Bigg Boss Tamil 6: கன்ஃபார்ம்.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போறது இவர் தானா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வெற்றிகரமாக 4 வாரங்களை கடக்கப் போகிறது. வெள்ளிக்கிழமையான இன்று கடைசி நேரத்தில் சூடு பறக்க வைக்க மீண்டும் அசீமையே சண்டை போட வைத்துள்ளனர்.

அசீம் மற்றும் மகேஸ்வரியின் சண்டை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அந்த போட்டியாளர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

கருத்துக் கணிப்புகளின் படி இந்த வாரம் கடைசி இடத்தில் தொடர்ந்து அந்த போட்டியாளர் தான் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

5 பேர் நாமினேட்

5 பேர் நாமினேட்

அசீம், ஆயிஷா, ஷெரினா, விக்ரமன் மற்றும் விஜே கதிரவன் என வெறும் 5 போட்டியாளர்கள் மட்டுமே இந்த வாரம் அதிக ஓட்டுக்களை பெற்று நாமினேட் ஆனார்கள். தப்பா பேசுறது, ட்ரிக்கர் பண்ணி விளையாடுறது, மேனிபுலேட் பண்றது, சுய புத்தி இல்லாமல் விளையாடுவது, ஆளையே காணோம் என்கிற ரீதியில் இவர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.

விக்ரமன் ஓட்டு வங்கி

விக்ரமன் ஓட்டு வங்கி

இதில் இந்த வாரம் அதிக ஓட்டுக்களுடன் முதல் நபராக விக்ரமன் காப்பாற்றப்படுவார் என தெரிகிறது. தொடர்ந்து போட்டியாளர்களை விக்ரமனை நாமினேஷனுக்கு கொண்டு வந்தால், அவரும் ஆரி அர்ஜுனன் போலவே ரசிகர்கள் மத்தியில் அதிக செல்வாக்கை பெற்று இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பாராட்டும் ஃபர்ஸ்ட் சேவும்

பாராட்டும் ஃபர்ஸ்ட் சேவும்

வெறும் 5 பேர் மட்டுமே என்பதால், சனிக்கிழமை எபிசோடில் கமல் ஒருவரை மட்டுமே காப்பாற்றுவார் என தெரிகிறது. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றக் கூடாது என்கிற டிராமாவை போட்டதற்கு பாராட்டு தெரிவித்து நீங்க சேவ் விக்ரமன் என கமல் கூறுவார் என்றும் இப்பவே கெஸ் பண்ண முடிகிறது.

அசீமுக்கும் ஆதரவு இருக்கு

அசீமுக்கும் ஆதரவு இருக்கு

இந்த வாரம் அடக்கி வாசித்து கடைசி நாளில் சண்டை போடும் அசீம் 2வதாக காப்பாற்றப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அசீம் மற்றும் விக்ரமன் இந்த வாரம் பக்கா சேஃப் ஜோனில் உள்ளனர். மற்ற 3 போட்டியாளர்களின் நிலை தான் ரொம்பவே கவலைக்கிடமாக உள்ளது.

ரொம்ப டேஞ்சர்

ரொம்ப டேஞ்சர்

இந்த வாரம் அந்த கடைசி 3 பேராக மாட்டப் போவது ஷெரினா, ஆயிஷா மற்றும் நம்ம சைலன்ட் பார்ட்டி விஜே கதிரவன் தான். ஆனால், மலையாள தோழிகள் இருவருக்கும் முன்னதாக விஜே கதிரவன் கலக்கலாக காப்பாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிஷா மற்றும் ஷெரினா கடைசியாக திக் திக் நிமிடங்களை சந்திக்க உள்ளனர்.

ஷெரினா எலிமினேட்

ஷெரினா எலிமினேட்

இந்த வாரம் இதுவரை கருத்துக் கணிப்பு ஓட்டெடுப்பில் ஷெரினா தான் கடைசி இடத்தில் உள்ளார். ஃபேக் டிராமா ஆடியவர் என ரசிகர்களால் கடந்த ஒருவாரமாக ட்ரோல் செய்யப்பட்ட விநோதய சித்தம் பட நடிகை ஷெரினா இந்த வாரம் ஆயிஷாவை ஆரத் தழுவி அழுது விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை யார் அதிகாரப்பூர்வமாக வெளியேறினார் என்பது லீக் ஆகிவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X