Bigg Boss Tamil 6: அசீமின் ஆணவத்தை அடக்கிய கமல்.. முதலில் மட்டுமல்ல டாப் 3 இடத்திலும் அசீம் இல்லை!
சென்னை: முடி குறித்த அசிங்கமான வார்த்தையை பேசிய ஏடிகே கூட உடனடியாக அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்.
ஆனால், அப்பவும் விக்ரமன், ஏடிகே பிரச்சனையையே பெரிதாக்க துடித்துக் கொண்டிருந்த அசீமுக்கு கடைசியில் பெரிய ஆப்பாக அடித்து அவரது ஆணவத்தை அடக்கி விட்டார் கமல்ஹாசன்.
எப்போதுமே முதலில் சேவ் ஆகிவிடும் அசீம் சனிக்கிழமை எபிசோடில் சேவ் ஆகவே இல்லை.

அசீம் மாதிரி ஆகிடாதீங்க
இதற்கு மேல் அசீமை கமல் எப்படி அசிங்கப்படுவாருன்னு தெரியல, முடி என்கிற வார்த்தையை ஆபாசமாக திட்ட பயன்படுத்தும் வார்த்தையிலேயே அசீமை திட்டிய ஏடிகேவின் காட்சியை எடிட் செய்ததற்கு விஜய் டிவிக்கு நன்றி கூறிய கமல்ஹாசன். அசீம் மாதிரி அசிங்கமானவராக மாறிவிடாதீங்க என்கிற எச்சரிக்கையை விடுத்து அசீமை ஒட்டுமொத்தமாக வச்சு செய்து விட்டார்.

அடங்கிய திமிர்
நாமினேஷன் வந்து விட்டாலே, எப்படியாவது நாம் தான் முதலில் சேவ் ஆகிவிடுவோம் என நினைத்து இருமாப்பில் திரிந்து கொண்டு இருந்த அசீமுக்கு சனிக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் சூரசம்ஹாரமே செய்து விட்டார். கடைசி வரை அவரை சேவ் செய்யாமல் ஒட்டுமொத்த திமிரையும் அடக்கி இறுதியில் அழ வைத்து விட்டார்.

ஃபர்ஸ்ட் சேவ் யாரு
இந்த வாரம் திருடனாக இருந்து சிறப்பான விளையாட்டை கொடுத்த கதிரவன் தான் அதிக ஓட்டுக்களுடன் முதலில் சேவ் ஆனார் என கமல் சொன்னதுமே அதுவரை நக்கலாக சிரித்து விக்ரமனை கோர்த்து விட்டுக் கொண்டிருந்த அசீம் டோட்டலாக பீஸ் போன பல்பாக மாறிவிட்டார்.

2வது இடத்தில் குயின்ஸி
ஜனனி தான் இரண்டாவது இடத்தில் சேவ் ஆவார் என எதிர்பார்த்து வந்த நிலையில், அவரும் சனிக்கிழமை எபிசோடில் சேவ் ஆகாமல் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தனக்கு கிடைக்க வேண்டிய ஓட்டை தனா தடுத்தார் என எதிர்த்து பேசிய நிலையில், குயின்ஸி இந்த வாரம் இரண்டாவதாக சேவ் ஆகி உள்ளார்.

ஆயிஷா சேவ்
3வது இடத்தில் கூட அசீம் அல்லது ஜனனி சேவ் ஆகவில்லை. இவர்கள் இருவரையும் விட இந்த வாரம் சிறப்பாக விளையாடிய ஆயிஷா 3வது நபராக சேவ் ஆகி சனிக்கிழமை எபிசோடையே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்ல வைத்து விட்டது. அசீமின் பிஆர் க்ரூப் என்ன பண்றாங்க வெளியே என யோசித்து கேமரா முன்பாக நின்று புலம்பவே ஆரம்பித்து விட்டார்.

கமல் சம்பவம்
சிரித்துக் கொண்டே அசீமுக்கு புத்தி புகட்டி உள்ளார் கமல்ஹாசன் என பிக் பாஸ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அசீமை இப்படி கடைசி வரை உள்ளே வச்சி உள்குத்தாக குத்தி அனுப்பும் முடிவுக்கே கமல் வந்து விட்டார் போல என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

ரசிகர்கள் ஹாப்பி
அசீம் சனிக்கிழமை எபிசோடில் முதல் ஆளாக மட்டுமின்றி 3வது ஆளாக கூட சேவ் ஆகாத நிலையில், எங்கே இவரெல்லாம் டைட்டில் வின்னராக ஆகிவிடுவாரோ என பயந்து கிடந்த பிக் பாஸ் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு அசீம் உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











