Don't Miss!
- News
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தீவிரம்: எஸ்டேட் மேனேஜரின் நண்பர் உட்பட 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன்!
- Sports
உம்ரான் மாலிக்கை சுற்றிய மத சர்ச்சை.. ஹோட்டல் வீடியோவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்ன ஆனது??
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Finance
அதானி பங்குகள் சரிவு.. எல்லாம் 'அவங்க' பாத்துப்பாங்க.. நிர்மலா சீதாராமன் பதில்..!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Bigg Boss Tamil 6 Eviction: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இவங்க தான் வெளியே போவாங்களாம்!
சென்னை: விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் 10 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த பத்து வாரங்களில் நாமினேட் ஆகாமல் எஸ்கேப் ஆகி வந்த ஷிவின் இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ளார்.
வழக்கம் போல விக்ரமன், அசீம், தனலட்சுமி, ரச்சிதா உள்ளிட்ட போட்டியாளர்களும் நாமினேட் ஆகி உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்கிற கருத்துக் கணிப்பை இங்கே பார்ப்போம்..
அயலான்
படத்தில்
அவதார்
டீம்...
இதெல்லாம்
தேவையா
பாஸ்...
சிவகார்த்திகேயனை
எச்சரிக்கும்
ரசிகர்கள்?

எதிர்பார்க்காத எவிக்ஷன்
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏடிகே அல்லது மணிகண்டன் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக ஜனனியை கமல் எவிக்ட் செய்திருந்தார். மணிகண்டனுக்கு சீட்டு குலுக்கிப் போட்டு பெயர் வந்த நிலையில் அவர் தான் ரியல் எவிக்ட் ஆனவர் என்றும் கடைசி நேர கோல்மால் நடந்து விட்டதாக ரசிகர்கள் பொங்கினர்.

இருவருமே எஸ்கேப்
இந்த வாரம் மணிகண்டன் மற்றும் ஏடிகே இருவரில் ஒருவர் நாமினேஷனுக்கு வந்தால் அவர்கள் நிச்சயம் வெளியேறிவிடுவார்கள் என்று தெரிந்தே இருவரையும் சேவ் செய்து விட்டனர் என கமெண்ட்டுகள் குவிகின்றன. ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் இந்த வாரமும் எஸ்கேப் ஆகி உள்ளார். ஏடிகேவை யாருமே நாமினேட் செய்யவில்லை.

7 பேர் நாமினேஷன்
வழக்கம் போல இந்த வாரமும் அசீம், விக்ரமன், தனலட்சுமி உள்ளிட்ட ஆல்டைம் நாமினீஸ் நாமினேட் ஆகி உள்ளனர். ரச்சிதா, மைனா நந்தினி, கதிரவன் உடன் முதல் முறையாக ஷிவின் நாமினேட் ஆகி உள்ளார். இந்த 7 பேரில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார் என்பது தான் ரசிகர்களின் ஒரே கேள்வியாக உள்ளது.

டேஞ்சர் ஜோனில் யார்
ஷிவின், ரச்சிதா, கதிரவன், தனலட்சுமி மற்றும் மைனா நந்தினி ஆகிய 5 பேர் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். அதிக வாக்குகளுடன் விக்ரமன் மற்றும் அசீம் கண்டிப்பாக சேவ் ஆகிவிடுவார்கள் என்கிற நிலையில், ரசிகர்களுக்கு ஷிவினுக்கு எந்தளவுக்கு ஓட்டுக்கள் போடப் போகின்றனர் என்பது இந்த வாரத்தில் தெரிந்து விடும்.

மைனா வெளியேறுவாரா
இந்த லிஸ்ட்டில் குறைவான ஓட்டுக்களுடன் மைனா நந்தினி இப்போதைக்கு கடைசி இடத்தில் உள்ளார். மைனா நந்தினி வெளியேறுவாரா? இல்லை தனலட்சுமி வெளியேறுவாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. கடைசி நேர ட்விஸ்ட் என ஷிவினை வெளியேற்றினால் ரசிகர்கள் நிச்சயம் கடுப்பாகி விடுவார்கள்.