பிக் பாஸ் 6: இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இவங்கதான் இருக்காங்க.. முதல் எவிக்‌ஷன் யாரா இருப்பாங்க?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் முதல் வாரத்தில் யாருமே எவிக்ட்டோ, வாக்கவுட்டோ செய்யப்படவில்லை.

கூடுதல் இணைப்பாக மைனா நந்தினி தான் வீட்டுக்குள் சென்றுள்ளார். ஏற்கனவே அத்தனை பேருக்கும் 2 டாய்லெட் தான் என்பதால், இந்த வாரத்தில் இருந்து ஆட்களை வீட்டுக்கு அனுப்பும் பணி ஜோராக ஆரம்பமாகிவிடும்.

இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் கூட வைங்க பிக் பாஸ் என கோரிக்கைகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து கிளம்பி வருகின்றன. இந்நிலையில், இந்த வாரம் யாரெல்லாம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர் என்றும் யார் வீட்டுக்குப் போக அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து இங்கே விரிவாக அலசுவோம்..

12 பேர் நாமினேட்

12 பேர் நாமினேட்

பிக் பாஸ் வீட்டில் உள்ள 12 பேர் நாமினேஷன் பட்டியலில் இந்த வாரம் இடம்பெற்றுள்ளனர். அசீம், ராம் ராமசாமி, தனலட்சுமி, ரச்சிதா, சாந்தி, குயின்ஸி, விக்ரமன், மகேஸ்வரி, ஆயிஷா, நிவாஷினி, சிவின் கணேஷ் மற்றும் ஷெரினா ஆகிய 12 பேர் பெயர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில், அசீம், ராம் ராமசாமி, விக்ரமன் என 3 ஆண் போட்டியாளர்களும் 8 பெண் போட்டியாளர்களும் ஒரு திருநங்கை போட்டியாளரும் அடக்கம். மக்கள் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்த தனலட்சுமி மற்றும் சிவின் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு ஓட்டு தான்

ஒரு ஓட்டு தான்

முதலில் ஒரு ஆள் 50 ஓட்டுக்கள் போடலாம் என இருந்தது. கடந்த சீசனில் 10 ஓட்டுக்களாக சுருங்க, தற்போது ஒரு நாளைக்கு ஒருத்தர் ஒரு ஓட்டு மட்டும் தான் போட முடியும் என்கிற நிலைமைக்கு இந்த சீசனில் பிக் பாஸ் டீமிடமே ஏகப்பட்ட மாற்றங்கள் காணப்படுகின்றன. நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லவும் அதுதான் காரணம் என்கின்றனர்.

டாப்பில் தனலட்சுமி

டாப்பில் தனலட்சுமி

ஜிபி முத்துவிடம் சண்டைப் போட்டு முதல் வாரத்திலேயே அவரை அழ வைத்த தனலட்சுமி தான் பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக வெளியேற வேண்டும் என ஜிபி முத்து ஆர்மியினர் போர்க்கொடி தூக்கிய நிலையில், தனலட்சுமிக்கு ஆதரவாக ஏகப்பட்ட பேர் சப்போர்ட் செய்து அவருக்கு ஓட்டுக்களை வாரிக் குவித்து வருகின்றனர். அதிகபட்ச ஓட்டுக்களுடன் அசீம் முதலிடத்திலும், ராம் ராமசாமி 2வது இடத்திலும், தனலட்சுமி டாப் 3வது இடத்திலும் கருத்துக் கணிப்பு வாக்குப் பதிவில் முன்னிலையில் உள்ளனர்.

டேஞ்சர் ஜோன்

டேஞ்சர் ஜோன்

ரச்சிதா, மகேஸ்வரி, ஆயிஷா, விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் 10 முதல் 5 சதவீதம் வரை வாக்குகளை பெற்று சேஃப் ஜோனிலேயே உள்ளனர். ஆனால், 2 சதவீதங்களுக்கும் கீழ் வாக்குகளை பெற்று குயின்ஸி, நிவாஷினி, ஷெரினா, சாந்தி மற்றும் சிவின் இதுவரை டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இந்த நிலை இன்னும் இரண்டு நாட்களில் எப்படியெல்லாம் மாறும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

முதல் எவிக்‌ஷன்

முதல் எவிக்‌ஷன்

உப்புமா கிண்டிப் போட்டு உப்புமா மம்மி என பெயர் எடுத்த நடன இயக்குநர் சாந்தி தான் இந்த பட்டியலிலேயே மிகவும் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருக்கிறார். அவருக்கு மிக அருகிலேயே திருநங்கை போட்டியாளர் சிவின் குறைவான ஓட்டுக்களுடன் விளிம்பில் உள்ளார். இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் 2 நாட்களில் யார் வெளியே போகப் போகிறார் என்பது உறுதியாகி விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X