டான்ஸ் டாஸ்க் கொடுக்கும் பிக்பாஸ்...ஆட தயாராகும் போட்டியாளர்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தை எட்டி உள்ளது. கமல் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். மீதமுள்ள 14 பேர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்று வருகிறார்கள்.

ஆரம்பத்தில் ஜாலியாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில், பஞ்சதந்திரம் டாஸ்கிற்கு பிறகு பல மோதல்கள், குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள் நடைபெற்று வருகிறது. இவர்களில் யார் செய்வது என சோஷியல் மீடியாக்களில் பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது.

விவாதமான தாமரை விவகாரம்

விவாதமான தாமரை விவகாரம்

அப்படி கடந்த வாரம் தாமரை உடை மாற்றிக் கொண்டிருந்த போது பாவனியின் உதவியுடன் சுருதி, தாமரையின் காயினை திருடினார். இதில் யார் செய்தது நியாயம் என பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டுமல்ல, சோஷியல் மீடியாவிலும் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் கமல் இதை சுமூகமாக முடித்து, பிரச்சனையை ஒரு வழியாக முடித்து வைத்தார்.

வச்சு செய்யும் நிரூப்

வச்சு செய்யும் நிரூப்

வாரத்தின் முதல் நாளான நேற்று கேப்டனை தேர்வு செய்யும் போட்டி, நாமினேஷன் ஆகியன நடத்தப்பட்டன. இந்நிலையில் நிகழ்ச்சியின் 30 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் முதல் ப்ரோமோவில், நிரூப் பெட்ரூம் ஏரியாவை பயன்படுத்த 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி கொடுக்கிறார். இதனால் போட்டியாளர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

நிரூப் கொடுக்கும் தண்டனை

நிரூப் கொடுக்கும் தண்டனை

தான் சொல்வதை கேட்காத பாவனி மற்றும் சுருதிக்கு பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் சாப்பிடும் தண்டனையை கொடுக்கிறார். இதனை பார்த்து மிரண்டு போய் இருக்கிறார் பிரியங்கா. ஆனால் நிரூப் நன்றாக வச்சு செய்வதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். இருந்தாலும் ஒரு சிலர், நிரூப் பெண்களை மட்டுமே டார்கெட் செய்வது போல் தெரிகிறது என கமெண்ட் செய்துள்ளனர்.

சினிமா சினிமா டாஸ்க்

சினிமா சினிமா டாஸ்க்

இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிளாஸ்மா டிவி முன் நின்று, டாஸ்க் புக்கை வாசிக்கிறார் ராஜு. அடுத்த டாஸ்க் பெயர் சினிமா சினிமா. இதில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு கேரக்டர் கொடுக்கப்படும். அவர்களுக்கான பாடல் ஒலிக்கும் போது ஓடி வந்து பிளாஸ்மா டிவி முன் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஏறி நடனமாட வேண்டும் என சொல்கிறார்.

நடனத்திற்கு தயார்

நடனத்திற்கு தயார்

இதனால் போட்டியாளர்கள் மேக்அப் போட்டுக் கொண்டு, வண்ணவண்ணமாக ஜொலிக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில் தங்களுக்கான பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். தீபாவளி கொண்டாட்டத்திற்காக இந்த டாஸ்க் வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

எல்லா சீசனிலும் இதுதானா

எல்லா சீசனிலும் இதுதானா

இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு ரசிகர்கள் பலர், அவங்க ஆட, அதை நாம என்ஜாய் பண்ண ஒரே கூத்தாய் இருக்கும். இந்த டாஸ்க் மட்டும் எல்லா சீசனில் கொடுக்கப்படுகிறதே. காயின் வச்சு நிரூப் நல்லா சம்பவம் பண்ணுறார். நிரூப் நிறைய கன்டென்ட் கொடுப்பாருன்னு நினைக்கிறேன் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X