கதிரை காதலிக்கிறாரா குயின்ஸி.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அவரே சொன்ன சீக்ரெட்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய குயின்ஸி தனக்கும் விஜே கதிரவனுக்கும் இடையேயான உறவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ள பேட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளரான குயின்ஸி உண்மையாகவே அந்த வீட்டில் ஒரு குயினாகவே வாழ்ந்து வந்தார் என ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டார்.
படுத்துத் தூங்குவதை தவிர வேற எதுவும் செய்யாமல் 50 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்து கரும்பு தின்னக் கூலியும் வாங்கிக் கொண்டு சென்றார் என ட்ரோல் செய்யப்பட்டார்.

வெளியே வந்த குயின்ஸி
56 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த குயின்ஸி ஸ்டான்லி கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார். குயின்ஸி தான் 100 சதவீதம் வெளியேறுவார் என உள்ளே இருந்த ஹவுஸ்மேட்களே பலர் ஆணித்தரமாக சொன்னார்கள். குயின்ஸியும் தான் தான் வெளியேறுவேன் எனக் கூறிய நிலையில், இந்த வாரம் எவிக்ட் ஆனார் குயின்ஸி.

இன்ஸ்டா லைவ்
இந்த முறை மற்ற மீடியா சேனல்களுக்கு எல்லாம் பேட்டி கொடுப்பதற்கு முன்னதாக பிக் பாஸ் பிரபலங்கள் வெளியேறிய பின்னர் கொடுக்கும் முதல் பேட்டியை விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் இன்ஸ்டா லைவ் பக்கத்தில் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், குயின்ஸி கொடுத்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

ராபர்ட் மாஸ்டருடன் சந்திப்பு
பிக் பாஸ் வீட்டில் அப்பா மகளாகவே வாழ்ந்து வந்த ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் தங்கள் பாச உறவை தொடர்ந்து வருகின்றனர். வெளியேறிய நிலையில் குயின்ஸி ராபர்ட் மாஸ்டரை சந்திக்க அவர் கேக் வெட்டி சர்ப்ரைஸ் செய்த காட்சிகளும் ரசிகர்களை சந்தோஷத்தில் மிதக்க செய்தன.

கதிர் உடன் காதல்
பிக் பாஸ் வீட்டில் குயின்ஸிக்கும் கதிருக்கும் இடையே காதல் என கிசுகிசுக்கப்பட்டு வந்தன. ராபர்ட் மாஸ்டர் அப்பா, குயின்ஸி மகள் மற்றும் மாப்பிள்ளை கதிர் என பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், அது தொடர்பான கேள்விக்கு குயின்ஸி செம ஓப்பனாக பதில் அளித்துள்ளார்.

அதுவொரு பிராங்க்
பிக் பாஸ் போட்டியாளரான ஷிவினுக்கும் கதிர் மீது ஒரு கிரஷ் இருந்து வருகிறது. அதை அறிந்து கொண்டு அவரை பிராங் செய்யவே கதிரை காதலிப்பது போல தான் நடித்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார் குயின்ஸி. நானும் ஷிவினும் நல்ல நண்பர்கள். ஆனால், போட்டி என வந்து விட்டால் அவ மூட்டுற கலகம் வேற லெவல். அதனால் தான் நான் கலகம் மூட்டுறன்னு இப்படியொரு பிராங்க் பண்ணேன் என பேசியுள்ளார் குயின்ஸி.


Click it and Unblock the Notifications











