பிக் பாஸ்: அச்சச்சோ ஜனனியை அழ வைச்சிட்டாங்களே.. சோக கதை டாஸ்க்கிலும் கண்ணீரை வைத்து டிஆர்பி எகிறுதே!

சென்னை: பிக் பாஸ் சீசன் 6லும் கடந்து வந்த பாதை என சொந்தக் கதையையும் சோக கதையையும் சொல்ல வைக்காதீங்க என ரசிகர்கள் போட்ட கமெண்ட் பிக் பாஸ் டீமுக்கு கேட்டு விட்டது போலத் தான் தெரிகிறது.

முதல் புரமோவில் அசீமை பேச விடாமல் அழ வைத்த ஹவுஸ்மேட்ஸ், இரண்டாவது புரமோவில் ஜனனியையும் ஆஃப் செய்து தேம்பி அழ வைத்து விட்டனர்.

இந்த டாஸ்க்கில் ஒருத்தரும் உருப்படியா சோகக் கதை சொல்லாமல், வெளியே வந்து இப்படி அழத்தான் போறாங்களா? என்கிற கேள்வியும் நிம்மதியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சோக கதையே வேண்டாம்

சோக கதையே வேண்டாம்

முழுமையாக யார் நல்லா சோக கதை சொல்லி முடிக்கிறாங்க பார்க்கலாம் என கடந்து வந்த பாதை டாஸ்க்கிலும் சற்று வித்தியாசம் காட்டி உள்ளனர் இந்த சீசனில், புது இயக்குநர் அல்லது புதிய ஐடியா டீம் மாறிவிட்டதா இப்படி ஆரம்பத்தில் இருந்தே இறங்கி ஆடி வருகின்றனரே என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சோக கதையை சொல்ல விடாமல் சக போட்டியாளர்கள் ரெட் லைட் கொடுத்து காலி செய்யலாம் என்கிற கான்செப்ட் ரசிகர்களை நல்லாவே என்டர்டெயின் செய்து வருகிறது.

அழுத அசீம்

அழுத அசீம்

முதல் புரமோவில் தனது வாழ்க்கையில் நடந்த சோக கதையை சொல்ல ஆரம்பித்த அசீமுக்கு ரெட் லைட் கொடுத்து சக ஹவுஸ்மேட்ஸ் போதும்டா சாமி ரீல் அந்துப்போச்சுன்னு ஆஃப் பண்ணி அமர வைத்தனர். வெளியே வந்த அவர், தன்னை பேச விடாமல் அசிங்கப்படுத்திட்டாங்களே என அழுத காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

ஜனனியின் சோக கதை

ஜனனியின் சோக கதை

என்னை பார்க்குற எல்லோரும் எனக்கு எந்தவொரும் கஷ்டமும் இல்லை என நினைப்பார்கள். ஆனால், நான் கஷ்டப்பட்டு படிச்சி வளர்ந்தேன் என பழைய மொக்கையை போடத் தொடங்கியதும் விக்ரமன் முதல் ஆளாக எழுந்து வந்து ரெட் லைட்டை அமுக்க கிளம்பியதும் நிவாஷினி மற்றும் தனலட்சுமி ஓடி வந்து ரெட் லைட் அடித்த காட்சிகள் புரமோவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அழுகை எனும் அருவியினிலே

அழுகை எனும் அருவியினிலே

ஜனனியும் தனது கதையை பேச விடாமல் சக போட்டியாளர்கள் போரடிக்குதுன்னு இப்படி ரெட் லைட் அடித்து ஆஃப் செய்து விட்டனரே என ரொம்பவே ஃபீல் செய்து அழ ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் ஒரு விஷயமா என ஜனனியை ரச்சிதா ஆறுதல் செய்து வரும் இரண்டாவது புரமோ டிரெண்டாகி வருகிறது.

ராமுக்கு பல்பு

ராமுக்கு பல்பு

அழுகையுடன் வெளியேறிய ஜனனியை கட்டிப்பிடித்து ஆறுதல் படுத்தலாம் என நினைத்த ராமுக்கு உடனடியாக ரச்சிதா ஆறுதல் பண்ண ஆரம்பித்ததும் சரியான பல்பு வாங்கிவிட்டார் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஜனனி ஆர்மி கிரையிங்

ஜனனி ஆர்மி கிரையிங்

ஜனனியை பேச விடாமல் படு பாவி தனலட்சுமி, விக்ரமன் எல்லாம் இப்படி ரெட் லைட் அடித்து பேபிம்மாவை அழ வச்சிட்டாங்களே என ஜனனி ஆர்மியும் கூட சேர்ந்து அழுது கொண்டிருக்கிறது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த வாரமே ஒரே அழுகாச்சி வாரமாக மாற்றி பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டையை மூட்டி விட்டு டிஆர்பியை ஏற்றி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X