twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நானும் தப்பு பண்ணல.. எங்க அம்மாவும் எந்தவொரு தப்பும் பண்ணல.. கண்ணீர் வரவைக்கும் ஷிவின் கதை!

    |

    சென்னை: கடந்த சீசனில் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து சொன்ன கதையை கேட்டு ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களும் உருகிப் போனார்கள்.

    அதே போல இந்த முறையும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள திருநங்கை போட்டியாளரான ஷிவினின் கதை ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

    விக்ரமன், தனலட்சுமி உள்ளிட்ட அவசர கொடுக்கு போட்டியாளர்களும் ஷிவின் கதையை கேட்டு ரெட் பஸரை அடிக்கவில்லை.

    நமீதா மாரிமுத்துவை போல சனிக்கிழமையே வாக்கவுட் ஆகப் போகிறாரா தனலட்சுமி? இது என்னடா புது உருட்டு! நமீதா மாரிமுத்துவை போல சனிக்கிழமையே வாக்கவுட் ஆகப் போகிறாரா தனலட்சுமி? இது என்னடா புது உருட்டு!

    கதையை கன்டினியூ பண்றதுக்குள்ள

    கதையை கன்டினியூ பண்றதுக்குள்ள

    சொந்த கதையை சொல்றதா? இல்லை எவன் முன்னாடி ஓடி வந்து ரெட் பஸர் அடித்து பேச விடாம ஆஃப் பண்ணுவான்னு யோசிக்கிறதா என்றே தெரியாமல் ஒவ்வொரு போட்டியாளர்களும் அந்த ஹாட் சீட்டில் கொஞ்சம் அன் கம்ஃபர்டபிளாகவே உட்கார்ந்து கதை சொல்லி வருகின்றனர்.

    அவசர கொடுக்குகள்

    அவசர கொடுக்குகள்

    யார் கதை சொல்ல வந்தாலும், ரெட் பஸர் அடித்து ஆஃப் செய்து விட வேண்டும் என்கிற மைண்ட் செட்டிலேயே தனலட்சுமி மற்றும் அரசியல்வாதி விக்ரமன் இருப்பதை பார்த்து ரசிகர்களே காண்டாகி விட்டனர். தனலட்சுமி பேசும் போது மட்டும் மற்றவர்கள் கேட்டார்களே, மத்தவங்க பேசுறதை ஏன் அவர் கேட்க விடுவதில்லை என சோஷியல் மீடியாவில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    திருநங்கை போட்டியாளர்

    திருநங்கை போட்டியாளர்

    கடந்த சீசனில் நமீதா மாரிமுத்து சொன்ன கதையையும் அவர் பாடிய அந்த பாடலும் இன்னமும் பிக் பாஸ் ரசிகர்கள் கண் முன் நீங்காமல் நிற்கும். ஆனால், அந்த அளவுக்கு இல்லை என்றாலும், இந்த முறை திருநங்கை போட்டியாளராக உள்ளே நுழைந்து வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள ஷிவினின் கதையை ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் காது கொடுத்து கேட்டுள்ளனர்.

    பிச்சை எடுப்பேனோனு

    பிச்சை எடுப்பேனோனு

    என் அம்மா எனக்கு வேலையே கிடைக்காது. எங்கேயாவது பிச்சை எடுக்க போயிடுவேனோங்கிற பயத்துல தான் என்னை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார் என ஷிவின் சொன்னதை கேட்டதுமே ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் ரெட் பஸரை அடிக்க விருப்பமில்லாமல் கண்ணீர் கதையை கேட்க ஆரம்பித்து விட்டனர்.

    அம்மா தப்பு பண்ணல

    அம்மா தப்பு பண்ணல

    நானும் எந்த தப்புமே பண்ணல.. எங்க அம்மாவும் எந்த தப்புமே பண்ணல.. ஆனால், எனக்கு நேர்ந்த ஜெண்டர் பிரச்சனை காரணமாக நாங்க பிரிந்து இருக்கணுமான்னு நினைச்சி வருத்தப்பட்டேன். மறுபடியும் இந்தியாவுக்கு திரும்பி வந்து உங்களோட இருக்கிறேன்னு சொன்னேன். ஆனால், அம்மா அத்துடன் என்கிட்டே பேச மாட்டேன்னு சொல்லிட்டாங்க என அவர் கண்கலங்க ரச்சிதா, குயின்ஸி, நிவாஷினி என பல பெண் போட்டியாளர்களும் கண் கலங்கினர்.

    பாசம் இல்லாமல்

    பாசம் இல்லாமல்

    பாசம் இல்லாமல், படிப்பும் இல்லாமல், என்னை போலவே இந்த சமூகத்தில் தவிச்சிட்டு இருக்கிறவங்களோட ஸ்டோரியும் கேட்கப் படணும்னு நினைச்சி நான் எடுத்த பெரிய முடிவு தான் இந்த பிக் பாஸ் ஷோவில் கலந்துக்கிறது என ஷிவின் கணேசன் வலியுடன் பேசியதை கேட்டு விக்ரமன், தனலட்சுமி கூட பஸர் அடிக்காமல் இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    English summary
    Bigg Boss Tamil 6: Shivin Ganeshan sad story makes every housemates feel and cry. She talks about how her gender issue spoils her life and mother's affection in this speech task. Housemates no one presses the buzzer gets appreciates from fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X