா என்றும் நெட்டிசன்கள் வீடியோக்களாக ஷேர் செய்து பிரித்து மேய்ந்து வருகின்றனர்.

  மேலும், ஓவியாவை போல தனலட்சுமி அத்தனை எதிர்ப்புகளையும் சோலோவாக சமாளித்து வருகிறார் என்றும் மங்காத்தா மியூசிக் எல்லாம் போட்டு தனலட்சுமிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

  வெங்காயம் சாப்பிடும் சேலஞ்ச்.. இன்னா வெட்டு வெட்டறாரு மணிகண்டன்! வெங்காயம் சாப்பிடும் சேலஞ்ச்.. இன்னா வெட்டு வெட்டறாரு மணிகண்டன்!

  சீன் போடுறாரா ஷெரினா

  சீன் போடுறாரா ஷெரினா

  நடன டாஸ்க்கில் கலந்து கொள்வதை தவிர்க்க முன்னதாகவும் இதே போலா ஒரு சீனை ஷெரினா போட்டார் என்றும் தற்போது கீழே விழுந்து தலையில் பலத்த அடி பட்டதை போல அவர் நடித்து ஹவுஸ்மேட்களை ஏமாற்றி உள்ளார் என ரசிகர்கள் அவர் கீழே விழும் போது என்ன நடந்தது என்கிற வீடியோவை ஷேர் செய்து விளாசி வருகின்றனர்.

  தனலட்சுமி தள்ளல

  தனலட்சுமி தள்ளல

  ஷெரினாவை தனலட்சுமி மனிதநேயமே இல்லாமல் தள்ளி விட்டார் என்றும் உங்க வெஞ்சன்ஸ வெளியே போய் வச்சிக்கோங்க என தனலட்சுமி மீது தனது ஒட்டுமொத்த வெஞ்சன்ஸையும் கொட்டித் தீர்த்து விட்டார் அசீம். ஆனால், தனலட்சுமி ஷெரினாவை தள்ளவில்லை என்று ரசிகர்கள் ஆதாரங்களை அடுக்கி வருகின்றனர்.

  ஜனனி காரணமா

  ஜனனி காரணமா

  தனலட்சுமி பின்னாடி இருந்த ஜனனி தான் நைஸாக ஷெரினாவை இழுத்து கீழே தள்ளினார் என்று ஒரு குரூப்பும், ஷெரினாவின் பின்னாடி இருந்தவர்கள் புஷ் பண்ணியதால் எதிர்பாராத விதமாக ஷெரினா விழுந்தார். ஆனால், அவரது தலை கிழே படவே இல்லை. அதற்குள் அப்படியொரு டிராமாவை போட்டு விட்டார் டிராமா குயின் ஷெரினா என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

  சீரியலே தோத்துடும்

  நண்பர்களே இன்னைக்கு என்ன நடந்துச்சுன்னா என ஜிபி முத்து ஸ்டைலில் இந்தி சீரியலின் படு அபத்தமான காட்சியை ஷேர் செய்து ஷெரினாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மாமியார் அடித்ததும் சுற்றி சுழன்று ஸ்க்ரீன் துணியால் கழுத்து இறுகி ஒரு பெண் சாகும் காட்சியை போட்டு இப்படி தான் ஆச்சு என ட்ரோல் செய்து வருகின்றனர்.

  ஷெரினாவுக்கு எப்படி அடிபட்டுச்சு

  ஷெரினாவுக்கு எப்படி அடிபட்டுச்சு

  ரோட்டில் நடந்து செல்லும் ஒரு குடிகாரர் வேண்டுமென்றே கார் மீது மோதும் காட்சியை பதிவிட்டு இப்படித்தான் ஷெரினா இன்னைக்கு டிராமா போட்டார் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

  விக்ரமன் கண்டுபுடிச்சிட்டாரு

  விக்ரமன் கண்டுபுடிச்சிட்டாரு

  ஷெரினாவுக்கு தலையில் அடிபட்ட மாதிரி தெரியல, அவங்க கீழே விழும்போது கையை ஊன்றி பேலன்ஸ் செய்தார் என விக்ரமன் தெளிவாக தனலட்சுமியிடம் சொல்வதை கேப்ஷர் செய்து போட்டு நீ ஒரு ஆளு தான்யா உண்மையை அடிக்கடி வெளிப்படையா பேசுற என பாராட்டி வருகின்றனர்.

  தள்ளிவிட்டது இவங்க தான்

  தள்ளிவிட்டது இவங்க தான்

  அமுதவாணன், ஆயிஷா மற்றும் அவர்களுக்கு பின்னாடி இருந்தவங்க தான் ஷெரினாவை தள்ளி விட்டாங்க.. ஆனால், சம்மந்தமே இல்லாமல் தனலட்சுமி தான் தள்ளி விட்டார் என்று சொல்வதும் அசீம் அப்படி பேசுவதெல்லாம் திட்டமிட்ட சதி என பிக் பாஸ் ரசிகர்கள் வீடியோ ஆதாரங்களை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

  English summary
  Bigg Boss Tamil 6 fans trolls Sherina with trending serial video. They told she fake the injury incident and praising Vikraman to found her head didn't hit the floor and also they supports Dhanalakshmi in this incident.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X