Don't Miss!
- Finance
2 நாளில் ரூ.18,000 கோடியை இழந்த LIC.. எல்லாம் அதானி குழுமத்தால் வந்த பிரச்சனை!
- News
சட்டைல தேசியக்கொடியைக் குத்திட்டு வரச் சொன்னா.. நீங்க என்ன ‘கொடி’ படத்தை குத்திட்டு வந்திருக்கீங்க
- Lifestyle
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
Bigg Boss Tamil 6 Eviction: ஷிவின் எல்லாம் இல்லைங்க.. இந்த போட்டியாளர் தான் இந்த வாரம் எவிக்டாம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் அமுதவாணன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஆளாக டிக்கெட் டு ஃபினாலேவை வென்று இறுதி வாரத்துக்கே சென்று விட்டார் அமுதவாணன்.
அதிரடி ட்விஸ்ட்டாக ஷிவினை வெளியே அனுப்பிட்டாங்க என வதந்திகள் பரவிய நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த பெண் போட்டியாளர் தான் எவிக்ட்டாகி உள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும், அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள ஷிவின் சேவ் ஆகி விட்டார் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.
இன்னொரு
வாட்டி
அதை
பண்ணீங்கனா..
வெளியே
அனுப்பிடுவேன்..
ஏடிகேவுக்கு
பிக்
பாஸ்
அதிரடி
வார்னிங்!

ஷிவின் சேவ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 5வது சீசனிலேயே நமீதா மாரிமுத்து எனும் திருநங்கை போட்டியாளர் கலந்து கொண்டார். ஆனால், அவர் அந்த வீட்டில் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இந்த சீசனில் களமிறங்கி உள்ள ஷிவின் கிட்டத்தட்ட 10 வாரங்கள் வரை நாமினேஷனுக்கே வராமல் சேவ் ஆகி வந்த நிலையில், ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களில் ஒருவராக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஷிவின் எவிக்ட் ஆகவில்லை. அவர் சேவ் ஆகி உள்ளதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

டிக்கெட் டு ஃபினாலே
விஜய் டிவி பிரபலமான அமுதவாணன் தான் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் தனியார் கருத்துக் கணிப்புகளில் கடைசி இடத்தில் உள்ளார். அவரை காப்பாற்றி இறுதி வாரத்திற்கு கொண்டு செல்வதற்காகவே டிக்கெட் டு ஃபினாலேவில் அவரை வெற்றி பெற செய்துள்ளது விஜய் டிவி என நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர்.

ஏடிகே, மைனா என்ன பண்ணாங்க
இந்த வாரம் அமுதவாணன், ஷிவினை விட வெளியேற தகுதியான இரண்டு போட்டியாளர்கள் என்றால் அது ஏடிகே மற்றும் மைனா இருவரில் ஒருவர் தான் என்றும் பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் நிலவின. ஆனால், இந்த வாரமும் அந்த இருவரும் எவிக்ட் ஆகாமல் சேவ் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரச்சிதா அவுட்
பெரிதாக யாரிடமும் சண்டை போட்டுக் கொள்ளாமல் கோல்டன் மைக் டாஸ்க்கில் கத்தியதற்கு பிறகு பிக் பாஸ் வீட்டில் மீண்டும் சைலன்ட் மோடுக்கு மாறிவிட்ட ரச்சிதா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியார் கருத்துக் கணிப்புகளில் அமுதவாணனை விட சற்றே அதிக வாக்குகளுடன் ரச்சிதா முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.