Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுப் போட சொல்லியும் மணி நிலைமை இப்படி ஆகிடுச்சே.. கடைசி நேர ட்விஸ்ட்!
சென்னை: இந்த வாரம் நடைபெற்ற ஓப்பன் நாமினேஷனில் ஸ்ட்ராங் போட்டியாளர் மணிகண்டன் ஒரு முறையாவது நாமினேஷனில் வரட்டும் என நினைத்து அவரை நாமினேட் செய்கிறோம் என ஜோக்காக ஆரம்பித்த விஷயம் அவரை கடைசியில் எங்க கொண்டு வந்து இருக்குன்னு அவரே பார்த்து புரிந்து கொண்டிருப்பார்.
எதற்கெடுத்தாலும் அப்படி இல்லை சார் என அசடு வழிய பேசிவிட்டு மைனா உடன் சேர்ந்து கொண்டு அந்த விஷயத்தையே செஞ்சிட்டு இருக்கீங்க என தனலட்சுமி மண்டைக்கு உரைக்கும் படி சொல்லியதும் ஓ அப்படியா என யோசிக்கும் மணிகண்டன் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்.
கடைசி நேரத்தில் எவிக்ஷன் கார்டு உடன் கமல் மணிகண்டன் என சொல்லி கொடுத்த ட்விஸ்ட் இருக்கே அது வேறலெவல்.
அப்போ ஹீரோயின்.. இப்போ என்ன ரோல்? 31 வருடத்திற்கு பிறகு சல்மான் கான் படத்தில் நடிக்கும் ரேவதி!

மணி மைனா
பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் குயின்ஸி அப்பா மகள் ரிலேஷன்ஷிப் என்றால், மணிகண்டன் மற்றும் மைனா நந்தினி நெருங்கிய நண்பர்களாக இருந்து விளையாடி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை அசீம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் தொண்டைக் கிழிய பேசி பலருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.

ராம் சேவ்
இந்த வாரம் ராபர்ட் மாஸ்டரா? ராமா? யார் வெளியே போவார் என கேள்விகள் எழுந்து வந்த நிலையில், கடைசியில் ராம் மணிகண்டனுக்கு முன்பாக முன்னேறி சேவ் ஆனது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. விக்ரமன் கூட மணிகண்டன் தான் அடுத்து சேவ் ஆவார் என சொன்ன நிலையில், ராம் கூட சேவ் ஆகலாம் என ரச்சிதா சொன்னதை போல ராம் இந்த வாரம் விளிம்பு நிலைக்கு செல்லாமல் காப்பாற்றப்பட்டார்.

கடைசி இடம்
ராபர்ட் மாஸ்டரா? மணிகண்டனா? யார் வெளியே போகப் போகிறார் என்கிற நிலையில், மணிகண்டன் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார். கடைசியில் சிரித்துக் கொண்டே உங்களை எங்க கொண்டு வந்து நிறுத்திட்டாங்க பார்த்தீங்களா என கமல் சாரே வச்சு செய்து விட்டார்.

ராபர்ட் மாஸ்டர் எவிக்ஷன்
ஆனால், கடைசியில் ஏற்கனவே எதிர்பார்த்ததை போலவே ராபர்ட் மாஸ்டர் எவிக்ட் ஆகி இந்த வாரம் வெளியே சென்று விட்டார். ஒரு வேளை மணிகண்டன் எவிக்ட் ஆகியிருந்தால் வேறலெவல் ட்விஸ்ட் இருந்திருக்கும். ஆனால், மணிகண்டன் பெயரை எவிக்ஷன் கார்டை கையில் வைத்துக் கொண்டு கமல் விளையாடியது செம சூப்பர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுக் கேட்டும்
இந்த வாரம் தனது அண்ணன் மணிகண்டனை எப்படியாவது காப்பாத்தி விட்ருங்க என தனது ரசிகர்களிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுக் கேட்டும் மணிகண்டன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்போ ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட் போட்டு ஓட்டுக் கேட்டும் ஒரு பயலும் தமிழ்நாட்டில் மதிக்கவில்லையா? அல்லது இன்ஃப்ளூயன்ஸுக்கு ஆளாகவில்லையா என்கிற கேள்வி எழுகிறது.

சோலோ கேம் ஆடுவாரா
அசீம் போல மணிக்கும் மரண பயத்தை காட்ட வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் டீம் செய்த சித்து வேலையா? இது என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதை பார்த்து புரிந்து கொண்டு இதற்கு மேலாவது சோலோ கேம் ஆடுவாரா? மணி என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.