For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Bigg Boss Tamil 6 Eviction: இந்த வாரம் இந்த 2 பேரில் வெளியேற போறது கன்ஃபார்மா இவர் தானா?

  |

  சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் கூட பரபரப்புக்கு குறைவே இல்லாமல் போரடிக்காமல் சென்று கொண்டிருக்கிறது.

  அதற்கு காரணம் தேவையில்லாத ஆணிகளை அதிரடியாக பிக் பாஸ் டீம் புடுங்கி வெளியே அனுப்பி வருவது தான்.

  இந்நிலையில், இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் 2 பேர்களின் உயிர் ஊசல் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், கன்ஃபார்மா இவர் தான் கிளம்புவார் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

  அசீம் டிஸ்சார்ஜ்... மணிகண்டன் அட்மிட்… பிக் பாஸ் ரசிகர்களிடம் சிக்கிய அடுத்த அமிதாப் மாமா!அசீம் டிஸ்சார்ஜ்... மணிகண்டன் அட்மிட்… பிக் பாஸ் ரசிகர்களிடம் சிக்கிய அடுத்த அமிதாப் மாமா!

  மிஸ் ஆகாத கணிப்பு

  மிஸ் ஆகாத கணிப்பு

  இரண்டாம் வாரத்தில் முதல் எவிக்‌ஷனாக உப்புமா மம்மி சாந்தி தான் வெளியேறுவார் என எதிர்பார்த்ததை போலவே அவர் வெளியேறினார். ஜிபி முத்துவின் ஆர்மியினர் பண்ணிய அட்டகாசம் காரணமாக அவர் அதிரடியாக வெளியேறுவார் எனக் கூறியதை போலவே அவரும் வெளியேறினார். அசல் கோலார் லீலைகள் ரொம்ப நாள் நீடிக்காது என்ற நிலையில், அதிரடியாக தூக்கி வீசப்பட்டார். சீன் போட்ட ஷெரினாவும் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பினார்.

  இந்த வார நாமினேஷன்

  இந்த வார நாமினேஷன்

  இந்நிலையில், இந்த வாரம் யாரெல்லாம் நாமினேஷனில் வந்துள்ளனர். யார் வெளியே போவார் என்கிற கணிப்பு குறித்து இங்கே நாம் விரிவாக பார்ப்போம். அசீம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராம், ஏடிகே, விக்ரமன், ஆயிஷா உள்ளிட்ட 7 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரமும் ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன் உள்ளிட்ட சிலர் நாமினேஷனில் இடம்பெறவில்லை. ரச்சிதா, விஜே கதிரவன், ஷிவின் உள்ளிட்டவர்களும் சேஃப் ஜோனில் உள்ளனர்.

  விக்ரமனை முந்திய அசீம்

  விக்ரமனை முந்திய அசீம்

  விக்ரமன் எப்போ நாமினேஷன் பட்டியலில் வந்தாலும் அவருக்குத்தான் அதிக ஓட்டுக்கள் கிடைப்பது வழக்கம். முதல் ஆளாகவும் அவர் சேவ் ஆகிவிடுவார். ஆனால், இந்த வாரம் விக்ரமன் பல பிரச்சனைகளில் சிக்கி வரும் நிலையில், அசீம் ஆளே மாறிய நிலையில், அவருக்கு ரசிகர்கள் அதிக ஓட்டுக்களை போட்டு வருவதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன. முதலில் அசீம் சேவ் ஆவார், அடுத்து விக்ரமன் இந்த வாரம் சேவ் செய்யப்படுவார்.

  தப்பித்த ஆயிஷா

  தப்பித்த ஆயிஷா

  கடந்த வாரம் ஷெரினாவுடன் விளிம்பில் இருந்த ஆயிஷா நான் இப்பவே வீட்டுக்குப் போறேன் என செம டிராமாவை அன்று ஒரு நாள் மட்டும் போட்டார். ஆனால், ஆயிஷாவை இன்னமும் வீட்டில் இருக்க வைக்க வேண்டும் என நினைத்த ரசிகர்கள் அவருக்கு அதிக ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். ஏடிகே மற்றும் ஆயிஷா இந்த வாரம் முன்னதாகவே சேவ் ஆகிவிடுவார்கள்.

  சறுக்கிய தனா

  சறுக்கிய தனா

  முதல் வாரத்தில் இருந்து இந்த வாரம் வரை சண்டை போட்டே சாதித்து விடலாம் என நினைத்த தனாவுக்கு இந்த வாரம் ரசிகர்கள் தக்க பாடத்தை கற்றுக் கொடுக்க காத்திருக்கின்றனர். ஏடிகே, ஆயிஷாவுக்கு பிறகு தான் அவர் சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கொஞ்சம் எல்லை மீறினால் வீட்டிற்கு பார்சல் தான்.

  விளிம்பு நிலை

  விளிம்பு நிலை

  இந்த வாரம் அந்த திக் திக் நிமிடங்களை சந்திக்கப் போகும் போட்டியாளர்களில் ஒருவர் வழக்கமான மகேஸ்வரி மற்றும் இன்னொருவர் தூக்க மாத்திரை கொடுக்காத நிலையிலேயே ஷெரினா போல பொய் சொல்லி தூங்கிக் கொண்டிருக்கும் ராம் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. சரியான மிக்சர் பார்ட்டியான ராம் வெளியே கொடுத்து வந்த 2 லட்சம் என்ன ஆச்சு என்பதை விளிம்பு நிலையில் அமரும் போது நிச்சயம் உணர்வார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

  பை பை மகேஸ்வரி

  பை பை மகேஸ்வரி

  கடந்த வாரம் ஷெரினா வெளியேறிய நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து விஜே மகேஸ்வரி தான் வெளியேற போகிறார் என தெளிவாக தெரிகிறது. இதுவரை எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் கடைசி இடத்தில் விஜே மகேஸ்வரி இருந்து வரும் நிலையில், இந்த வாரம் அவருக்கு பிக் பாஸ் ரசிகர்கள் குட்பை சொல்ல காத்திருக்கின்றனர்.

  English summary
  Bigg Boss Tamil 6: Ram Ramasamy and Vj Maheshwari will be in danger zone this week from Bigg Boss house due to the lack of votes they received in private polling. Vj Maheshwari will expects to eliminate from this week.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X