பிக் பாஸ் 6: ட்விஸ்ட்டா.. இல்லை டைட்டில் போச்சா.. சனிக்கிழமையே சேவ் ஆகாத விக்ரமன்.. என்ன ஆச்சு?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனின் டைட்டிலையே விக்ரமன் தான் வெல்லப் போகிறார். அவர் தான் முதல் நபராக சேவ் ஆகி வருகிறார் என விக்ரமன் ஆர்மியினர் கெத்துக் காட்டி வந்த நிலையில், கடைசி நேரத்தில் ட்விஸ்ட்டாக இந்த வாரம் விக்ரமன் முதல் நபராக இல்லை சனிக்கிழமை எபிசோடிலேயே சேவ் ஆகவில்லை.

சேவ் ஆர்டரை வைத்தே போட்டியாளர்கள் வெற்றியை தெரிந்து கொண்டு அதன் பிறகு தங்களது விளையாட்டை விளையாடாமல் மிக்சர் திங்க ஆரம்பித்து விடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு கடந்த சில சீசன்களாகவே உள்ளன.

இந்நிலையில், இந்த சீசனில் அதை மாற்ற பிக்பாஸ் டீம் முயல்கிறதா? அல்லது மக்களின் ஓட்டுக்கள் அடிப்படையிலேயே சேவ் செய்துள்ளாரா கமல் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது.

டாப் 4ல் கூட இல்லை

டாப் 4ல் கூட இல்லை

பிக் பாஸ் டைட்டில் வின்னர் என விக்ரமன் ஆர்மியினர் கனவு கண்டதெல்லாம் சுக்கு நூறாக இந்த வாரம் கமல் சார் சேவிங் ஆர்டரில் உடைத்து விட்டாரே என அசீம் ஆர்மியினர் பூமர் விக்ரமன் போச்சா எல்லாம் போச்சா என ட்ரோல் செய்து பங்கம் செய்து வருகின்றனர். டாப் 4 இடங்களில் கூட இல்லாமல் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுடன் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், விக்ரமன் செல்வாக்கும் சரிந்து விட்டது.

அமுதவாணன் தான் வின்னரா

அமுதவாணன் தான் வின்னரா

இந்த வாரம் ரச்சிதாவை தவிர்த்து அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இடம் பிடித்தனர். இந்த வாரம் சேவ் ஆகும் ஆர்டரை வைத்துத் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முடிவு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஆளாக சேவ் ஆனது அமுதவாணன் தான். அப்போது விஜய் டிவியின் ப்ராடக்ட் ஆன அமுதவாணனுக்குத்தான் டைட்டிலை வழங்க போகின்றனரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஷிவின் சேவ்

ஷிவின் சேவ்

அமுதவாணனை தொடர்ந்து சனிக்கிழமை எபிசோடிலேயே வழக்கம் போல 2வதாக ஷிவின் சேவ் ஆகி உள்ளார். .ரன்னர் அப் கிடைக்குமா? அல்லது டைட்டிலை ஷிவின் தட்டிச் செல்வாரா? கடைசி நேர ட்விஸ்ட் இருக்குமா என ஏகப்பட்ட கேள்விகளை இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து கதிர்

அடுத்து கதிர்

அமுதவாணன், ஷிவினை தொடர்ந்து அமைதியே உருவாக அமர்ந்திருக்கும் கதிர் 3வதாக சேவ் ஆகி உள்ளார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் பலமுறை கதிரையும் வெளியே அனுப்ப ஹவுஸ்மேட்ஸ் திட்டமிட்டுள்ள நிலையில், ரொம்பவே கூலாக தனது கோபத்தை வெளிக்காட்டாமல் விளையாடி வந்த கதிருக்கு இந்த வாரம் காதலி வந்த யோகமா என்னவோ தெரியவில்லை 3வதாக சேவ் ஆகி விட்டார்.

4வது ஏடிகே

4வது ஏடிகே

4வதாக கூட விக்ரமன் மற்றும் அசீம் போன்ற டஃப் போட்டியாளர்கள் இந்த வாரம் சேவ் ஆகவில்லை. ஏடிகே எல்லாம் எதுக்கு இருக்காரு என கலாய்த்து வந்த நிலையில், இந்த வாரம் கெத்தாக 4வதாக சேவ் ஆகி உள்ளார் ஏடிகே. அதிலும், கதிர் போல அவர் நடித்து காட்டியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

டேஞ்சர் ஜோனில் விக்ரமன், அசீம்

டேஞ்சர் ஜோனில் விக்ரமன், அசீம்

வின்னர், ரன்னர் அப் என சுற்றித் திரிந்த அசீம் மற்றும் விக்ரமன் ஓவராக பிஆர் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்டு இந்த நிகழ்ச்சியில் ஓட்டுக்களை வாங்கி வருவதாக புகார்கள் குவிந்த நிலையில், திடீரென அவர்கள் இருவருமே டேஞ்சர் ஜோனுக்கு சன் டே எபிசோடு வரை வந்து சேர்ந்துள்ளனர். ஞாயிறு எபிசோடில் முதல் நபராக விக்ரமன் சேவ் ஆவார் என்றும் கடைசி மூன்று பேராக அசீம், மைனா மற்றும் மணிகண்டன் அமர்ந்து இருக்க மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X