திருநங்கை போட்டியாளரை அப்படி கிண்டல் பண்றது அசிங்கம்.. கொதித்தெழுந்த சுரேஷ் தாத்தா!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் வரம்பு மீறி அவரை எதிர்த்து பேசும் போட்டியாளர்களிடம் விசித்திரமான பாடி லேங்குவேஜ் உடன் கிண்டல் செய்யும் காட்சிகள் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி வரும் நிலையில், ஷிவின் இடம் அவர் நேற்று நடந்து கொண்ட விதம் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ஷெரின் மடியில் உட்கார்ந்தது, தனலட்சுமியை அந்த இடத்தில் கை வைத்து தள்ளியது என தொடர்ந்து அராஜகம் செய்து வருகிறார் அசீம் என புகார்கள் குவிந்து வருகின்றன.

ஷிவினை பார்த்து அப்படி கையசைத்து ஆக்‌ஷன் பண்ணது ரொம்பவே அசிங்கமான செயல் என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வன்மையாக கண்டித்துள்ளார்.

அசிங்கமா பிஹேவ் பண்ண அசீம்

அசிங்கமா பிஹேவ் பண்ண அசீம்

பிக் பாஸ் வீட்டில் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் அசீம் நடந்து கொள்ளும் விதத்தை பலரும் கண்டித்து வருகின்றனர். வீட்டிற்குள் விக்ரமன், ஷிவின், தனலட்சுமி, அமுதவாணன், ரச்சிதா உள்ளிட்டோர் அசீமுக்கு எதிரான கண்டனக் குரல்களை எழுப்பினர். ஏடிகேவும் அசீம் பண்ணது தப்பு தான் எனக் கூறினார். இந்நிலையில், சோஷியல் மீடியா முழுக்க அசீமை பூமர் அங்கிள் என்றும் மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

ஷிவின் கிட்ட அப்படி

ஷிவின் கிட்ட அப்படி


தன்னை எதிர்த்து தனலட்சுமி பேசினாலோ, விக்ரமன் பேசினாலோ, அமுதவாணன் பேசினாலோ உடனடியாக ஒரு விதமாக சைகை செய்து அவர்களை அசிங்கப்படுத்த நினைத்து அசிங்கப்பட்டு வருகிறார் சின்னத்திரை நடிகர் அசீம். இந்நிலையில், அதை விட மோசமாக திருநங்கை போட்டியாளரான ஷிவினை பார்த்து அசீம் பண்ண செய்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சுரேஷ் தாத்தா கண்டனம்

சுரேஷ் தாத்தா கண்டனம்

ஒரு திருநங்கை போட்டியாளரை இப்படி மோசமாக கிண்டல் செய்வது ரொம்பவே அசிங்கமாக விஷயம் அசீம் என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் தாத்தா என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

கண்டிக்கும் ரசிகர்கள்

கண்டிக்கும் ரசிகர்கள்

அசீம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தது முதலே சரியான நடத்தையோடு இல்லை என்றும் பெண் போட்டியாளருடன் சண்டை போடுவது, தவறாக பிடித்து தள்ளிவிடுவது, திருநங்கை போட்டியாளரிடம் மோசமான செய்கைகளை செய்வது என எல்லை மீறி வரும் அசீமை கமல் இந்த வாரமும் கண்டிக்கவில்லை என்றால் நடப்பதே வேறு என பிக் பாஸ் ரசிகர்களும் கொந்தளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X