Bigg Boss Tamil 6 Eviction: தப்பித்த குயின்ஸி.. அப்போ இந்த வாரம் வெளியேறப்போறது இவங்க தானா?

சென்னை: இளவரசியாக தன்னை தேர்ந்தெடுக்க விடாமல் விக்ரமனை தனலட்சுமி தடுத்து விட்டார் என்கிற நியாயமான கோரிக்கையை எழுப்பி பேசிய நிலையில், குயின்ஸிக்கு கடகடவென பிக் பாஸ் ரசிகர்கள் ஓட்டுப் போட்டு அந்த குஷி இடுப்பை இன்னும் கொஞ்சம் நாள் வைத்திருக்கலாம் என நினைத்து விட்டனர்.

ராபர்ட் மாஸ்டர் பாகுபலியாக மாறி ரச்சிதாவிடம் வேறலெவல் ரொமான்ஸ் செய்து வரும் நிலையில், அவரும் சேஃப் ஜோனில் தான் உள்ளார்.

இந்நிலையில், கடைசியில் டேஞ்சர் ஜோனுக்கு சென்ற அந்த போட்டியாளர் யார்? என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம் வாருங்கள்..

அசீம் ஸ்கெட்ச்

அசீம் ஸ்கெட்ச்

அசீம் ரசிகர்களின் பல்ஸை நல்லாவே புரிந்து வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். வார இறுதியில் மன்னிப்பு கேட்பது, வாரத்தின் முதல் மூன்று நாட்கள் அமைதி காப்பது. கடைசி 4வது மற்றும் 5வது நாளில் சண்டைப் போட்டால், அதற்கு முன்னதாகவே கணிசமான ஓட்டுக்கள் குவிந்து தான் காப்பாற்றப்படுவோம் என பக்கா ஸ்கெட்ச் போட்டு விளையாடி வருகிறார்.

இளவரசி 2ம் இடம்

இளவரசி 2ம் இடம்

அதிக ஓட்டுக்களை பெற்று அசீம் இந்த வாரம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், அலட்டிக் கொள்ளாமல் அழகாக 2வது இடத்தை பிடித்திருக்கிறார் ஜனனி. அவருடைய ஆட்டம் சூடு பிடித்தால் இன்னமும் அசீமை தாண்டி அதிக ஓட்டுக்களை அள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னேறிய கதிர்

முன்னேறிய கதிர்

இந்த வாரம் கதிரவனின் கேம் ரொம்பவே நல்லா இருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அசீம் தப்பா பேசிய நிலையில், அவரை எதிர்த்து கேள்வி கேட்டது மட்டுமின்றி ஷிவினை காப்பாற்ற அந்த தப்பை நான் தான் செஞ்சேன் எனக் கூறியது என ரவுண்டு கட்டி விளையாடி வரும் கதிரவன் 3வதாக சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ லீலை

ராஜ லீலை

இந்த வாரமும் எப்படியாவது ராபர்ட் மாஸ்டரை காப்பாற்ற வேண்டும் என்றே அவருக்கு ராஜா வேஷம் கொடுக்கப்பட்டது போல இருக்கு என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர் இருவருமே கதிருக்கு அடுத்த இடத்தில் பக்கா சேவாக உள்ளனர்.

தப்பித்த குயின்ஸி

தப்பித்த குயின்ஸி

இந்த வாரம் எவிக்‌ஷனில் சிக்கும் அளவுக்கு ஆரம்பத்தில் குயின்ஸியின் நிலை படுமோசமாக இருந்தது. ஆனால், செந்தமிழில் பேசுவது, தனலட்சுமியிடம் நியாயத்திற்காக வாதாடியது என அமைதியாக இல்லமால், துணிச்சலுடன் பேசி வரும் க்யூட் குயின்ஸிக்கு ஓட்டுப் போட்டு இந்த வாரம் நீ வெளியே போக மாட்டேம்மா என ரசிகர்கள் முடிவு கட்டி உள்ளனர்.

யாரு எவிக்ட் ஆவாங்க?

யாரு எவிக்ட் ஆவாங்க?

கடைசி இடத்தில் ஆயிஷா மற்றும் நிவாஷினி தான் இந்த வாரம் ரொம்பவே மோசமான நிலையில் உள்ளனர். சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினி இன்னமும் எந்தவொரு பெரிய ஆர்வத்தையும் விளையாட்டில் காட்டவே இல்லை. இளவரசி போட்டிக்கு நின்ற நிவாஷினி கடைசியாக சேவகி போட்டிக்கு கூட நிற்க தயங்கியது. இன்னமும் அசல் கோலாரை பிரிந்த ஏக்கத்தில் தனிமையில் வாடுவது என இருந்து வரும் நிலையில், இந்த வாரம் நிவா தான் எவிக்ட் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவங்களுக்கும் நல்லது

அவங்களுக்கும் நல்லது

சிங்கப்பூரில் இருந்து இத்தனை பெரிய வாய்ப்பை தேடி பிடித்தாலும், அதை சரியாக நிவாஷினி கொஞ்சம் கூட பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. அசல் கோலார் இருந்த வரை அவரால் இவர் ஸ்க்ரீனில் தெரிந்தார். அவரும் இல்லாத நிலையில், இவர் இந்த வாரம் எவிக்ட் ஆவது நிவாஷினிக்கே ரொம்ப நல்லது என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X