Bigg Boss Tamil 6: விக்ரமன், ஷிவின், அசீம் இந்த மூன்று பேரில் யாருக்கு சம்பளம் அதிகம் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கும் முன் வரை டைட்டில் வின்னர் யார் என்கிற ரகசியம் வெளியே தெரியாத அளவுக்கு இந்த முறை பிக் பாஸ் டீம் பார்த்துக் கொண்டதே ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடைசி நேரத்தில் அரசியல், பிஆர் சப்போர்ட் எல்லாம் வெளியில் இருந்து பெரிய அளவில் கிடைத்த நிலையில், கிராண்ட் ஃபினாலேவில் அந்த டைட்டில் வின்னர் பட்டத்தையும் 50 லட்சம் ரூபாய் பணத்தையும் யார் தான்ப்பா வெல்லப் போறாங்க என்பதை காணும் ஆர்வம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்நிலையில், அந்த 50 லட்சம் பணத்தை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் இந்த நிகழ்ச்சியில் அதிகம் சம்பளத்தை விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் உள்ளிட்ட மூவரில் யார் அதிகம் வாங்கி உள்ளனர் என்பதை இங்கே பார்ப்போம்..

 விக்ரமன் சம்பளம்

விக்ரமன் சம்பளம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விக்ரமன் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் எல்லாம் அதிகம் பிரபலம் இல்லாதவர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு நாளைக்கு அதிகபட்சமாக அவருக்கு 17 முதல் 18 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி பார்த்தால் 105 நாட்களுக்கு அதிகபட்சமாக 18 லட்சம் வரை விக்ரமன் சம்பளமாக வாங்க உள்ளார். மேலும், அந்த 50 லட்சமும் கிடைத்தால் விக்ரமன் சம்பளம் 68 லட்சம் ஆக மாறி விடும்.

 ஷிவின் சம்பளம்

ஷிவின் சம்பளம்

பிக் பாஸ் வீட்டில் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவின் இந்த முறை நமீதா மாரிமுத்துவை போல முதல் வாரத்திலேயே வெளியேறாமல் 105 நாட்களும் வீட்டில் இருந்து டைட்டிலை வென்றே தீருவேன் என இறுதி வரை எந்தவொரு பெரிய சப்போர்ட்டும் இல்லாமல் போராடி வருகிறார். ஷிவினுக்கு ஒரு நாளைக்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 105 நாட்களில் அவருடைய மொத்த சம்பளம் 21 லட்சம் என்கின்றனர். ஒரு வேளை ஷிவினுக்கு டைட்டில் கிடைத்தால் 71 லட்சம் ஜாக்பாட் கிடைக்கும்.

 அசீமுக்கு அதிகம்

அசீமுக்கு அதிகம்

இந்த மூவரில் சீரியலில் பிரபலமான அசீமுக்குத் தான் ஒரு நாள் சம்பளம் அதிகம். ஒரு நாளுக்கு 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அசீம் சம்பளமாக வாங்குவார் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. 105 நாட்களுக்கு சுமார் 23 லட்சத்துக்கு மேல் அசீம் சம்பளம் பெறுவார். மேலும், அசீம் அதிக வாக்குகளுடன் இந்த டைட்டிலை தட்டிச் சென்றால் 73 லட்சம் ரூபாய் உடன் வேறலெவல் வாழ்க்கையை வாழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 யாரு வின்னர்

யாரு வின்னர்

இந்த சீசனில் இறுதி வரை டைட்டில் வின்னர் ரகசியத்தை பாதுகாக்க வேண்டும் என கடைசி வரை ஷோவை நடத்தி வருவதாகவும் நிகழ்ச்சி ஆரம்பித்த பின்னர் தான் டைட்டில் வின்னர் யார் என்றே தெரிவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஒருத்தரை கூட எவிக்ட் செய்து வெளியே அழைத்து வரவில்லை என்றும் கூறுகின்றனர். அதிகபட்சம் விக்ரமன் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X