Bigg Boss Tamil 6 Eviction: இந்த வாரம் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் போலயே.. கடைசி இடத்தில் இவங்களா?

சென்னை: தனலட்சுமியிடம் இருந்து நாமினேஷன் ஃப்ரீ பவரை கமல் பிடுங்கினாலும், இந்த வாரம் மக்கள் ஓட்டுக்களை அதிகம் பெற்று சேஃப் ஜோனிலேயே இதுவரை தனா இருந்து வருவதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.

ரச்சிதாவிடம் ரொமான்ஸ் என்கிற பெயரில் அடுத்த அசல் கோலாராக மாறி வரும் ராபர்ட் மாஸ்டரை இந்த வாரம் வெளியே அனுப்ப வாய்ப்பு கிடைத்திருக்கு, மிஸ் பண்ணிடாதீங்க என ரசிகர்கள் சொன்னாலும், அவர் கடைசி இடத்தில் இல்லை என்பது தான் செம ஷாக்கிங்கான விஷயம்.

இந்த வாரம் அப்போ சற்றும் எதிர்பார்க்காத ஒரு போட்டியாளர் கடைசி இடத்தில் இருக்கிறார். அவர் யாருன்னு இங்கே விரிவாக பார்ப்போம்..

இந்த வார நாமினேஷன் லிஸ்ட்

இந்த வார நாமினேஷன் லிஸ்ட்

இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்த பலரும் நாமினேஷன் பட்டியலில் வந்துள்ளனர். வழக்கம் போல அசீம் இந்த வாரமும் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அசீமை தொடர்ந்து ஜனனி, தனலட்சுமி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ஆயிஷா மற்றும் கதிரவன் உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

டைட்டில் வின்னர் அசீமா

டைட்டில் வின்னர் அசீமா

அசீமை டைட்டில் வின்னர் ஆக மாற்றாமல் விட மாட்டார்கள் என்பது போல வாரம் வாரம் நாமினேஷனுக்கு கொண்டு வந்து ஃபர்ஸ்ட் சேவ் செய்து வருகின்றனர். அசீமுக்கு வெளியே ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள் போல, கருத்து கணிப்பு வாக்கெடுப்பிலும் கடந்த வாரம் விக்ரமனை முந்தி முதலிடத்தில் வந்த அசீம் தான் நிகழ்ச்சியிலும் முதலில் சேவ் ஆனார். இந்த வாரமும் அதே நிலைமை தான்.

ஜனனி ஆர்மி செய்கை

ஜனனி ஆர்மி செய்கை

ஜனனி நாமினேஷனில் வந்தாலே, விழித்துக் கொண்டு ஓட்டுக்களை போட்டு அவருக்கு ரசிகர்கள் அமோக ஆதரவை கொடுத்து வருகின்றனர். விளையாடினாலும், விளையாடா விட்டாலும், நீங்க உள்ளே இருந்தா போதும், நாங்க பார்த்து ரசிச்சிக்கிட்டே இருப்போம் என அசீமை தொடர்ந்து அதிக ஓட்டுக்களுடன் இந்த வாரம் 2வதாக சேவ் ஆகப் போகிறார் ஜனனி என எதிர்பார்க்கப்படுகிறது.

தப்பித்த தனலட்சுமி

தப்பித்த தனலட்சுமி

கடந்த வாரம் கமல் சார் எபிசோடில் அய்யோ, அம்மா நான் வீட்டுக்குப் போறேன், என்மீது திருட்டுப்பழி சுமத்திட்டாங்கன்னு ஒப்பாரி வைத்த தனலட்சுமியின் போல்டான விளையாட்டை பார்த்து இந்த வாரமும் ரசிகர்கள் அவரை வீட்டிலேயே தங்க வைக்க முடிவு கட்டி விட்டனர் என்று தான் தெரிகிறது. அவருக்கும் அதிக ஓட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

நிறைய மிக்சர்கள்

நிறைய மிக்சர்கள்

மிக்சர் போட்டியாளர்கள் எல்லம நைஸாக நாமினேஷனிலேயே வருவதில்லையே என ரசிகர்கள் ஃபீல் பண்ண நிலையில், இந்த முறை நிறைய மிக்சர் போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அவர்களில் யார் வெளியேறினாலும் ஹேப்பி தான் என்கிற மன நிலையில் ரசிகர்கள் உள்ளனர். ராபர்ட் மாஸ்டர், கதிரவன், குயின்ஸி, நிவாஷினி உள்ளிட்டோர் சிக்கி உள்ள நிலையில், யார் டேஞ்சர் ஜோனில் உள்ளனர் என்பதை பார்க்கலாம்.

ராபர்ட் மாஸ்டர் நிலை என்ன

ராபர்ட் மாஸ்டர் நிலை என்ன

இந்த வாரம் எப்படியாவது பூமர் அங்கிள் ராபர்ட் மாஸ்டரை வெளியே அனுப்புங்க என ரசிகர்கள் நினைத்தாலும், அவருக்கு ஓட்டுக்கள் கிடைத்து வருகின்றன. கதிரவன், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்கள் ரொம்பவே சேஃப் ஜோனிலேயே இருப்பதாக தெரிகிறது.

டேஞ்சர் ஜோனில் யார்

டேஞ்சர் ஜோனில் யார்

நிவாஷினி மற்றும் குயின்ஸி இந்த வாரம் கடைசி 2 இடங்களில் உள்ளனர். ராபர்ட் மாஸ்டர் இல்லை என்றால், அந்த சிங்கப்பூர் பாப்பா நிவாஷினியை வெளியே அனுப்பிடுங்க அவராவது வெளியே போய் அசல் கோலார் உடன் ரீயூனியன் செல்ஃபி போடட்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்பாராத எவிக்‌ஷன்

எதிர்பாராத எவிக்‌ஷன்

ஆனால், நிவாஷினியை விட இந்த வாரம் இப்போ வரைக்கும் குயின்ஸி தான் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார். தனலட்சுமி செய்த தவறுக்கு உடந்தையாக இருந்த குயின்ஸியை ரசிகர்கள் இந்த வாரம் வெளியே அனுப்புவார்களா? அல்லது நிவாஷினி வெளியே போவாரா என்பது சனிக்கிழமை தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X