தனலட்சுமியை அப்படி தள்ளிவிட்ட மணிகண்டன்.. ’போடா டேய்’ என ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனை திட்டிய தனா!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் பெயரை எந்தளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்தளவுக்கு டேமேஜ் செய்து வருகிறார் அவரது அண்ணன் மணிகண்டன்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே தேவையற்ற சண்டையை பிடிவாதமாக போட்டு வருகிறார். விக்ரமனுக்கு எதிரான மனநிலையை கொண்டிருக்கும் மணிகண்டன் கடந்த வார இறுதியில் கமலிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

தனலட்சுமியை தள்ளி விட்டு அவர் கையில் இருந்த ஷீட்டை பறித்துக் கொண்ட மணிகண்டனை போடா டேய் என தனலட்சுமி அசிங்கமாக திட்டிய காட்சிகள் பரபரப்பை கிளப்பி உள்ளன.

விபரீத விளையாட்டு

விபரீத விளையாட்டு

பிக் பாஸ் வீட்டில் இந்த முறை பிசிக்கல் டாஸ்க் எல்லாமே ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கும் விதமாகவே விபரீத விளையாட்டாக மாறி உள்ளது. பொம்மை டாஸ்க்கில் ஷெரினாவின் மண்டையில் அடிபட்டு அவர் பேண்டேஜ் எல்லாம் ஒட்டிக் கொண்டு பெரிய கலவரமே நடந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு பக்கம் ரச்சிதாவின் கை மாட்டிக் கொண்டது. இன்னொரு பக்கம் மணிகண்டன் வேண்டுமென்றே தனலட்சுமியை தள்ளிவிட்டதும் இன்றி அவருடன் போட்ட சண்டை இருக்கே ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

ரச்சிதாவை நசுக்கிய ஏடிகே

ரச்சிதாவை நசுக்கிய ஏடிகே

ரச்சிதாவை எப்போ யார் அலேக்காக தூக்கலாம், நசுக்கலாம் என்கிற ரீதியிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. விளையாட்டுன்னு வந்துட்டா துணிந்து இறங்கி விளையாடி வரும் ரச்சிதாவை ஒரே நசுக்காக ஏடிகே நசுக்க, அவரது கை சிக்கிக் கொண்டது. உடனடியாக பிக் பாஸ் வீட்டின் ஆபத் பாண்டவனான அசீம் ஓடி வந்து ஏடிகேவை பிடித்துத் தள்ளி ரச்சிதாவை காப்பாற்றினார். ஆனால், அவரது கையில் சரியான காயம் ஏற்பட்டு விட்டது.

தனாவை தள்ளிவிட்ட மணி

தனாவை தள்ளிவிட்ட மணி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனான மணிகண்டன் தனலட்சுமி அந்த கோல்டன் ஷீட்டை எடுக்க முயற்சிக்கும் போது அவரை பிடித்துத் கீழே தள்ளிவிட்டு, அவரது கையில் இருந்து ஷீட்டை பிடுங்கிக் கொண்டு ஓடியதும் சண்டை ஸ்டார்ட் ஆனது. மணி நீ பண்ணது ரொம்ப தப்பு மணி என அமுதவாணன் எகிற ஆரம்பித்தார்.

போடா டேய்

போடா டேய்

எப்படி புடிச்சி தள்ளிவிட்டான் பாருங்கன்னு அழுது ஒப்பாரி வைத்த தனலட்சுமிக்கும் மணிகண்டனுக்கும் இடையே கடும் சண்டை எழுந்த நிலையில், தனலட்சுமியை அடித்து விடுவது போல கிட்டே முரண்டு பிடித்து மணிகண்டன் நின்ற நிலையில், போடா டேய் என அசிங்கமாக தனலட்சுமி திட்டினார். அசீம் உடனடியாக அங்கே வந்து அப்படியெல்லாம் பேசாதம்மா, கேமராலாம் பார்க்குதுன்னு பேசிய காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு சிரிப்பை தான் வரவழைக்கின்றன.

மிரட்டிய மணிகண்டன்

மிரட்டிய மணிகண்டன்

போடான்னு எப்படி சொல்லுவ, உன் வயசு என்ன? என் வயசு என்ன? உன் கடையில இருக்கிற பொருளை எல்லாம் திருடிக்கவா என கேட்டதும், எடுத்துக்கோ டான்னு மீண்டும் மணியை தனலட்சுமி அவமானப்படுத்த 'அட தேனட' கடையில் உள்ள பொருட்களை மணிகண்டன் எடுக்க செல்ல மற்ற ஹவுஸ்மேட்கள் தடுக்கும் காட்சிகள் களைகட்டின. இந்த வாரம் தனலட்சுமி உடன் சண்டை போட்டது மணிகண்டன். ஒவ்வொரு வாரமும் தனாவிடம் ஒருத்தர் சண்டை போட்டே பிரபலமாகி விடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X