பட்டு பட்டுன்னு பேசாம கொஞ்சம் யோசி.. தனலட்சுமி குணத்தை மாற்ற அட்வைஸ் கொடுக்கும் ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் அடுத்த சண்டையையும் தனலட்சுமியை வைத்தே நடத்தி வருகிறார் பிக் பாஸ். இரவு நேரத்தில் அசீம் உடன் அவருக்கு நடந்த சண்டையை மேலும் முடுக்கி விட அடுத்த டாஸ்க்கை கொடுத்துள்ளார்.

தனலட்சுமி எந்த குணத்தை மாற்றிக் கொண்டால் மேம்பட முடியும் என்கிற டாஸ்க்கில் மற்ற ஹவுஸ்மேட்கள் அவரை வச்சு செய்த புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

இதே போல அத்தனை ஹவுஸ்மேட்களுக்கும் இருந்தால் வீடே ரணகளமாகி விடுமே சரியான சண்டை மூட்டி பிக் பாஸ் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க

எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க

யார் என்ன சொன்னாலும், கேட்கவே கூடாது என்றும் தன்னை பற்றி யாராவது எதையாவது சொன்னால் அது தான் சாக்கு என சண்டை போட்டு கன்டென்ட் கொடுத்து வருகிறார் தனலட்சுமி. அசீமுக்கும் அவருக்கும் நேற்று இரவு பெரிய சண்டையே வெடித்த நிலையில், மற்ற ஹவுஸ்மேட்களுடனும் சண்டையை மூட்டி விட இப்படியொரு டாஸ்க்கை பிக் பாஸ் அறிமுகப்படுத்தி உள்ளார்.

தனாவை கேட்க வைத்து

தனாவை கேட்க வைத்து

ஹவுஸ்மேட்களிடம் தனலட்சுமியிடம் என்ன குணத்தை மாற்றிக் கொண்டால் மேம்படுவார் என சொல்ல வைத்து, அதனை தனாவை கேட்க வைத்து பிக்பாஸ் கொளுத்திப் போட்டுள்ள அடுத்த சரவெடி சீக்கிரமே இந்த வாரம் பெரியளவில் வெடித்து கமல் சார் பஞ்சாயத்து பண்ண ஏதுவாக அமையும்.

ட்ரிக்கர் பண்றா

ட்ரிக்கர் பண்றா

தனலட்சுமி நினைத்தா யாரை வேண்டுமானாலும் ட்ரிக்கர் பண்ண முடியும் என இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் விட்டா வீட்டுக்குப் போக காத்திருக்கும் ஷெரினா முதல் நபராக பேசும் காட்சிகள் ரசிகர்களை சற்றே கடுப்பேற்றினாலும், அடுத்த போட்டியாளர்கள் தனலட்சுமியிடம் இருக்கும் முன் கோபத்தை மாற்றிக் கொள்ள சொல்லும் காட்சிகளை ரசிகர்களும் ஆமோதித்து வருகின்றனர்.

பட்டு பட்டுன்னு பேசாத

பட்டு பட்டுன்னு பேசாத

எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ணாத என்றும் பட்டு பட்டுன்னு பேசாத என ராபர்ட் மாஸ்டர் தனலட்சுமிக்கு சொன்னது சூப்பர். அதே போல கடைசியாக ரச்சிதா கொஞ்சம் பொறுமையை கடைபிடித்தால் எங்கேயோ போகலாம் என்று சொன்னதும் சிறப்பான விஷயம் தான். ஆனால், அதற்கெல்லாம் தனா கொடுத்துள்ள ரியாக்‌ஷன் தான் பிக் பாஸ்க்கு தேவையான சண்டையை மூட்டி விடும் விஷயங்கள் என்பது புரமோவிலேயே தெளிவாக தெரிகிறது.

சம்பவம் இருக்கு

சம்பவம் இருக்கு

முதல் வாரத்திலேயே தனலட்சுமி - ஜிபி முத்து சண்டையை வைத்து பிக் பாஸ் சீசன் 6 பிக்கப் ஆனது. அதன் பிறகு ஆயிஷா - அசீம் சண்டை வெடித்தது. அந்த வாரமும் அசல் கோலார் - தனலட்சுமி சண்டை பெரிதாக பார்க்கப்பட்டது. கடந்த வாரம் தனலட்சுமி - அசீம் சண்டை விஸ்வரூபம் எடுத்து குறும்படம் போடும் அளவுக்கு வந்தது. இந்நிலையில், இந்த வாரமும் பிக்பாஸ் தனலட்சுமி பெரிய சம்பவம் செய்து நம்ம ஷோவை ஓட்டுவார் என எதிர்பார்த்து வருகிறாரா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X