பிக்பாஸில் ரெட் கார்டு.. கமலுக்கு பிடிக்கல.. இத்தனை வருடங்கள் கழித்து பிரதீப் ஆண்டனி இப்படி சொல்றாரே
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நடந்துவருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடுமையான எதிர்வினைகளை சந்தித்துவருகிறது. போட்டியாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு வீட்டுக்குள் நடந்துகொள்வதால் ஏற்பாட்டாளர்களும், தொகுப்பாளரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். பிக்பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசன் விவாதத்தை கிளப்பினாலும் ஏழாவது சீசன் இதைவிட சென்சேஷனலாக இருந்தது. காரணம் பிரதீப் ஆண்டனி.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் பலரும் பார்த்து ரசிக்கிறார்கள். தற்போது ஒன்பதாவது சீசன் நடந்துவருகிறது. கடந்த சீசன் போலவே விஜய் சேதுபதி இதனை தொகுத்து வழங்குகிறார். கலந்துகொண்ட போட்டியாளர்களில் இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். அதேபோல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிரஜின் பத்மநாபன், திவ்யா கணேஷ், அமித் பார்கவ், சாண்ட்ரா ஏமி ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் 7: இந்த சீசன் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டியாளர்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் விஜய் சேதுபதியை டென்ஷனின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. இருப்பினும் எப்படியோ அவர் சமாளித்துக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ் 9 பேசுபொருளானதைவிடவும் பிக்பாஸ் 7 தமிழ் ரசிகர்களிடம் பெரிய சென்சேஷனலாக இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

என்ன காரணம்?: அந்த சென்சேஷனலுக்கு ஒரே காரணம் பிரதீப் ஆண்டனிதான். அந்த சீசனில் அவரது கேம் பலராலும் ரசிக்கப்பட்டது. கண்டிப்பாக டைட்டில் வின்னராக மாறுவார் என்றே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் சக போட்டியாளர்கள் பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்ல; அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் பலருக்கும் வெறி ஏத்தியது.
கூல் பிரதீப் ஆண்டனி: ஆனால் பிரதீப் ஆண்டனியோ செம கூலாகவே இருந்தார். வீட்டிலிருந்து வெளியே வந்து மறைமுகமாக கமல்ஹாசனை தாக்கி ட்வீட்டெல்லாம் போட்டார். இது ஒருபக்கம் இருக்க அவரை மீண்டும் வீட்டுக்குள் விட வேண்டும் என்று ரசிகர்களுக்கு அவருக்கு சப்போர்ட்டாக சோஷியல் மீடியாக்களில் கருத்தெல்லாம் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்போது இருந்த தனது மனநிலைமை பற்றி ஓபனாக பேசியிருக்கிறார் பிரதீப்.
பிரதீப் ஆண்டனியின் பேட்டி: விசித்திராவிடம் பேசிய அவர், "பிக்பாஸில் எனக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டபோது எனக்கு அது மோசமான நிலைமையாகத்தான் இருந்தது. ஆனால் நல்லவேளையாக நான் வெளியே வந்த பிறகு ஃபீல் செய்யக்கூடிய நிலைமை வரவில்லை. எனக்காக நிறைய பேர் ஃபீல் செய்துகொண்டிருந்தார்கள். நிறைய பேர் அழுகவும் செய்தர்கள். இதனால் என்ன நடந்தது என்பது பற்றி நான் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. நான் நல்லவன் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது என்பதை பார்க்கையில் சந்தோஷமாகத்தான் இருந்தது. அதேசமயம் எனக்கு கமல் சாரை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவருக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டது என்பதை நினைத்துதான் வருத்தம்" என்றார்.


Click it and Unblock the Notifications











