Don't Miss!
- Sports
ஆசிய கோப்பை பஞ்சாயத்திற்கு தீர்வு.. பாக். வாரிய தலைவர் கொடுத்த புதிய அப்டேட்.. ஃபிப்.4 தான் கடைசி
- Lifestyle
நம் முன்னோர்களுக்கு கொலஸ்ட்ரால், சுகர் வராம இருந்ததுக்கு, இந்த இலை தான் காரணம் தெரியுமா?
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Technology
டேட்டா லிமிட்டே கிடையாது.. எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்.. ரூ.400-க்குள் கிடைக்கும் BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ்!
- Finance
நிறுவனங்கள் உங்கள் குடும்பமல்ல.. நீங்கள் குடும்ப உறுப்பினருமல்ல.. இனி பணத்துக்காக வேலை பாருங்கள்!
- News
ஈரோடு கிழக்கில் தேர்தலே நடத்த கூடாது.. தடதடக்கும் தமிழருவி மணியன்.. காரணத்தை பாருங்க!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
Bigg Boss Tamil 6 Eviction: அடக்கொடுமையே.. அவருக்கா இந்த நிலைமை.. இந்த வாரம் வெளியேறப்போறது யாரு?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் 2 வாரத்தில் நிகழ்ச்சியே முடிவு பெற போகிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கோல்டன் டிக்கெட் வாங்கி இறுதி வாரத்துக்கு செல்லப் போவது யார் என்பது குறித்தும் இந்த வாரம் எவிக்ஷன் கார்டு வாங்கிட்டு வீட்டுக்குப் போகப் போறது யார் என்பது குறித்தும் இங்கே அலசுவோம்..
கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 6 இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அறிமுகம் இல்லாத போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்ற பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் பின்னர் அதன் வீரியத்தை இழந்து டிஆர்பியிலும் ரொம்பவே தடுமாறியது.
என்னை படிச்சா.. பாஸ் ஆக மாட்ட.. பக்காவாக போஸ் கொடுத்து பக்குவமாக சொன்ன பூனம் பாண்டே!

சீசன் 4 காப்பி
இந்த சீசன் அப்படியே சீசன் 4ன் காப்பி என்று ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். விக்ரமன் அப்படியே ஆரி அர்ஜுனன் ரூட்டை பின் பற்றி வருகிறார் என்றும் அசீம் பாலாஜி முருகதாஸ் வேலையை பார்த்து வருகிறார் என்றும் பிக் பாஸ் போட்டியாளர்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். அடுத்த சீசனிலாவது மாற்றம் இருந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து சர்வைவ் பண்ண முடியும் என்றும் இல்லையென்றால் சர்வைவர் தமிழ் போல ஒரு சீசனோட ஊத்தி மூட வேண்டியது தான் கலாய்த்து வருகின்றனர்.

அசீம் எஸ்கேப்
இந்த வாரம் நாமினேஷனில் அசீம் எஸ்கேப் ஆகி விட்டார். விக்ரமன், ஷிவின், ஏடிகே, கதிர், மைனா, ரச்சிதா மற்றும் அமுதவாணன் உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பிடித்துள்ளனர். இதிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற கருத்துக் கணிப்புகளை பார்த்தால் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகம் எதிர்பார்ப்பு
இந்த லிஸ்டில் எப்படியும் மைனா நந்தினி அல்லது ஏடிகே இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், செம ட்விஸ்ட்டாக இருவரும் அதிக ரசிகர்களை கவர்ந்து கருத்து கணிப்புகளில் முன்னிலையில் உள்ளனர்.

டேஞ்சர் ஜோனில் ரச்சிதா
ஷிவின், ரச்சிதா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். கடைசி வரை அமைதியாகவே ஆடி ஃபைனல்ஸ்க்கு போய் விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் ரச்சிதா கடந்த வாரம் ரெட் கார்டு வாங்காமல் எஸ்கேப் ஆன நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி உள்ளார்.

கடைசி இடத்தில் அமுது
ஜனனி வெளியேற நீ தான் காரணம் என அமுதவாணன் உடன் அசீம் சண்டை பிடித்த நிலையில், இந்த வாரம் அமுதவாணன் ஓட்டுக்கள் ரொம்பவே அதள பாதாளத்துக்கு சரிந்து இந்த வாரம் எவிக்ட் ஆகும் விளிம்பு நிலையில் இருக்கிறார் அமுதவாணன் என்கிற அதிர்ச்சி ட்விஸ்ட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஃபர்ஸ்ட் சேவ் ஆனாரே
கடந்த வாரம் கமல் சார் எபிசோடில் சனிக்கிழமையே முதல் நபராக சேவ் ஆனாரே அமுதவாணன் என்ன ஆச்சு என யோசிப்பதா? அல்லது பிக் பாஸ் டீம் சேவ் ஆர்டரை மாற்றி இந்த சீசனில் கொஞ்சமாச்சும் விறுவிறுப்பை கூட்டியுள்ளது என சந்தோஷப்படுவதா? என தெரியவில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்த வாரம் ரச்சிதா அல்லது அமுதவாணன் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவர் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.