சொந்த காசுல சூன்யம் வச்சிக்கிட்ட அமுதவாணன்.. அடேங்கப்பா கமல் என்னம்மா சிரிக்கிறாரு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வெற்றிகரமாக 26 நாட்களை கடந்துள்ள நிலையில் 27வது நாள் 2வது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
இந்த புரமோவில் அமுதவாணனை பார்த்ததுமே பிக் பாஸ் ரசிகர்கள் பயங்கரமாக அப்செட் ஆகிவிட்டனர். கடந்த சீசன் ராஜு ஜெயமோகன் போல இந்த சீசன் அமுதவாணனுக்கு டைட்டில் எங்கே தூக்கிக் கொடுத்து விட போகிறார்களோ என்கிற அச்சமே ஏகப்பட்ட ரசிகர்களின் அடிமனதில் எழுந்துள்ளது.
ஆனால், கமல்ஹாசன் அப்படி குழந்தை போல சிரிக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

மொக்கை வாரம்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சுவாரஸ்யத்தை கூட்டும் விதமாக பல டாஸ்க்குகளை பிக் பாஸ் டீம் பிளான் செய்தாலும், அதை இந்த சீசன் போட்டியாளர்கள் எந்தளவுக்கு சொதப்பி எடுக்க முடியுமோ அந்தளவுக்கு சொதப்பி இந்த வாரத்தையே மொக்கை வாரமாக மாற்றி விட்டனர். அதனால் தான் சனிக்கிழமை எபிசோடு ப்ரோமோவில் கமலுக்கே என்ன பஞ்சாயத்து செய்வது என்று தெரியாமல் அமுதவாணனை பேசவிட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சொந்த காசுல சூன்யம்
பிக் பாஸிடம் சிக்கன் கேட்டாலோ, சாக்லேட் கேட்டாலோ கொடுக்க மாட்டார் என நினைத்து தான், என் தம்பிக்கு பதிலாக நான் சிறைக்கு செல்கிறேன் என மனோகரா பட சிவாஜி மாதிரி வசனம் பேசிவிட்டு சொந்த காசுல சூன்யம் வைத்துக் கொண்டதை போல இந்த வாரம் சிறைக்கு சென்ற சோகக் கதையை சிரித்துக் கொண்டே சொல்ல, கமலும் சிரித்து விட்டார்.

ஆனந்த சிரிப்பு
அமுதவாணன் பேச்சை கேட்க முடியாமல் இந்த ப்ரோமோவையே ஏகப்பட்ட ரசிகர்கள் ஸ்கிப் செய்ய நினைத்தாலும், கமல்ஹாசனின் அந்த குழந்தைத்தனமான ஆனந்த சிரிப்பை பார்க்கவே நிச்சயம் இந்த ப்ரோமோவை பலரும் பார்த்து வருகின்றனர். அடுத்த ப்ரோமோவிலாவது வறுத்து எடுப்பாரா? இல்லை விக்ரமனுக்கு பாராட்டா? என கேள்விகள் கிளம்பி உள்ளன.

பெரிய கைதட்டல்
சனிக்கிழமை எபிசோடில் மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு எதிரான டிராமாவை போட்டு அதில் தத்ரூபமாக நடித்து நானும் சினிமாக்காரன் தான்டா என நிரூபித்த விக்ரமனுக்கு அரங்கமே அதிரும் வண்ணம் கைதட்டல் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கண்டிப்பாக அடுத்த ப்ரோமோ அதுவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்..


Click it and Unblock the Notifications











