சிங்கம்னா விக்ரமன் தான்.. வெளியேறிய நிவாஷினி கொடுத்த முதல் பேட்டி.. அசல் கோலாரை சந்தித்தாரா?
சென்னை: நிவாஷினி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அளித்த முதல் பேட்டி பிக் பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து அழகு பதுமையாக பிக் பாஸ் வீட்டுக்கு வந்த நிவாஷினி அதிக நேரத்தை ஆரம்பத்தில் அசல் கோலார் உடன் களித்தார்.
அசல் வெளியேறியதும் கதறி அழுத நிவாஷினி அளித்துள்ள முதல் பேட்டியில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் குணங்களை பட்டியலிட்டு பேசி உள்ளார்.

மோசமா பேசுறாங்க
வெளியே நான் வரும் வரை என்னுடன் சிரித்துப் பேசியவர்கள் தற்போது என்னை பற்றி தப்பா பேசுறதை எல்லாம் பார்த்தேன் ரொம்ப வருத்தமாக இருக்கு. அதே போல யாரெல்லாம் என்னை நாமினேட் பண்ணாங்கன்னு பார்த்து ஷாக் ஆகிட்டேன். எல்லாரும் உள்ளே ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறாங்க என தனது குழந்தைத்தனமான சிரிப்பு கலந்த பேச்சுடன் நிவாஷினி பேசி உள்ளார்.

விக்ரமன் ஷிவின் ஃபைனஸ்ல் போவாங்க
இந்த வீட்டில் விக்ரமன் மற்றும் ஷிவின் கேம் புரிந்து சிறப்பாக விளையாடிட்டு வராங்க.. ரெண்டு பேருமே டஃப் கன்டெஸ்டன்ட் இருவருமே ஃபைனல்ஸ் கண்டிப்பாக போவாங்கன்னு நினைக்கிறேன் என நிவாஷினி பேசி உள்ளார். ஷிவினின் கேம் பர்சனலாகவே தனக்கு ரொம்ப பிடித்துள்ளது எனக் கூறியுள்ளார்.

அசீம் பிடிக்காது
எனக்கும் அசீமுக்கும் உள்ளே செட் ஆகல.. எனக்கு பிடிக்காத போட்டியாளர் என்றால் அது அசீம் மட்டும் தான். ஆனால், அவரும் நல்ல பிளேயர் மத்தவங்களை பேச விட முடியாதபடி பேசிவிடுவார். ஆனால், அவருக்கும் எனக்கும் ஏன் செட் ஆகலன்னு தெரியல என அசீம் பற்றியும் கூறியுள்ளார்.

ஜனனி ஒரு முதலை
பிக் பாஸ் வீட்டில் பாம்பு யார் என்கிற கேள்விக்கு அதை நான் சொல்ல மாட்டேன் என மறுத்து விட்ட நிவாஷினி முதலை ஜனனி தான் என்று அதிரடியாக கூறினார். அவ பார்க்கத் தான் அமைதியா இருப்பா, வாய்ப்பு வந்தா அப்படியே வாயை பிளந்து முழுங்கிவிடுவா என ஜனனி பற்றிய கூறிய நிவா தன்னை யானையாக பார்க்கிறேன் என்றார்.

சிங்கம்னா விக்ரம்
சிங்கம்னு யாரை சொல்வீங்க என கேட்கப்பட்ட கேள்விக்கு சிங்கம்னா அது விக்ரமன் தான். அவரை பார்த்தால் தான் அப்படியொரு தோற்றம் வருது. நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை செல்வார், டைட்டிலை வெல்லவும் வாய்ப்பு நிறையவே இருகு என விக்ரமனை புகழ்ந்து தள்ளி விட்டார் நிவாஷினி.

அசலை சந்தித்தாரா
நிவாஷினி பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே அசல் கோலார் உடன் தான் அதிக நெருக்கம் காட்டி வந்தார். அசல் கோலாரின் தினம் ஒரு லீலை என வெளியான பல வீடியோக்கள் நிவாவுடன் அவர் செய்த சேட்டைகளின் தொகுப்பாகவே இருந்தது. இந்நிலையில், வெளியேறிய நிவா அசலை சந்தித்தாரா என்றும் அவருடன் செல்ஃபி எடுத்து பதிவிடவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு நன்றி
சோஷியல் மீடியாவில் சிலவற்ற பார்த்தேன். ஆனால், எனக்கு எந்த கோபமும் இல்லை. எனக்காக நேரம் ஒதுக்கி மீம்ஸ் போட்டும், ரீல்ஸ் போட்டும் வந்த ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குயின்ஸியை ரொம்பவே மிஸ் செய்றேன். சீக்கிரம் அவளை பார்ப்பேன்னு நினைக்கிறேன் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











