Don't Miss!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமா குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- News
"எப்படி இதை சாப்பிடறாங்க.." சைவம் சாப்பிடறவங்கள பார்த்தாலே எனக்கு பாவமா இருக்கும்.. ரஜினிகாந்த் கலகல
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
Bigg Boss Tamil 6 Eviction: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் மணிகண்டன்.. அப்போ மைனா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் திடீரென ஃப்ரீஸ் டாஸ்க் வைக்க காரணமே ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளே வரத்தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்ததை போலவே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மணிகண்டன் தான் வெளியேறுகிறார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இந்த சீசனில் கலந்து கொண்டார்.
அசீமுக்கு ஆதரவாகவும் விக்ரமனுக்கு எதிராகவும் விளையாடுவதையே தனது கேமாக மாற்றிக் கொண்ட நிலையில், சொந்த கேமை ஆட தவறிவிட்டார் மணிகண்டன்.
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஜனனி? விக்ரமன் நியாயமான ஆளே கிடையாது என விளாசிய அசீம்

ரச்சிதா எஸ்கேப்
இந்த வாரம் நாமினேஷனில் ரச்சிதாவை தவிர மற்ற அனைத்து ஹவுஸ்மேட்களும் ரெட் கார்டு வாங்கி நாமினேட் செய்யப்பட்டனர். விக்ரமன், ஷிவின், அசீம், மணிகண்டன், கதிர், மைனா, அமுதவாணன், ஏடிகே உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனை எதிர்கொண்டனர். இந்நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என்கிற கருத்துக் கணிப்பு ரிசல்ட்டுகள் வெளியாகி உள்ளன.

முதல் சேவ்
இந்த வாரமும் சனிக்கிழமை எபிசோடிலேயே முதல் ஆளாக விக்ரமன் சேவ் ஆகப் போகிறார் என்றும் 2வதாக ஷிவின் சேவ் ஆவார் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல வாரங்களாக விக்ரமன் முதல் ஆளாக சேவ் ஆகி வரும் நிலையில், இந்த சீசன் டைட்டில் வின்னரும் அவர் தான் என ரசிகர்கள் இப்பவே திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

ஜோடியா சேவ் ஆகுறாங்க
விக்ரமனை தொடர்ந்து ஷிவின் மற்றும் கதிர் இந்த வாரம் ஜோடியா சேவ் ஆவார்களா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த வாரம் சேவ் ஆகும் பட்டியலை வைத்து டாப் 5 இடத்தில் யாரெல்லாம் இருப்பார்கள் என்பதையும் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் ஹவுஸ்மேட்ஸ் கணித்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டேஞ்சரில் அசீம்
வெளியே பிஆர் வைத்துக் கொண்டு இத்தனை வாரமும் விளிம்பில் அசீம் சேவ் ஆகி வருகிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், இந்த வாரமும் டேஞ்சர் ஜோனில் அசீமையும் மணிகண்டனையும் கமல் உட்கார வைப்பார் என்றே எதிர்பார்க்கபடுகிறது. மைனாவும் இவர்களுடன் உட்காருவார் என எதிர்பார்கக்பப்டுகிறது. ஏடிகே மற்றும் அமுதவாணன் இந்த மூவருக்கும் முன்னதாக சேவ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

மணிகண்டன் தான்
கருத்துக் கணிப்பில் கடைசி இடத்தில் மைனா மற்றும் மணிகண்டன் இருவருமே சிறிய அளவிலான இடைவெளியில் உள்ளனர். ஆனால், தொடர்ந்து 3 வாரங்களாக பெண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் மணிகண்டன் தான் வெளியேறுவார் என கன்ஃபார்மே பண்ணி விட்டனர்.

ஐஸ்வரயா ராஜேஷ் வருகைக்காக
இத்தனை வாரங்களாக மணிகண்டனை சேவ் செய்து உள்ளே வைத்ததே அவரது சகோதரி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஃப்ரீஸ் டாஸ்க்கில் வருவார் என்பதற்காகத்தான் என்றும் மைனாவின் கணவர் வரவேண்டும் என்பதற்காகத்தான் மைனாவையும் உள்ளே வைத்துள்ளனர் என நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.