பிக்பாஸ் தமிழ் 6..அசீமுக்கு சப்போர்ட்..தனத்துக்கு ரோஸ்ட்.. இன்றைய கமல் வரவு களை கட்டுமா?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரத்தில் ஆட்டம் போட்ட அசீம் அமைதியாகிவிட்டார் ஒரளவு சச்சரவு இருந்தாலும் பழைய ஸ்டைல் இல்லை.

ஆனால் தனலட்சுமி எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேசுவது, கண்டபடி திட்டுவது என்று மிரட்டல் தொனியில் நடந்து வருகிறார்.

மறுபுறம் கோஷ்டி சேர்ந்து ஒருவரை கார்னர் செய்யும் போக்கும் புதிதாக அன்பு டீம் முளைத்து செய்து வருகிறது.

வானிலை போல் கோஷ்டி உருவாகி மறையும் பிக்பாஸ்

வானிலை போல் கோஷ்டி உருவாகி மறையும் பிக்பாஸ்

பிக் பாஸ் சீசன் 6 மற்ற 5 சீசன்களை விட வித்தியாசமானதாக தான் இருக்கிறது. திடீர் திடீரென கோஷ்டி சேர்கிறார்கள், பிறகு கோஷ்டிகள் திடீரென மாறுகிறது. இரண்டு கோஷ்டிகள், மூன்று கோஷ்டிகள் என மாறுகிறது. இளம் போட்டியாளர்கள் ஒரு பக்கமும், நியாயம் பேசுபவர்கள் ஒரு பக்கமும், வளவளவென்று பேசும் டீம் ஒரு பக்கமும் என மூன்று குரூப்பாக பிரிவதை பார்க்கிறோம். சில நேரம் ஒருவருக்கொருவர் பாராட்டி நல்லவர்கள் போல் நடிப்பதையும் பார்க்க முடிகிறது. அடுத்த விநாடியே மோதவும் செய்கிறார்கள்.

அடக்கி வாசித்த அசீம்..ஆட்டம் போட்ட மகேஸ்வரி, தனம்

அடக்கி வாசித்த அசீம்..ஆட்டம் போட்ட மகேஸ்வரி, தனம்

போன வாரம் தன்னுடைய மோசமான நடத்தையால் கடுமையாக கண்டிக்கப்பட்ட அசீம் இந்த வாரம் பெரிய அளவில் அடக்கி வாசிப்பதும், சில இடங்களில் நல்லவராக மாறி நியாயம் கேட்டதையும் பார்க்க முடிந்தது. அசீமை கார்னர் செய்வதையே வழக்கமான செயலாக மகேஸ்வரி, தனலட்சுமி உள்ளிட்டோர் செய்வதையும் பார்க்க முடிந்தது. ஆனால் அவர்களிடம் வாய் அடிக்கும் பொழுது மரியாதையுடன் அசீம் பேசுவதையும், நிதானத்தை இழந்து வார்த்தை விடாமல் பிரச்சினையை கையாண்டதையும் வாரம் முழுவதும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருவதையும் பார்க்க முடிகிறது.

புதிதாக முளைத்த அன்பு டீம்

புதிதாக முளைத்த அன்பு டீம்

பிக் பாஸில் புதிதாக உருவாகி உள்ள அன்பு டீமில் மகேஸ்வரி, மைனா மணிகண்டன், ஏடிகே என ஒரு டீம் உருவாகி விக்ரமனையும், அசீமையும் கார்னர் செய்வதை பார்க்க முடிகிறது. மறுபுறம் தனலட்சுமி அசீம் மேல் உள்ள கோபத்தை காண்பித்துக் கொண்ட சில நேரம் கோஷ்டியிலும், சில நேரம் தனித்தும் இயங்குவதை பார்க்க முடிகிறது. இந்த வாரம் முழுவதும் வளவளவென்று பேசி சண்டை போட்ட மகேஸ்வரி, மைனா, அசீம் போன்றவர்களால் பிக்பாஸ் நிகழ்ச்சி சோர்வை ஏற்படுத்தியது. ஆனாலும் அமுதவாணனின் கிரியேட்டிவிட்டியால் இரண்டு, மூன்று நாடகங்கள் பாடல்கள் என பிக்பாஸ் களைகட்டியதை காண முடிந்தது.

கமல் வருகை களைக்கட்டுமா..போலிகள் கண்டிக்கப்படுவார்களா?

கமல் வருகை களைக்கட்டுமா..போலிகள் கண்டிக்கப்படுவார்களா?

இன்று மாலை கமல் வருகிறார் வரும்பொழுது அசீமுக்கு ஆதரவாக பேசுவது போல் தெரிகிறது. ஒருவர் நியாயமாக நடக்க ஆரம்பித்து அமைதியாகிவிட்டால் அவரை மீண்டும் மீண்டும் சீண்டுவது எந்த வகையில் நியாயம்? என அவர் கேட்பதை பார்க்கும் பொழுது அசீமை கார்னர் செய்து மகேஸ்வரி, தனலட்சுமி இயங்குவதையும், விக்ரமனை காரனர் செய்து மகேஸ்வரி, மைனா, மணிகண்டன், ஏடிகே போன்றவர் இயங்குவதையும் லேசாக கமல் கண்டிப்பதாக தெரிகிறது. அசீமுக்கு பாராட்டும், தனலட்சுமிக்கு லேசான கொட்டும் மற்றவர்களுக்கு செல்லதிட்டும் கிடைக்கும் என தெரிகிறது. பார்ப்பவர்களை எல்லாம் எடுத்தெறிந்துப் பேசிக்கொண்டு இருக்கும் தனலட்சுமி தனக்கு மரியாதை வேண்டும் என்று கூறிக்கொண்டு அசீமை அவன் இவன் என்று தனிமையில் பேசுவதையும் கமல் என்று கண்டிக்கலாம் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X