எல்லாரும் முதுகில் குத்திட்டாங்க.. பொன்னியின் செல்வன் நந்தினியான மைனா.. அதை தூக்கி எறிஞ்சிட்டாரே!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ராஜாங்கமும் அருங்காட்சியகமும் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், மைனாவுக்கு கடைசி சேவகி வேஷத்திற்கு கூட யாருமே ஆதரவு தராத நிலையில், அவர் கோபத்தில் பொங்கியுள்ள வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

ராணி, இளவரசி மற்றும் கடைசியாக காது கேட்காத வேலைக்காரி வரை பல இடங்களுக்கு அவர் போட்டியிட்டும் மைனாவுக்கு யாருமே ஓட்டுப் போடவில்லை.

அதனால், டென்ஷனான மைனா எல்லாரும் தன்னை முதுகில் குத்திட்டாங்கன்னு புலம்பும் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் இளவரசி

பிக் பாஸ் இளவரசி

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியதில் இருந்தே அழகான இளவரசியாக ரசிகர்களை கவர்ந்து வரும் இலங்கை பெண் போட்டியாளர் ஜனனி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் ரியல் இளவரசியாகவும் மாறி உள்ளார். ஜனனிக்கு சரியான கேரக்டர் தான் கிடைச்சிருக்கு என்றும் அவர் உண்மையாவே இளவரசி தான் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் நந்தினி

பொன்னியின் செல்வன் நந்தினி

ராணியாக ஆகலாம் என நினைத்த மைனாவுக்கு, கடைசியாக சேவகி வேஷம் கூட கிடைக்காத நிலையில், ராஜ்ஜியம் கிடைக்கவில்லையே என பொன்னியின் செல்வன் நந்தினி மாதிரி கோபத்தில் பொங்கிய மைனா நந்தினியின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

முதுகில் குத்திட்டாங்க

முதுகில் குத்திட்டாங்க

இளவரசியாக மைனா நந்தினிக்கு பதிலாக ஜனனியை தேர்வு செய்தபோதே அவர் கடுப்பாகி விட்டார். கடைசியாக காது கேட்காத சேவகி போஸ்ட்டாவது தனக்கு கொடுங்க என கெஞ்சியும் அவருக்கு எதுவுமே கிடைக்காத விரக்தியில் சமையல் அம்மா மைனா நந்தினி எல்லாரும் என்னை முதுகிலேயே குத்திட்டாங்க என புலம்பித் தள்ளி உள்ளார்.

ஷிவின் மீது கோபம்

ஷிவின் மீது கோபம்

இந்த வாக்குவாதத்தில் ஷிவின் மைனா நந்தினியை பார்த்து என்ன காமெடி பண்ணாருன்னு தெரியல, உடனே பில்லோ ஒன்றை எடுத்து ஷிவினை நோக்கி மைனா நந்தினி தூக்கி எறியும் பரபரப்பான காட்சிகள் இன்றைய 3வது ப்ரோமோவில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

மைனாவின் சுயரூபம்

மைனாவின் சுயரூபம்

இதுவரை ரொம்பவே சைலன்ட்டாக சிரித்த முகத்துடன் இருக்கும் மைனா நந்தினி அசீமுக்கு எதிராக பொங்கி எழுந்ததை போல இந்த வாரமும் தனது சுயரூபத்தை சீக்கிரமே காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மைனா நந்தினிக்கு ஹவுஸ்மேட்கள் ஒருத்தர் கூட ஆதரவு தெரிவிக்காமல் அழ விட்டு இருப்பது தான் தரமான சம்பவம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X