Bigg Boss Tamil 6: எதிர்பார்த்ததையே எதிர்பாருங்கள்.. இந்த வாரம் பிக் பாஸ் எவிக்ஷன் இவர் தான்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் கருத்துக் கணிப்புப் படி யார் வெளியேறுவார் என அறிவித்து இருந்தோமோ அதே போட்டியாளர் தான் வெளியேறி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.
ஆயிஷா, ஷெரினா, விக்ரமன், அசீம் மற்றும் விஜே கதிர் என மூன்று பேர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சக ஹவுஸ்மேட்களால் நாமினேட் ஆனார்கள்.
சனிக்கிழமை எபிசோடில் ஒருவர் அல்ல இருவர் அதிரடியாக சேவ் ஆகி உள்ளார் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.

பஞ்ச பாண்டவர்கள்
அசீம், ஆயிஷா, ஷெரினா, விக்ரமன் மற்றும் விஜே கதிரவன் என வெறும் 5 போட்டியாளர்கள் மட்டுமே இந்த வாரம் அதிக ஓட்டுக்களை பெற்று நாமினேட் ஆனார்கள். தப்பா பேசுறது, ட்ரிக்கர் பண்ணி விளையாடுறது, மேனிபுலேட் பண்றது, சுய புத்தி இல்லாமல் விளையாடுவது, ஆளையே காணோம் என்கிற ரீதியில் இவர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.

விக்ரமன், அசீம் சேவ்
சனிக்கிழமை எபிசோடில் விக்ரமன் முதல் நபராக சேவ் ஆகி உள்ளார் என்றும் அவருக்கு மிகப்பெரிய கைதட்டல்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரமனை தொடர்ந்து அசீமும் சனிக்கிழமை எபிசோடிலேயே காப்பாற்றப்பட்டுள்ளார் என்கிற ஹேப்பி நியூஸும் கிடைத்துள்ளது.

ஆயிஷா எஸ்கேப்
கமல் சாரையே கடந்த வாரம் கடுப்பேற்றி விட்டார். அடுத்த பாயாசம் ஆயிஷாவுக்குத்தான் போடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் அந்த வெஞ்சன்ஸ் கேம் விளையாடாமல் மிகக் குறைவான வாக்குகளை வாங்கியவரைத் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி உள்ளனர் என்கிற பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன.

ஆஸ்கர் நாயகி அவுட்
மாடல் அழகியும் வினோதய சித்தம் படத்தில் நடித்தவருமான நடிகை ஷெரினா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பதை முன்பே கணித்து இருந்தோம். அதே போல தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஷெரினா தான் அதிரடியாக வெளியாகி உள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. ஆயிஷாவுக்கு இனிமேல் மலையாளத்தில் பேச உள்ளே பார்ட்னர் இருக்க மாட்டார் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

நடித்தாரா ஷெரினா
முந்தைய வாரம் நடந்த பொம்மை டாஸ்க்கில் ஷெரினா தன்னை தனலட்சுமி தள்ளி விட்டார் என்றும் தலையில் அடிபட்டது என்றும் சொன்னது பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. கமல்ஹாசன் குறும்படம் போட்டு ஷெரினாவை வெளுத்து வாங்கிய நிலையில், ரசிகர்கள் விளையாட்டில் நடித்து ஷெரினா ஏமாற்றி விட்டார் என நினைத்து அவருக்கு ஓட்டுக்களை போடாமல் வெளியே அனுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











