Bigg Boss: பெண்களிடம் விரட்டி விரட்டி முத்தம் கேட்கும் வாட்டர்மெலன் திவாகர்.. எச்சரித்த ஹவுஸ் மேட்ஸ்

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ஐ நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல பல முயற்சிகளை பிக்பாஸ் தரப்பில் முயற்சிகள் செய்தாலும், ஸாரி பிஸ்பாஸ் அதுக்கு வேணா நீங்க வைல்ட் கார்டுல ஆட்களை பிடுச்சுக்காங்க, நாங்க பெஞ்ச் தேய்க்க தான் வந்தோம் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போட்டியாளர்கள். இப்படி இருக்கும் போது ரசிகர்களை கவருகிறேன், என்று வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் செய்து கொண்டு இருக்கும் செயல்கள் அதிருப்தியை தான் ஏற்படுத்துகிறது. இப்படி இருக்கும்போது, அவர் சக பெண் போட்டியாளர்களிடம் முத்தம் கேட்டுக் கொண்டு இருப்பதை சுட்டிக் காட்டி, சபரி, எஃப்.ஜே. மற்றும் விக்கல்ஸ் விக்ரம் என மூவரும் அறிவுரை கூறுகிறார்கள்.

அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், பெண் போட்டியாளரான அரோராவிடம் எப்போதும் கொஞ்சம் ஓவராத்தான் நடந்து கொள்கிறார் என்ற விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதாவது, அரோராவை பார்த்து தனது காதலி என்று கூறுவதும், அரோராவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறுவதும் என்று பல முறை இது போல பேசியுள்ளார். கடந்த வாரத்தில் கூட அரோராவிற்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டு அரோராவின் உடம்பெல்லாம் வாசனையாக இருக்கிறது என்று பேசுகிறார்.

Bigg Boss Tamil 9 Diwakar Ask to Kisses To Lady Contestants Its Going To Big Thing Into Housemates

அதேபோல் பார்வதியிடம் தங்கை என்று பேசிக் கொண்டு இருந்தவர், கடந்த வாரத்தில் திடீரென காதலிக்கலாமா, யாரோ திருமணம் செய்து கொள்வதற்கு நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று எல்லாம் பேசி வருகிறார். இதை பார்வதி அவரது ஸ்டைலில் பதிலடிகளைக் கொடுத்து வருகிறார். ஆனால் திவாகரின் உடல்மொழிகள் அவர் ஏதோ விளையாட்டுக்காக பேசுவது போலத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் பரவலாகவே உள்ளது.

காலி ஆகிவிடுவாய்: இப்படி இருக்கையில், சக போட்டியாளர்களான எஃப்.ஜே, சபரி மற்றும் விக்கல்ஸ் விக்ரம் என மூவரும் இணைந்து, திவாகருக்கு அறிவுரை வழங்குகிறார்கள். அதாவது, " அண்ணா, இந்த முத்தம் கொடுப்பது கேட்பதை தயவு செய்து விட்டுவிடுங்கள். இதை எல்லோருமே தனித்தனியாக சொல்கிறார்கள். நான்கு பெண்கள் சேர்ந்து சொன்னால் உனது கெரியர் காலி, உனது வாழ்க்கை காலி, இத்தனை நாட்களாக நீ சம்பாதித்து வைத்த பெயர் காலி.

முத்தம் கேட்காதே: அண்ணா இது விளையாட்டு கிடையவே கிடையாது. இப்படி பண்ணாதீங்கனு அமைதியாக பேசக் கூடியவர்கள் என்னை ஏன் அப்படி கேட்டீங்க என்று கோபமாக கேட்டால் நீங்க காலி. தயவு செய்து இனிமேல் பெண்களை தொட்டு பேசுவதோ, முத்தம் கேட்பதோ செய்ய வேண்டாம். உனக்கு வேற இமேஜ் இருக்கிறது. இந்த ஒரு வாரம் உனக்கு வேற மாதிரி இருக்கப் போகிறாய். அதை மாற்றப்போகிறோம், சரியா" என்று சொல்லுகிறார் சபரி.

Bigg Boss Tamil 9 Diwakar Ask to Kisses To Lady Contestants Its Going To Big Thing Into Housemates

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: இவர்கள் இப்படி பேசுவது தொடர்பான வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் சிலர், இவருக்கு ஏன் ரெட் கார்டு கொடுக்க கூடாது என்று பேசி வருகிறார்கள். அதேபோல், சீசன் மூன்றில் சரவணன் அவரது இளமைக் காலத்தில் பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டதை அவர் சொன்ன பின்னர், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் திவாகர் மீது பிக்பாஸ் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X