For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Bigg Boss Tamil 6: இலங்கை தமிழ் எல்லாம் ஏன் இழுத்தீங்க.. ஜனனியை விளாசித் தள்ளிய விக்ரமன்!

  |

  சென்னை: பிக் பாஸ் வீடு இந்த வாரம் வழக்காடு மன்றமாக மாறிய நிலையில், உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கு எல்லாம் போட்டியாளர்கள் ஒரு பக்கம் கேஸ் கொடுத்து காமெடி செய்து வரும் நிலையில், சில கேஸ்கள் விவகாரமாக மாறி உள்ளன.

  அமுதவாணன் மற்றும் ஜனனிக்கு விக்ரமன் போன வாரம் கமல் முன்னிலையில் வில் அம்பு கொடுத்தது இந்த வாரம் பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.

  இருவருக்குமே அசீம் வழக்கறிஞராக மாறி பிரச்சனையை எந்தளவுக்கு பத்த வைக்க முடியுமோ பற்ற வைத்து விட்டார்.

  என்ன பத்தி பேச உனக்கு தகுதியே இல்லை..ராமை அசிங்கப்படுத்திய அசீம்.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் வீடு!என்ன பத்தி பேச உனக்கு தகுதியே இல்லை..ராமை அசிங்கப்படுத்திய அசீம்.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் வீடு!

  தமிழா செந்தமிழா

  தமிழா செந்தமிழா

  பிக் பாஸ் வீட்டில் ஜனனியின் பங்களிப்பு குறைவாக இருக்கு என்பதை சொல்ல முயன்ற விக்ரமன் இளவரசியாக இருந்த ஜனனி ஒன்றுமே செய்யவில்லை என்று அவர் மனதை புண்படுத்தக் கூடாது என்பதற்காக அவர் செந்தமிழ் பேசுவதில் சிரமம் பட்டிருப்பதால் அவர் அந்தளவுக்கு பர்ஃபார்மன்ஸ் பண்ணவில்லையோ என நினைக்கிறேன் என பூசி மெழுகி நாமினேட் செய்தார். தற்போது அதுவே அவருக்கு வினையாக மாறி உள்ளது.

  வில்லான அசீம்

  வில்லான அசீம்

  அமுதவாணன் வில்லாகவும் ஜனனி அம்பாகவும் செயல்பட்டார் என கமல் முன்பாக விக்ரமன் சொன்னது தான் இந்த வாரம் முதல் வழக்காக மாறியது. இந்நிலையில், ஜனனி தொடுத்துள்ள வழக்கிற்கு வில் அசீம் தான் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். தமிழ் பிரச்சனையை எடுத்து பேசி விக்ரமனை டோட்டல் டேமேஜ் செய்ய வேண்டும் என அசீம் சொன்னதும் ஜனனி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.

  கலக்கிய குயின்ஸி

  கலக்கிய குயின்ஸி

  ஜனனிக்காக அசீம் அட்வகேட்டாக மாறிய நிலையில், கொஞ்சமும் தயங்காமல் விக்ரமனுக்காக குயின்ஸி ஆஜராகி சூப்பராக வாதாடி விக்ரமனுக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். குயின்ஸிக்குள்ள இவ்வளவு திறமை இருக்கா என்றும் இந்த வாரம் இதை வைத்தே கமல் குயின்ஸியை பாராட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  பம்மிய ஜனனி

  பம்மிய ஜனனி

  இந்த வழக்கால் ரொம்பவே விக்ரமன் கடுப்பாகி விட்டார். வெளியே வந்த நிலையில், சமையல் கட்டு அருகே குயின்ஸி அதுவெறும் சும்மா கேமுக்காக பண்ணது பர்சனலா எடுத்துக்காதீங்க என பம்ம, விக்ரமன் தனது கோபத்தை வெளிப்படையாகவே ஜனனியிடம் காட்டிய காட்சிகள் இன்றைய 2வது ப்ரமோவாக வெளியானது.

  இலங்கை தமிழ் பிரச்சனை

  இலங்கை தமிழ் பிரச்சனை

  நீங்க இலங்கை எல்லாம் இழுத்து பேசியிருக்கக் கூடாது என்றும் செந்தமிழ் பிரச்சனை பற்றித் தான் நான் சொன்னேன். அது எனக்கே கஷ்டமாத்தான் இருந்தது என விக்ரமன் அசீம் மற்றும் ஜனனி டீம் தன்னை பழிவாங்க போட்ட திட்டத்தை புரிந்து கொண்டு கடுப்பான காட்சிகள் ரசிகர்களை இன்றைய எபிசோடை பார்க்க ஆர்வமாக தூண்டியுள்ளது.

  ரசிகர்கள் பாராட்டு

  ரசிகர்கள் பாராட்டு

  கோர்ட் டாஸ்க்கில் வக்கீலாக சிறப்பாக விக்ரமன் வாதாடினார் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்கள் மட்டுமின்றி ரசிகர்களும் விக்ரமனை பாராட்டி வருகின்றனர். விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் தான் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தி உள்ளனர் என்றும் எந்த வக்கீல் சூப்பர் என கருத்துக் கணிப்புகளும் பறந்து வருகின்றன.

  English summary
  Bigg Boss Tamil 6: Vikraman slams Janany for misuse Srilankan Tamil controversy against him this week Court room drama. Janany filed a case against Vikraman after Azeem influences her against Vikraman.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X