Don't Miss!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Bigg Boss Tamil 6: ஓப்பன் நாமினேஷன் என்றதும் பூசி மெழுகிட்டீங்களா.. ஹவுஸ்மேட்ஸை விளாசிய கமல்!
சென்னை: இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் எப்படி காரசாரமாக இருந்ததா? என கமல் கேட்டதும், நான் வந்தது எல்லாம் ரொம்ப அன்ஃபேர் என ராம் பேசும் காட்சிகளுடன் இன்றைய 3வது ப்ரமோ பட்டைய கிளப்புகிறது.
உடம்பு முடியவில்லை என்றால் கூட லேசான இருமல் தான் பாஸ், பிக் பாஸுக்கு எல்லாம் லீவு போட மாட்டேன் என அதிரடியாக ஆஜர் ஆன கமல், ஹவுஸ்மேட்ஸ்களயும் விளாசித் தள்ளி உள்ளார்.
கோப்பை கழுவாதது, நீதிபதிகளாக இருந்து சிரித்துக் கெடுத்தது, மொழி பிரச்சனை என பல விஷயங்கள் இந்த எபிசோடில் அலசப்பட்டுள்ளதாக உளவுச் செய்திகள் வெளியாகி உள்ளன.
வழக்குடன் வந்த கமல்..குற்றவாளி யார்? சேஃப்பா விளையாடும் போட்டியாளர்.. தரமான சம்பவம் லோடிங்!

கமல் வந்துட்டாரு
உடல் நலக்குறைவு காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவாரா? மாட்டாரா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால், லேசான காய்ச்சல் தான் கமல் வருவார் என்று எதிர்பார்த்ததை போலவே அவர் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார்.

ஓப்பன் நாமினேஷன்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. அசீம், தனலட்சுமி, மணிகண்டன், ராபர்ட் மாஸ்டர், ராம், கதிரவன் உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். ஓப்பன் நாமினேஷன் ரொம்பவே ஃபேர் பிளேவாக இல்லை என்றும் சேஃப் கேமாக இருந்தது என விமர்சிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான கேள்விகளை கமல் எழுப்பி உள்ளார்.

அன்பு டீம் 2.0
ஒரு டீம் குள்ள மட்டும் நாமினேஷனே பண்ணாம இருந்துட்டாங்க என அன்பு டீம் 2.0 உருவாகி இருப்பதை அசீம் போட்டு உடைத்து விட்டார். கமல் முன்பு தான் ரெட் ஸ்டாம்ப், சக்கரை தண்ணி என எல்லாத்தையும் அசீமுக்கு வரிசையா அனைவரும் கொடுப்பது போல நாமினேஷனும் இந்த வாரமும் அசீம் பெயரை லைனா சொன்னா அவர் சும்மாவா இருப்பாரு..

நகைப்புக்குரியது
மணிகண்டனை நாமினேட் செய்ய முடிவு செய்து விட்டு, அவர் ஸ்ட்ராங் பிளேயர் அதற்காக நாமினேட் செய்கிறேன் என சொன்னதெல்லாம் ரொம்பவே நகைப்புக்குரியதாக இருந்தது அண்ணா என கமலிடம் அன்புத் தம்பி விக்ரமன் பேசிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கடுப்பான கமல்
ஓப்பன் நாமினேஷன் வச்சி உங்களுக்குள் பெரிய சண்டையை மூட்டி விடலாம் என போட்டத் திட்டத்தையும் பாழாக்கிட்டீங்க, நீதிமன்றம் செட்டப் போட்டு செலவு செஞ்சதும் வேஸ்ட், இந்த சீசன் பெஸ்ட்டுன்னு பார்த்தா, இவ்ளோ வொர்ஸ்ட்டாகிட்டீங்களே என கமல் வெளுத்து வாங்கி உள்ள காட்சிகள் இன்றைய ப்ரமோ 3ல் இடம்பெற்றுள்ளது.