இந்த வாரமும் எஸ்கேப்பா? அசீமுக்கு ரெட் கார்டு இல்லையாம்.. கண்டிக்கிற மாதிரி கண்டிச்சி விட்டாரா கமல்?
சென்னை: தனலட்சுமியை தப்பா பிடித்து தள்ளி விட்டது. திருநங்கை போட்டியாளரான ஷிவினை அசிங்கமாக கிண்டல் செய்தது என ஏகப்பட்ட பிளாக் மார்க்குகளை வாங்கி உள்ள அசீமுக்கு கடைசியாக சிறைத் தண்டனை கொடுக்கும் போதே பாவ மன்னிப்பு வழங்கப்படும் என நினைத்த நிலையில், கமல்ஹாசனும் அதே மன்னிப்பை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளுக்கான சூட்டிங் இன்று நடைபெற்று வரும் நிலையில், அசீம் தப்பித்து விட்டார் என்றே கூறப்படுகிறது.
பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் அசீமுக்கு இந்த வாரம் கமல் ரெட் கார்டு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிம்பிலிக்கா பிலாப்பி என பிக் பாஸ் டீம் கையை விரித்து விட்டதாக கூறுகின்றனர்.

அடுத்த பாலாவா
அசீம் தான் அனைவருடனும் சண்டைப் போட்டும் அவர்கள் செய்வது போலவே கைகளை அசைத்து இமிடேட் செய்து கிண்டல் செய்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டிஆர்பி ரேட்டிங் ஏற்படுத்தி கொடுப்பதால் அதற்குள் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பி விட்டால், ராம் ராமசாமி, ராபர்ட் மாஸ்டர், விஜே கதிரவன் போன்ற மிக்சர்களை வைத்துக் கொண்டு எப்படி கேம் ஆடுவது என்பதை உணர்ந்து அசீமை விட்டு வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

ரெட் கார்டு இல்லை
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட ஏழரைகளை கூட்டிய சின்னத்திரை நடிகர் அசீமுக்கு கண்டிப்பாக ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ஏகப்பட்ட ரசிகர்கள் மட்டுமில்லை பிரபலங்களே சிலர் கொந்தளித்து இருந்தனர். அசீம் திருநங்கை போட்டியாளரை பார்த்து அப்படி கிண்டல் செய்தது அசிங்கம் என சுரேஷ் தாத்தாவே கூறியிருந்தார். வனிதா, நமீதா மாரிமுத்து என பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வரும் முன்னாள் போட்டியாளர்களும் அசீமை கழுவி ஊற்றி உள்ளனர்.

அசீம் எஸ்கேப்
கண்டிப்பாக இந்த வாரம் எவிக்ஷன் உடன் சேர்த்து அசீமுக்கும் ரெட் கார்டு கொடுத்து கமல் தனது கெத்தை காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரமும் அசீமை கமல் சேவ் செய்து விட்டார் என்கிற பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன. அசீம் எப்படி தில்லாலங்கடி செய்து மன்னிப்பு கேட்டு எஸ்கேப் ஆனார் என்பதை பார்க்க ரசிகர்கள் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளுக்கு ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

வறுத்தெடுத்த கமல்
ரெட் கார்டு கொடுக்கவில்லை என்றாலும், அசீம் பண்ண வேலையை பார்த்து கமல் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. சும்மா இருந்தா அவரையும் சேர்த்து ரசிகர்கள் ட்ரோல் செய்வார்கள் அல்லவா? அதற்காக அசீமை எந்தளவுக்கு ரோஸ்ட் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு ஆண்டவர் வறுத்தெடுத்து உள்ளதாக கூறுகின்றனர்.

அப்போ என்டர்டெயின் மென்ட் இருக்கு
பிக் பாஸ் நிகழ்ச்சியே போட்டியாளர்கள் அடித்துக் கொள்வதை பார்க்கத்தான் என்கிற விதத்தில் தான் இந்தனை சீசன்களாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், அசீமை மீண்டும் உள்ளே வைத்து அடுத்த வாரமும் ரசிகர்களுக்கு ஆக்ஷன் பிளாக் என்டர்டெயின்மென்ட்டை வழங்க பிக் பாஸ் டீமும் பக்கவாக ரெடியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











