Bigg Boss Tamil 6: எனக்கு அது மேட்டரே இல்லை.. விக்ரமனிடம் கோபப்பட்ட குயின்ஸி.. செம டார்கெட்!
சென்னை: இந்த வாரம் அசீமை தனலட்சுமி என்ன தான் சண்டைக்கு வான்னு சீண்டினாலும் மனுஷன் இந்த ஒரு வாரமாவ்து சைலன்ட்டா இருந்து நல்ல பேர் வாங்கணும்னு அமைதியா இருக்காரு என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அதே நேரம் இண்றைய புரமோக்களில் எல்லாமே விக்ரமன் தான் ஒட்டுமொத்தமாக வந்து செல்வது அவர் தான் அடுத்த டார்கெட்டா எனக் கேட்கத் தூண்டுகிறது.
இந்நிலையில், குயின்ஸி கூட விக்ரமனை சும்மா வெளுத்து வாங்கும் புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

நல்லவரா கெட்டவரா
நாயகன் பட கமல்ஹாசன் போல மாறிவிட்டார் பிக் பாஸ் போட்டியாளரும் அரசியல்வாதியுமான விக்ரமன். விக்ரமன் பார்ஷியாலிட்டி பார்க்கிறார் என்றும் ஒரு சாராருக்கு சாதகமாகவே நேர்மையானவர் போல பேசுகிறார். ஆனால், ஒரு பாத்திரம் கூட கழுவுவதில்லை என 2வது புரமோவில் தான் ஏடிகே கழுவி ஊற்றி இருந்தார். இந்நிலையில், இந்த புரமோவில் குயின்றி வெளுத்து வாங்கி உள்ளார்.

ஜனனிக்கு சாதகமாக
பிக் பாஸ் வீடு இந்த வாரம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, டிவி ஷோ நிகழ்ச்சி இருக்கேன்னு பார்த்தால், கூட்டிட்டு வந்த போட்டியாளர்கள் எல்லாமே டம்மி பீஸ் ஆகவே உள்ள நிலையில் இந்த வாரம் ரொம்பவே சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், செய்தி வாசிக்கும் நிகழ்ச்சியில் ஜனனிக்கு சாதகமாக விக்ரமன் பேசியது குறித்து விவாதம் செய்துள்ளார் குயின்ஸி.

எனக்கு அது மேட்டரே இல்லை
ஜனனி செய்திவாசிப்பாளர் என்பதால் அவர் நல்லாத்தான் நியூஸ் வாசிப்பாங்க, ஆனால், அதெல்லாம் எனக்கு மேட்டரே இல்லை. அமுதவாணனிடம் பேசும் போது குயின்ஸி வேணாம்ல என நீங்க எப்படி சொல்லலாம் எனக்கேட்டு விட்டு அதற்கான விளக்கத்தை தயவு செஞ்சு கொடுக்க வேண்டாம் என்றும் நோஸ்கட் செய்துள்ளார்.

செம குத்தாட்டம்
குயின்ஸி இன்றைய எபிசோடில் செம குத்தாட்டம் போட்டு இருந்தார். Who's the Hero எனும் மன்மதன் அம்பு பட பாடலையும் அவர் பிராக்ட்டீஸ் செய்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு பக்கம் ஜனனியை ரசிகர்கள் சைட் அடித்து வந்தாலும், இன்னொரு பக்கம் குயின்ஸிக்கும் ஃபேன்ஸ் ஜாஸ்தி ஆகி வருகின்றனர்.

சிக்கலில் விக்ரமன்
ஏடிகே, குயின்ஸி என அடுத்தடுத்து விக்ரமனுக்கு எதிராக பிக் பாஸ் போட்டியாளர்கள் கிளம்பி உள்ள நிலையில், அடுத்த டார்கெட் அவர் தானா என்றும் விக்ரமன் உண்மையாகவே சார்பு இல்லாமல் நடந்து கொள்கிறாரா? என ரசிகர்கள் விவாதமே நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











