பக்கா ஸ்கெட்ச்.. பிக் பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறுகிறாரா ஜிபி முத்து? அவரே சொன்ன விஷயம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6ஐ ரசிகர்கள் அதிகம் பார்க்க காரணமே ஜிபி முத்து தான். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து அதிரடியாக வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக காய்ச்சல் உள்ளிட்ட அவதிகளை சந்தித்து வந்தார் ஜிபி முத்து.
இந்நிலையில், தொடர்ந்து வீட்டுக்குப் போகப் போறேன் என அவர் புலம்பி வருவதை பார்த்ததும், பிக் பாஸ் டீம் போட்ட ஸ்கெட்சா இது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லைவ் இல்லை
பிக் பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் அது லைவ் நிகழ்ச்சி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் நடந்த விஷயங்களை தான் அடுத்த நாள் ஒளிபரப்புகின்றனர். பிக் பாஸ் டீம் தங்களுக்கு தேவையான கமாண்டுகளை போட்டியாளர்களுக்கு கொடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. எந்த இடத்தை காட்ட வேண்டாம் என முடிவு செய்கின்றனரோ அந்த பக்கம் கேமரா ஆஃப் ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது. பிக் பாஸ் அல்டிமேட்டிலும் சில விஷயங்கள் இப்படித்தான் மறைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

நல்லா இருந்த மனுஷன்
ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே அவரும் சந்தோஷமாக இருந்தார். மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தி வந்தார். ஆனால், வீக்கெண்ட் ஷோ முடிந்ததில் இருந்தே அவரது செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டன. முன்பை போல சுறுசுறுப்பாகவோ ஜாலியாகவோ அவர் இல்லை என்றும் அடிக்கடி சோர்ந்து போய் விடுகிறார் என்பதும் பார்வையாளர்களை கஷ்டப்படுத்துகிறது.

வெளியே அனுப்பிடுங்க
நான் பேசும் போது பஸர் அடித்து என்னை வெளியே அனுப்பிடுங்க என ஒரு கட்டத்தில் மணிகண்டன் உள்ளிட்டோரிடம் கோரிக்கையாகவே ஜிபி முத்து வைத்ததையும் பார்க்க முடிந்தது. நாங்க நாமினேட் பண்ணாலும், வெளியே இருக்க ரசிகர்கள் உங்களை கடைசி வரை அனுப்ப மாட்டாங்க என்று மணிகண்டன் கூறினார்.

வெறும் 20 நாள் தான்
ஆனால், ஜிபி முத்து எனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை என்றும் அதிகபட்சம் 20 நாள் தான் உள்ளே இருப்பேன். என் மனைவி குழந்தைகளை பார்க்க வேண்டும் என ரொம்பவே மனம் நொந்து பேசியுள்ளார். ஜிபி முத்து அதிரடியாக வெளியேற போகிறாரா? என்கிற கேள்வி இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இல்லை தாமரை போலவே இப்படியே பேசி பேசியே கடைசி வரை உள்ளே இருப்பாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











